பல சாம்ராஜ்ஜியங்களை வீழ்த்திய ரத்தம் குடிக்கும் நாடோடி வீரர்கள் - சிதியர்கள் கதை

சாம்ராஜ்ஜியம் என ஒன்று இல்லாமலே வெறுமனே நாடோடிகளாக வாழ்ந்த மக்களும் போர் செய்திருக்கிறார்கள். பல புகழ்பெற்ற சாம்ராஜ்ஜியங்களை வீழ்த்தியிருக்கிறார்கள். அத்தகைய நாடோடி மக்களில் ஒரு பிரிவினர்தான் சிதியர்கள்.
போர் வீரர்கள்
போர் வீரர்கள்Twitter

21ஆம் நூற்றாண்டில் மனிதக் குலம் நாகரீகமாக வாழ்கிறது என்று சொல்ல முடியுமா? வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் இருந்து வந்த போர் எனும் சக மனிதனைக் கொடூரமாகக் கொல்லும் போக்கு இன்று முடிவுக்கு வந்து விட்டாத என்றால் இல்லை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் அதற்கோர் உதாரணம்.

இன்றைய அறிவியல், நாகரீக வளர்ச்சி இல்லாத காலத்திலும் மக்கள் போர் செய்திருக்கிறார்கள். அந்தந்தக் கால கட்டத்தில் குறிப்பிட்ட காரணங்களுக்காக மக்கள் போர் செய்திருக்கிறார்கள். அதில் தமது உயிர்வாழ்வதை உறுதிப்படுத்துவதிலிருந்து, செல்வச் செழிப்பான ராஜ்ஜியங்களைக் கைப்பற்றும் நோக்கம் வரை பல காரணங்கள் இருக்கின்றன.

இத்தகைய சாம்ராஜ்ஜியம் என ஒன்று இல்லாமலே வெறுமனே நாடோடிகளாக வாழ்ந்த மக்களும் போர் செய்திருக்கிறார்கள். பல புகழ்பெற்ற சாம்ராஜ்ஜியங்களை வீழ்த்தியிருக்கிறார்கள். அத்தகைய நாடோடி மக்களில் ஒரு பிரிவினர்தான் சிதியர்கள்.

போர் வீரர்
போர் வீரர்Twitter

எங்கிருந்து வந்தார்கள்?

கிபி 1700க்கு முன்பு வரை சிதியர்களைப் பற்றி யாருக்கும் முழுமையாகத் தெரியாது. சில வரலாற்று அறிஞர்கள் விட்டுச் சென்ற குறிப்புகள் மட்டுமே இருந்தன. அந்தக் குறிப்புகளை வைத்து சிதியர்கள் யார் என்பதை வரலாற்றாய்வாளர்கள் ஊகிக்கிறார்கள்.

சிதியர்களைப் பற்றி கிரேக்க வரலாற்று அறிஞர் ஹெரோடோட்டஸ் எழுதிய "வரலாறுகள் - கி.பி. 5ஆம் நூற்றாண்டு" என்ற புத்தகம் முக்கியமானது.

அதில் சிதியர்கள் கண்ணில் படும் எதிரிகள் எவரும் அவர்களிடமிருந்து தப்பியதில்லை என்று ஹெரோடோட்டஸ் குறிப்பிட்டுள்ளார்.

கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் பதிவுப்படி, சிதிரியர்கள் கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காக்கேசியா பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என அறியப்படுகிறது. இவர்கள் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என அசிரியப் பேரரசும், சீனர்களும் குறிப்பிடுகின்றனர்.

சிதியர்கள் குதிரை வளர்ப்பில் வல்லவர்கள். போர்களில் முதன் முதலாகக் குதிரைகளைப் பயன்படுத்தியவர்கள். கி.மு. 8ஆம் நூற்றாண்டில் கிழக்கு சீனாவின் ஜொவ் அரச குலத்தின் மீதும், பின்னர் மேற்கில் போண்டிக் புல்வெளி சிம்மேரியர்கள் மீதும் படையெடுத்தனர். சிதியர்கள் அதிகாரத்தின் உச்சத்திலிருந்த போது யுரேசியாவின் மொத்தப் புல்வெளி நிலங்களின் மீது அதிகாரம் செலுத்தினார்கள்.

