Queen Elizabeth II : மறைந்த ராணியின் தனிபட்ட சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இதில் பெரும்பாலான சொத்துகள் இளவரசர் சார்லஸ் அரியணை ஏறும்போது அவருக்கு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சொத்துகளுக்கு இங்கிலாந்து சட்டத்தின் படி வரி விலக்கும் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Queen Elizabeth II
Queen Elizabeth IITwitter
Published on

உலகம் முழுக்க இங்கிலாந்து மகாராணியாக அறியப்படும் இரண்டாம் எலிசபெத் தான், எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி. 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி லண்டன் நகரத்தில் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ட்சர் என்கிற இயற்பெயரோடு பிறந்தார் இரண்டாம் எலிசபெத் மகாராணி.

1947ஆம் ஆண்டு, கிரீஸ் மற்றும் டென்மார்கின் இளவரசர் பிலிப்பை திருமணம் செய்து கொண்டார். 2021ஆம் ஆண்டு இளவரசர் பிலிப் இறக்கும் வரை அவரோடு வாழ்ந்தார். இத்தம்பதிகளுக்கு 4 குழந்தைகள்.

1952ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலமான பின், எலிசபெத் மகாராணியானார். பிரிட்டன் வரலாற்றில், நீண்ட நாட்களாக ஆட்சி செய்தவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் அரசி இரண்டாம் எலிசபெத் தான்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனின் மகாராணியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டாம் இலிசபெத் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைக் காணலாம்!

வணிக சாம்ராஜ்ஜியம்

கிங் ஜார்ஜ் VI மற்றும் இளவரசர் பிலிப் போன்ற பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர்கள் நிறுவனம் ஒரு காலத்தில் குடும்ப வணிகத்திற்காக தொடங்கப்பட்டது.

மொனார்கி பி எல் சி என்று அழைக்கப்படும் நிறுவனம் ராணி குடும்பத்தினால் நடத்தப்படும் ஒரு வணிக சாம்ராஜ்ஜியமாகும்.

போர்ப்ஸ் அறிக்கையின் படி, 2021ம் ஆண்டில் கிட்டதட்ட 28 பில்லியன் டாலர் ரியல் எஸ்டேட் சொத்துகளை வைத்திருக்கிறது. ஆனால் இதனை விற்க முடியாதாம்!

Queen Elizabeth II
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் : அ முதல் ஃ வரை முழுமையான தகவல்கள்

அசையா சொத்துக்கள்

கிரவுன் எஸ்டேட்: $19.5 பில்லியன்

பக்கிங்காம் அரண்மனை: $4.9 பில்லியன்

தி டச்சி ஆஃப் கார்ன்வால்: $1.3 பில்லியன்

தி டச்சி ஆஃப் லான்காஸ்டர்: $748 மில்லியன்

கென்சிங்டன் அரண்மனை: $630 மில்லியன்

ஸ்காட்லாந்தின் கிரவுன் எஸ்டேட்: $592 மில்லியன்

அரச குடும்பம் இதன் மூலம் வணிக ரீதியாக லாபம் ஈட்ட முடியாது என்றாலும், பொருளாதாரத்தை அதிகப்படுத்துவதே அவரிகளின் நோக்கமாக உள்ளது.

Queen Elizabeth II
எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!

ராணி எலிசபெத் தனிபட்ட சொத்து

ராணி எலிசபெத்துக்கு தனிப்பட்ட முறையில் ஓவியங்கள், ஒரு ராஜ முத்திரை, நகைகள், குதிரைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் ஆகியவை உள்ளன.

எலிசபத் இறக்கும்போது அவரது சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலர்கள் ஆகும். இதில் விலையுயர்ந்த ஓவிய படைப்புகள், நகைகள், ரியல் எஸ்டேட் சொத்துகள், பல முதலீடுகள் என பலவும் அடங்கும்.

இதில் பெரும்பாலான சொத்துகள் இளவரசர் சார்லஸ் அரியணை ஏறும்போது அவருக்கு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சொத்துகளுக்கு இங்கிலாந்து சட்டத்தின் படி வரி விலக்கும் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Queen Elizabeth II
Queen Elizabeth II : "ராணி எலிசபெத் முத்திரை பதித்தவர்” - உலக தலைவர்கள் இரங்கல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com