எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!

இந்த அரச தம்பதியினர் 1939ம் ஆண்டு பிரிட்டன் ராயல் கடற்படை கல்லூரியில் சந்தித்துக்கொண்டனர். அப்போது எலிசபெத்துக்கு வயது 13 மட்டுமே. இளவரசர் பிலிப்க்கு 19 வயது. முதல் சந்திப்பிலேயே காதல் என்றும் இந்த கதையை சொல்லலாம். ஆனால்...
எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!
எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!Twitter

காதல் எப்போதுமே நமக்கு புத்துணர்வூட்டக் கூடிய ஒன்றாக இருக்கிறது. பல உணர்வுகளை நினைவூட்டக்கூடியதாக, ஒரு மாயாஜாலமாக இருக்கும் காதல் மிக கடினமான பாதையைக் கூட கடக்க வேண்டியிருக்கிறது.

சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல சமூகத்தின் ஒவ்வொரு தரப்பிலும் காதல் பல சவால்களைக் கடக்கும் சூழல் தான் இருக்கிறது. என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும் அவற்றை மறக்கச் செய்து மனதை பூரிக்க வைப்பது தான் காதலின் பலம். அப்படி ஒரு வலிமையான காதல் கதைதான் ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப்பின் கதை.

கடந்த 2021 ஏப்ரலில் இளவரசர் பிலிப் மறைந்தார். 17 மாதங்கள் கழித்து தனது 96வது வயதில் ராணி எலிசபெத்தும் மறைந்துள்ளார். இந்த தம்பதியின் காதல் கதை 7 தாசாப்தங்கள் கடந்தது.

பதின் பருவ நட்பு

இந்த அரச தம்பதியினர் 1939ம் ஆண்டு பிரிட்டன் ராயல் கடற்படை கல்லூரியில் சந்தித்துக்கொண்டனர். அப்போது எலிசபெத்துக்கு வயது 13 மட்டுமே. இளவரசர் பிலிப்க்கு 19 வயது. முதல் சந்திப்பிலேயே காதல் என்றும் இந்த கதையை சொல்லலாம். ஆனால், இருவரும் நண்பர்களாக பழக தொடங்கியிருக்கின்றனர்.

இந்த முதல் சந்திப்புக்கு முன்னர் எலிசபெத் 7 வயதாகவும் பிலிப் 12 வயதாகவும் இருந்த போது ஒரு கல்யாணத்தில் சந்தித்திருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளாக இருந்தபோதும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டனர்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருவரும் கடிதம் மூலம் உரையாடத் தொடங்கியிருக்கின்றனர். அப்போது தான் இருவர் மனதிலும் காதல் பிறந்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் இருவரும் பங்குபெற்றனர். போர் இருவரையும் பிரித்து வைத்தாலும் மனதளவில் அவர்கள் இணைந்தே இருந்தனர்.

1943ம் ஆண்டு எலிசபெத் ராணியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார் பிலிப். இது குறித்து அவர்களின் பெற்றோர்களிடம் 1946ம் ஆண்டு எடுத்துரைத்தனர். இரு வீட்டு சம்மதங்களும் கிடைத்தன. ஆனால் சில பிரச்னைகளும் இருந்தன.

1946ல் இருவருக்கும் இரகசியமாக திருமண நிச்சயம் நடந்தது. 1947ல் உலகப் போர் முடிந்த கொஞ்ச காலத்திலேயே 2000 விருந்தினர்கள் முன்னிலையில் திருமணமும் நடைபெற்றது.

அரச பட்டத்தை துறந்த பிலிப்

இளவரசர் பிலிப் பிறக்கும் போதே டென்மார்க், கிரீஸ் ஆகிய நாடுகளின் இளவரசர். ஏதேனும் ஒரு நாட்டின் அரசராக அவருக்கு நிச்சயம் வாய்ப்புகள் இருந்தது.

ஆனால் இங்கிலாந்து மன்னர் 6ம் ஜார்ஜ்க்கு இரண்டு பெண் குழந்தைகள். எலிசபெத் தான் அடித்த வாரிசாக இருந்தார். இதனால் பிலிப் தனது அரச பட்டங்களைத் துறக்க மன்னர் கேட்டுக்கொண்டார்.

திருமண அறிவிப்பு வெளியாகும் முன்னர் தன் டேனிஷ் மற்றும் கிரேக்க அரசப்பட்டங்களைத் துறந்தார் பிலிப். அரச குடும்ப பெயரையும் துறைந்த அவர், தன் தாய்வழி தாத்தாவின் மவுண்ட் பேட்டன் என்ற பெயரை ஏற்றுக்கொண்டு எலிசபெத்தை திருமணம் செய்கொண்டார்.

சிறுவயது முதல் இளவரசர் அந்தஸ்துடன் இருந்த பிலிப் சாதாரண பிரிட்டிஷ் குடிமகனாக எலிசபெத்தை ஏற்றுக்கொண்டார்.

பின்னாளில் எலிசபெத் ராணியாக பதவியேற்ற பின்னர் டியூக் ஆஃப் எட்டின் பெர்க் என்ற பட்டத்தை பிலிப்புக்கு வழங்கினார்.

எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் : அ முதல் ஃ வரை முழுமையான தகவல்கள்

திருமண வாழ்வு

1948ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் சார்லஸ் பிறந்தார். ராணியின் மறைவுக்குப் பிறகு சார்லஸ் தான் அரசராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலிக்கும் காலத்திலிருந்தே இந்த தம்பதி குதிரை ஓட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். இணைந்து நடனமாடுவது, ஊர் சுற்றுவது என சாதாரண தம்பதிகளாகவே அவர்கள் வாழ்ந்தனர். ஆனால் 1952ம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு எலிசபெத் மகாராணியாக பதவியேற்க வேண்டியிருந்தது.

இதற்கிடையில் 1950ல் இவர்களுக்கு இளவரசி அனெ பிறந்தார். பின்னர் பிரின்ஸ் ஆண்ட்ரிவ், பிரின்ஸ் எட்வர்ட் பிறந்தனர்.

மறைவு

கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம் திருமண வாழ்வில் இருந்த அவர்களை காலம் தான் பிரித்தது. 99 வயதான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு இயற்கை ஏய்தினார்.

96 வயதான எலிசபெத் மகாராணி உடல்நலக் குறைவால் செப்டம்பர் 8, 2022ல் இறந்தார்.

எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!
ராணி எலிசபெத் II காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com