சிதியர்கள்
சிதியர்கள்Twitter

பேரரசுகளை அழித்த ஒரு கூட்டம்

சிதியர்கள் நாடோடிகள் என்பதால் அவர்கள் நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்குவதில்லை. படையெடுத்த இடங்களில் தமது அடையாளங்களை விட்டுச்சென்றனர். ஆக்கிரமித்த இடங்களின் இளவரசிகளைத் திருமணம் செய்து கொண்டு அந்த பகுதியின் போர் உத்திகளைக் கற்றுக்கொண்டனர். இப்படியாக தமது போர் திறமையை மேம்படுத்தினர்.

குதிரைகள் மீது அமர்ந்தவாறு மர ஈட்டி அம்பை விடுவதில் இவர்கள் வல்லவர்கள். அம்புகளில் விஷத்தைத் தடவியும் சிதியர்கள் எதிரிகளைக் கொன்றிருக்கின்றனர். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அரசு அருங்காட்சியகத்தில் இவர்கது ஆயுதங்கள் உள்ளன.

போர் வீரர்கள்
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை

உடல்பலம், போர்க்குணம், வீரம் கொண்ட நாடோடிக் குழுவினராக சிதியர் பழங்குடியினரை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மத்திய ஆசியாவிலும் சீனா முதல் வடக்கு கருங்கடல் பகுதி வரை இவர்களது ஆக்கிரமிப்பு சுவடுகள் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிதியர்கள் அசிரிய பேரரசு, அகாமனிசியப் பேரரசு ஆகியவற்றை அழித்துள்ளனர். பாரசீகத்தின் சர்மதியர்களையும் வென்றிருக்கின்றனர். இன்றை உக்ரைன், தெற்கு ஐரோப்பாவின் கிரிமியா போன்ற பகுதிகளில் வாழ்ந்த சிதியர்கள் நாகரீகத்தில் மேம்பட்டு விளங்கினர். சீனாவின் பட்டுவழிச் சாலையை தமது கட்டுக்குள் வைத்திருந்தனர்.

போர் வீரர்கள்
அண்டார்டிகா : இனி நான்கு மாதங்கள் சூரியன் உதிக்காது - ஏன் தெரியுமா?

அகழ்வராய்வுகள் கூறுவதென்ன?

மத்திய ஐரோப்பா, ரஷ்யாவில் நடந்த அகழ்வாராய்ச்சிகளின் போது கிடைத்த உடல் எச்சங்களை ஆய்வு செய்த போது கபாலத்தில் கோடாரியால் தாக்கப்பட்ட அடையாளங்களைக் கண்டறிந்தனர். இதிலிருந்து சிதியர்கள் போர் தாக்குதல்களில் கொடூரமானவர்கள் என்பது தெரிய வருகிறது. போரில் எதிரிகள் ஒருவர் கூட உயிருடன் இல்லாமல் இருப்பதை சிதியர்கள் உறுதிப்படுத்துவார்கள்.

வெற்றிக் களிப்பில் எதிரி உடலிலிருந்து வழியும் ரத்தத்தைக் குடித்து சிதியர்கள் களிப்படைந்ததாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மின்னல் வேகத்தில் குதிரையில் சீறிப்பாய்ந்து எதிரியைத் தாக்குவது, மின்னல் வேகத்தில் அம்பெய்தி எதிரியை வீழ்த்துவது, கபாலத்தை உடைத்து நொறுக்குவது இவர்களின் போர் வெறிக்கு சில உதாரணங்கள்.

உலகில் பல நாகரீகங்களின் வழித்தோன்றல்களுக்குக் காரணமாக இருந்த சிதியர்கள் சொந்த நாடின்றி நாடோடியாகவே வாழ்ந்து மறைந்து போனார்கள். ஆனால் அவர்களின் வரலாறும், போர் வெற்றிகளும் பிரமிப்பை ஊட்டக் கூடியவை.

போர் வீரர்கள்
சுனாமி, பூகம்பம் ஏற்படுவதை முன்பே கணிக்கும் விலங்குகள் - ஓர் ஆச்சர்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com