பல வருடங்களாக மீம்ஸ் உலகின் நாயகன் ஆக இருந்த சீம்ஸ் நாய் நேற்று உயிரிழந்தது. இதன் உரிமையாளர் இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார்
பால்ட்சி என்ற பெயர் கொண்ட இது கடந்த 2013ஆம் ஆண்டு மீம்ஸ் உலகில் கால் பதித்தது.
பால்ட்சிக்கு தனி இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது. அதில் நாயை பற்றிய அப்டேட்கள் நமக்கு கிடைக்கும்.
doge meme என்ற டெம்பிளேட்டில் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த shiba inu வகை நாய், 2017க்கு பிறகு தமிழ் மீம் உலகையும் ஆட்கொண்டது.
சீம்ஸ், பெர்ரோ, வால்டர், கரென், லிட்டில் ப்ரோ (Lil Bro), கசின் ப்ரோ எனப் பல கதாபாத்திரங்கள் இந்த மீம்களில் இருக்கின்றன.
இந்த சீம்ஸ் மீம்களை வெளியிடுவதற்காகவே சீம்ஸ் ராஜா, சீம்ஸ் டா என்பன பிரத்தியேக மீம் பேஜுகள் உள்ளன.
இந்த சீம்ஸ் நாய்களை வைத்து மீம் உலகில் ஒரு dogverse ஏ உருவானது எனலாம்.
இந்த சீம்ஸ் நாயை வைத்து நம் மீம் கிரியேட்டர்கள் பேசாத தலைப்பே இல்லை. அரசியல், விளையாட்டு, சினிமா, உளவியல் பிரச்சினைகள் என பல்வேறு டாபிக்குகளை கவர் செய்தது சீம்ஸ் மீம்ஸ்.
இந்நிலையில், 12 வயதாகும் இந்த சீம்ஸ் நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.
சீம்ஸ் லூகேமியா எனப்படும் ஒரு வகை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும்போது, உயிரிழந்தது.
shiba inu வகை நாய்களின் ஆயுட்காலம் 12 முதல் 15 வயது வரை தான். எனினும், ஒரு இறுக்கமான சமயத்தில், இந்த உலகை சிரிக்கவைத்த சீம்ஸ் இறந்ததை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சீம்ஸின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பலர் மீம்களை பகிர்ந்து வருகின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust