சோவியத் யூனியனின் வீழ்ச்சி : தனது சுதந்திரத்தை அறிவித்த உக்ரைன் | பாகம் 2

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகே குவைத் இராக் போர், பின்லேடன் தாக்குதலுக்கு பின்னான ஈராக் ஆக்கிரமிப்பு போர், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு போர் போன்றவை நடைபெற்றன.
சோவியத் இராணுவம்

சோவியத் இராணுவம்

Twitter

கோர்பச்சேவ் கொண்டு வந்த பெரஸ்ட்ரோயிகா, கிளாஸ்நாத் இரண்டு சீர்திருத்தங்களும் பழைய சோவியத் யூனியனின் பிரச்சினைகளைத் தீர்த்ததா என்றால் இல்லை. இந்த சீர்திருத்தங்கள் பலனை உடனடியாகத் தரவில்லை. அவற்றின் பலன்கள் தாமதமாகத்தான் வரும் என்பதால் அப்போது இருந்த பிரச்சினைகள் குறையவில்லை.

சோவியத் யூனியனின் ஒரு கட்சி ஆட்சியிலிருந்த அதிகார வர்க்கப் பொருளாதாரத்தைச் சந்தை பொருளாதாரம் திடீரென ஒரிரவில் மாற்றி விடவில்லை. சந்தை பொருளாதாரம் முதிர்ச்சியடைய அதிக காலம் வேண்டும் என்பதால் அது வெற்றியடைவில்லை.

சோவியத் இராணுவம்

தேசாந்திரியின் தடங்கள் : ஏன் சுவீடன், நார்வே சொர்க்கபுரியாக இருக்கிறது? | பகுதி 1

கோர்பச்சேவ் தனது பதவி விலகும் விழாவில் இந்தப் பிரச்சனையை, புதிய முறை செயல்படத் துவங்குவதற்கு முன்பே பழைய முறை சரிந்து போனது என்று சுருக்கமாக கூறினார்.

ரேஷன் பற்றாக்குறை, அந்தப் பற்றாக்குறை பொருட்களைப் பெறுவதற்கும் முடிவில்லாத வரிசைகள் போன்றவை கோர்பச்சேவின் கொள்கைகள் விளைவாக ஏற்பட்டதென மக்கள் புரிந்து கொண்டார்கள். ஏற்கனவே இருந்ததும் போய் விட்ட நிலைதான். இதனால் மக்கள் அவரது அரசாங்கத்தின் மீது மேலும் மேலும் விரக்தியடைந்தனர்.

சோவியத் யூனியன் கொடி

சோவியத் யூனியன் கொடி

Twitter

1989 புரட்சிகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி

சிறந்த சோவியத் பொருளாதாரம் சாத்தியமாவது உலகின் பிற பகுதிகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடன் சிறந்த உறவுகளைக் கொண்டிருப்பதைச் சார்ந்துள்ளது என்று கோர்பச்சேவ் நம்பினார். அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், சோவியத் ஒன்றியத்தைத் தீய பேரரசு என்று அழைத்தார். மேலும் உலகெங்கிலும் இருந்த அமெரிக்க இராணுவக் கட்டமைப்பை விரிவு படுத்தினார். இருந்த போதிலும் கோர்பச்சேவ் ஆயுதப் போட்டியிலிருந்து வெளியேறுவதாக உறுதியளித்தார்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் துருப்புக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அங்கு அவர்கள் 1979 முதல் போரில் ஈடுபட்டு வந்தனர். ஒரு வகையில் ஆப்கானிஸ்தான் பிரச்சினை அமெரிக்காவிற்கு வியட்நாமில் ஏற்பட்ட தோல்வி போல சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டது. இதனால் பொருளாதாரம் சரிந்து போகுமளவு இராணுவ செலவு அதிகரித்தது. மேலும் கிழக்கு ஐரோப்பாவின் வார்சா ஒப்பந்த நாடுகளில் சோவியத் இராணுவத்தின் இருப்பை கோர்ப்பச்சேவ் குறைத்தார்.

சோவியத் இராணுவம்

ரஷ்யா - உக்ரேன் இடையே போர்ச் சூழலுக்கான காரணம் என்ன? அமெரிக்கா தலையிடுவது ஏன்?

இப்படி உலக அரசியலிலிருந்து சோவியத் யூனியன் விலகிக் கொண்டது முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியது. முதலில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்த கம்யூனிச அரசுகள் உதிர்ந்து நொறுங்கத் துவங்கின. இப்படி நடக்குமென முன்கூட்டியே கோர்பச்சேவும் கூறியிருந்தார்.

முதல் புரட்சி 1989-இல் போலந்தில் நடந்தது. அங்கு சாலிடாரிட்டி இயக்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் அல்லாத தொழிற்சங்கவாதிகள் சுதந்திரமான தேர்தல்களுக்காகக் கம்யூனிஸ்ட் அரசிடம் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றனர். இது கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் அமைதிப் புரட்சியைத் தூண்டியது. நவம்பர் மாதம் மேற்கு ஜெர்மனியையும், கிழக்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் இடிந்து விழுந்தது.

அதே மாதத்தில் செக்கோஸ்லோவாக்கியாவில் நடந்த “வெல்வெட் புரட்சி” அந்நாட்டின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைக் கவிழ்த்தது. அதே நேரத்தில் இந்தப் புரட்சி எல்லா இடங்களிலும் அமைதியாக நடக்கவில்லை. ருமேனியாவின் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியான நிக்கோலே சௌசெஸ்கு மற்றும் அவரது மனைவி இருவரும் கலகம் செய்த இராணுவத்தால் தூக்கிலிடப்பட்டனர்.

சோவியத் யூனியன்

சோவியத் யூனியன்

Twitter

சோவியத் யூனியனில் வீழ்ச்சி

கிழக்கு ஐரோப்பாவில் நடந்த இந்த புரட்சிகர மாற்றங்கள் சோவியத் யூனியனையும் பாதிக்கத் துவங்கியது. மோசமான பொருளாதாரமும், சர்வாதிகார அரசியலை கைவிட்ட கோர்பச்சேவின் அணுகுமுறையும் சேர்ந்து சோவியத் யூனியனில் இருந்த குடியரசுகளில் சுதந்திரத்திற்கான இயக்கத்தையும் கலகத்தையும் தூண்டி விட்டது.

பால்டிக் நாடுகள் (எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் லாட்வியா) ஒவ்வொன்றாக, மாஸ்கோவிலிருந்து பிரிந்து தங்கள் சுதந்திரத்தை அறிவித்தன.

ஆகஸ்ட் 18, 1991 அன்று, இராணுவத்திலும் அரசாங்கத்திலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் கோர்பச்சேவை வீட்டுக் காவலில் வைத்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தியோக பூர்வ காரணம், "உடல்நலக் காரணங்களுக்காக அவர் ஜனாதிபதியாக வழிநடத்த இயலாமை". இது உண்மை இல்லை என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். கோர்ப்சேவிற்கு எதிரான இராணுவ சதித் தலைவர்கள் அவசர நிலையை அறிவித்தனர்.

சதித் தலைவர்களின் உத்தரவுப் படி இராணுவம் மாஸ்கோவிற்குச் சென்றது. ஆனால் அவர்களது டாங்கிகள் மக்களின் மனிதச் சங்கிலிகளால் எதிர்கொள்ளப்பட்டன. மேலும் ரஷ்யப் பாராளுமன்றத்தைப் பாதுகாக்க மக்கள் ஆங்காங்கே தடுப்புக்களை உருவாக்கினர்.

போரிஸ் யெல்ஸ்டின்

போரிஸ் யெல்ஸ்டின்

Twitter

அப்போது நாடாளுமன்றத் தலைவராக இருந்த போரிஸ் யெல்ஸ்டின், இராணுவ பீரங்கி ஒன்றின் மேல் நின்று சுற்றியிருந்த மக்களைத் திரட்டினார். மூன்று நாட்களுக்குப் பிறகு சதித்தலைவர்களின் ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியடைந்தது.

டிசம்பர் 8-ம் தேதி புதிதாய் சுதந்திரமடைந்த அதிபரான கோர்பச்சேவ் மின்ஸ்க் நகருக்குச் சென்றார். அங்கு அவர் பெலாரஸ் மற்றும் உக்ரைன் குடியரசுத் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களோடு பழைய சோவியத் யூனினைக் கலைத்து விட்டு புதிதாக காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தில் சர்வதேச மற்றும் புவிசார் அரசியல் யதார்த்தத்தின் ஒரு பொருளாக சோவியத் யூனியன் இல்லை என்று கூறப்பட்டது.

சில வாரங்களுக்குப் பிறகு, பெலாரஸ் மற்றும் உக்ரைனைத் தொடர்ந்து மீதமுள்ள ஒன்பது குடியரசுகளில் எட்டு குடியரசுகள், இன்றைய கஜகஸ்தானில் உள்ள அல்மா-அட்டா நகரில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு சோவியத் யூனியனிடம் இருந்து தங்கள் சுதந்திரத்தை அறிவித்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜார்ஜியா இதில் சேர்ந்தது.

சோவியத் இராணுவம்

கியூபா Vs அமெரிக்கா : உலகின் பெரியண்ணனை வீழ்த்திய தீவு தேசத்தின் வரலாறு

இந்நிலையில் மாஸ்கோவில் கோர்ப்பச்சேவின் செல்வாக்கு சரிந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் பாராளுமன்றத்தின் முன்பு இராணுவ டாங்கியின் மேல் நின்ற போரிஸ் யெல்ஸ்டினின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருந்தது. அவர் இப்போது பாராளுமன்றம், கேஜிபி இரண்டையும் கட்டுப்படுத்தினார்.

கோர்பச்சேவ் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வது தவிர்க்க முடியாமல் போனது. 1991 கிறிஸ்துமஸ் தினத்தன்று, அவர் தனது பதவியை விட்டு விலகினார்.

அப்போது அவர் ஆற்றிய உரையில், ""நாங்கள் இப்போது ஒரு புதிய உலகில் வாழ்கிறோம். பனிப்போர் மற்றும் ஆயுதப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நமது பொருளாதாரம், பொது அணுகுமுறைகள் மற்றும் ஒழுக்க நெறிகளை முடக்கிய நாட்டின் பைத்தியக்காரத்தனமான இராணுவமயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வலிமைமிக்க சோவியத் யூனியன் வீழ்ந்தது.”

Vladimir Putin

Vladimir Putin

Twitter

சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஏற்படுத்திய விளைவுகள் என்ன?

இவ்வாறாக இருபதாம் நூற்றாண்டில் உலக அரசியலில் செல்வாக்கு செலுத்திய சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது. இதன் பிறகு அமெரிக்க ஒற்றைத் துருவ வல்லரசாக எழுச்சி பெற்றது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகே குவைத் இராக் போர், பின்லேடன் தாக்குதலுக்கு பின்னான ஈராக் ஆக்கிரமிப்பு போர், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு போர் போன்றவை நடைபெற்றன.

சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பிறகு ரஷ்யா புதிதாக எதையும் பெறாத நிலையிலேயே இருந்தது. முதலாளத்துவ பொருளாதாரம் நாட்டில் தேனையும் பாலையும் ஓட விடவில்லை. பொருளாதாரம் சரிந்து, வேலையின்மை பெருகி மக்கள் ஏற்கனவே சோவியத் ஆட்சியில் பெற்றவற்றைக் கூட இழந்து போன நிலைதான் இருந்தது. போரிஸ் யெல்ஸ்டின் குடிகாரராகவும், ஆடம்பரப் பிரியராகவும் இருந்தார். அவரது காலத்திற்கு பிறகு பதவியேற்ற புதினின் காலத்தில்தான் ரஷ்யா சொல்லிக் கொள்ளும் அளவு ஒரு நாடாக உருப்பெற்றது.

சோவியத் யூனியன் மறைந்தாலும் அது நேர்மறையில் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நடைபெற்ற காலனிய எதிர்ப்பு போராட்டங்கள், சுதந்திரமடைந்த மூன்றாம் உலக நாடுகள், தொழிலாளர் நலன், மக்கள் நலன் அரசு போன்றவை சோவியத் யூனியன் உலக மக்களுக்கு வழங்கிய கொடைகள். அதே நேரம் ஒரு கட்சி சர்வாதிகாரம் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்காமல் சர்வாதிகாரத்துடன் அச்சுறுத்தியது. இதனால்தான் முன்னாள் சோசலிச நாடுகள் முதலாளித்துவ நாடுகளாய் மாறிய பிறகு ஒரிரவில் புதிய முதலாளிகள் திடீரென தோன்றினார்கள். இவர்கள் பழைய அதிகார வர்க்க ஆட்சியில் ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்திருந்தினர். இவையெல்லாம் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆழமாய் சுயவிமர்சனம் செய்து கொண்டு பரிசீலிக்க வேண்டிய விசயங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com