பிர்சா முண்டா : உலகம் கொண்டாட வேண்டிய ஒரு நிஜ நாயகன் குறித்த சில தகவல்கள்

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் மதமாற்ற நடவடிக்கைகள் மற்றும் பழங்குடி சமூகங்களைத் தவறாக நடத்துவதற்குப் பதிலடியாக இளம் வயதிலேயே பிர்சா அமைப்பு உருவாக்கினார்.
 பிர்சா முண்டா
பிர்சா முண்டாTwitter

சோட்டா நாக்பூர் பீடபூமியின் முண்டா பழங்குடியினரின் வழித்தோன்றலான பிர்சா முண்டா, ஒரு இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் .

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பழங்குடியின மக்களைத் திரட்டி போராடிய ஒரு சூப்பர் ஹீரோ. அவர் பெங்கால் பிரெசிடென்சியில் (இன்றைய ஜார்கண்ட்) மில்லினேரியன் இயக்கத்தின் முக்கியமான சக்தியாக இருந்தார்.

யார் இந்த பிர்சா முண்டா

  • நவம்பர் 15, 1875 அன்று பெங்கால் மாநிலத்தின் உலிஹாட்டுவில், (இன்று ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில்) பிர்சா முண்டா பிறந்தார். முண்டா பாரம்பரியத்தின்படி அவருக்கு பிர்சா முண்டா எனப் பெயரிடப்பட்டார். சல்கா-வில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.

  • முண்டா கிளர்ச்சி, உல்குலன் (கிளர்ச்சி) ஆகியவை பிர்சா முண்டாவால் தலைமை தாங்கப்பட்ட போராட்டங்கள்.

  • பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் மதமாற்ற நடவடிக்கைகள் மற்றும் பழங்குடி சமூகங்களைத் தவறாக நடத்துவதற்குப் பதிலடியாக இளம் வயதிலேயே பிர்சா அமைப்பு உருவாக்கினார்.

பிர்சா முண்டா
பிர்சா முண்டாTwitter
  • பிர்சா முண்டா1900 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வீரர்கள் முண்டாவைக் கைது செய்தனர். தனது 25-வது வயதில் பிர்சா ராஞ்சி சிறையில் இறந்து போனார்.

  • முண்டாவின் கிளர்ச்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பழங்குடியினரை ஒன்று திரட்டியது. அதன் பலனாக 1908 ஆம் ஆண்டின் குத்தகைச் சட்டம் போன்ற பழங்குடி சமூகங்களின் நில உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றச்செய்ய அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தியது.

  • பழங்குடியின தலைவரின் பிறந்தநாளை நினைவுகூரும் ஒரு கொண்டாட்டம் ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் ஆகும்.

பிர்சா முண்டா
பிர்சா முண்டாTwitter

பிர்சா முண்டா செயல்பாடுகள்

  • பிர்சா இந்து மத நம்பிக்கைகளைப் பற்றி ஒரு வைஷ்ணவ துறவியிடம் இருந்து கற்றறிந்தார். ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற பண்டைய நூல்களைப் படித்தார்.

  • பிர்சா முண்டா பிர்சாய்ட் என்னும் மதத்தை நிறுவினார். அம்மதம் ”ஒரே கடவுள்” நம்பிக்கையைப் போதித்தது. பிர்சா, மக்கள் தங்கள் பழைய மத நம்பிக்கைகளுக்குத் திரும்பும்படி வலியுறுத்தினார்.

  • பிர்சா தனது மதத்தின் மூலம் வலுவான பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வைப் பிரசங்கித்தார். ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை ராஜ்ஜியத்திற்கு எதிராகப் போரிடக் கொரில்லா படைகளை உருவாக்கினார்.

  • 1886 மற்றும் 1890 க்கு இடைப்பட்ட காலங்களில் சாய்பாசாவில், பிர்சா முண்டா மிஷனரி எதிர்ப்பு மற்றும் ஸ்தாபனத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்றார். மேலும் பிரிட்டிஷ் அடக்குமுறைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த 'உல்குலன்' அல்லது 'தி கிரேட் டுமல்ட்' என்ற இயக்கத்தை நிறுவினார்.

  • பிர்சா இறக்கும் போது அவருக்கு வயது வெறும் 25 தான்.

 பிர்சா முண்டா
டி.பி.கூப்பர் : 50 ஆண்டுகளாக அமெரிக்காவை அலற விடும் நிஜ விக்ரம் - ஒரு பரபர கதை

பீகார், ஜார்கண்ட் மற்றும் கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இளம் விடுதலை போராட்ட வீரர் பிர்சாவின் நினைவு இன்றும் போற்றப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில், பிர்சா முண்டா விமான நிலையம் ராஞ்சி, பிர்சா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சிந்த்ரி, பிர்சா முண்டா பழங்குடி பல்கலைக்கழகம், பிர்சா வேளாண் பல்கலைக்கழகம், பிர்சா கல்லூரி குந்தி, பிர்சா முண்டா தடகள விளையாட்டு அரங்கம் மற்றும் பிர்சா முண்டா மத்திய சிறை ஆகியவை அவரது நினைவைப் பறைசாற்றும் விதமாகப் பெயரிடப்பட்டிருக்கின்றன.

இன்று பிர்சா முண்டா நினைவு நாள்

 பிர்சா முண்டா
பல சாம்ராஜ்ஜியங்களை வீழ்த்திய ரத்தம் குடிக்கும் நாடோடி வீரர்கள் - சிதியர்கள் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com