24 பிப்ரவரி அதிகாலை முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தது. உக்ரைனின் விமான போக்குவரத்து, ராணுவத் தளவாடங்கள் என முன்னேறிச் சென்றது ரஷ்ய இராணுவம். இன்று உக்ரைன் தலைநகரை நெருங்கிவிட்டது ரஷ்ய இராணுவம். கிழக்கு, வடக்கு மற்றும் தென் திசைகளிலிருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உக்ரைன் பெரும் பாதிப்படைந்துள்ளது.
உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன் முதலிய எந்த நாடும் முன் வரவில்லை. 130க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்ய இராணுவம் கொன்றுள்ளதாக உக்ரைன் அரசு இன்று காலை அறிவித்தது. உக்ரைனின் பதில் தாக்குதலில் ரஷ்ய இராணுவமும் சிறிய அளவிலான இழப்புகளைச் சந்தித்தது. தங்களுக்கு எந்த நாடும் உதவ முன்வரவில்லை என்று உக்ரைன் அதிபர் இன்று உருக்கமாகப் பேசினார்.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அடக்குமுறையிலிருந்து உக்ரைனை மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என ரஷிய அமைச்சர் செர்ஜி லாவ்ரேவ் தெரிவித்துள்ளார்.