Doge Meme : இணையத்தைக் கலக்கும் இந்த Cheems யார் தெரியுமா?

மீம் என்றால் வடிவேலு தான் என நினைப்பவர்களே! சற்று அப்டேட் ஆகுங்கள் இது சீம்ஸ் காலம்.
meme
memeTwitter
Published on

இந்த சோசியல் மீடியா யுகத்தில் தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறைந்து வருகிறது. 12ம் வகுப்பு மாணவனின் ரசனைகளைக் கல்லூரி படிப்பவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. உயர்கல்வி மாணவர்களின் ரசனை குடும்பஸ்தர்களுக்குப் புரிவதில்லை. இதற்கிடையில் சில பூமர் அங்கிள்கள் 9ம் வகுப்பு மாணவர்களின் மீம்ஸ்களைப் புரிந்து கொண்டு சிரிக்கிறார்கள்.

இப்படியாக 90's Kids, Early 2k Kids, 2k Kids, Babies, Boomers எனப் பல தரப்புகளாக மக்களைக் கலைத்துப்போட்டு அவரவர்களுக்கு எனத் தனியான உலகை உருவாக்கிக்கொடுக்கிறது இந்த சமூக வலைத்தளங்கள்.

எக்ஸாம் மீம்கள் ஏன் ட்ரெண்டாகின்றது என்ற கேள்வி மே மாதம் இருந்தது. அதன் பிறகு ரிசல்ட் மீம்கள் வந்தது. இப்படி சமீபத்தில் பலராலும் புரிந்து கொள்ள முடியாத மீம்கள் இணையத்தில் வலம் வருகின்றது. அதில் முக்கியமான ஒன்று தான் Doge Meme. இதை Cheems என்றால் எல்லாருக்கும் தெரியும். இந்த சீம்ஸ் மீம்கள் எப்படி பிரபலாமாகின என்பதைத் தான் இப்போது காணப்போகிறோம்.

மீம் என்றால் வடிவேலு தான் என நினைப்பவர்களே சற்று அப்டேட் ஆகுங்கள் இது சீம்ஸ் காலம்.

மேலே இருக்கும் டாஜி கடந்த 2013ம் ஆண்டு முதல் இணையவாசிகளிடம் புழக்கத்திலிருக்கும் மீம் டெம்ப்ளேட் ஆகும். Shiba Inu எனும் நாய் வகையைச் சேர்ந்த இது தான் முதல் Dog meme Template -ஆகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளில் டாஜிமீம்ஸ்க்கு இருக்கும் மவுசு நம்மூரில் கிடையாது. 2017க்கு பிறகு டாஜி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ் மீம் உலகில் சீம்ஸ் தான் ராஜா!

சீம்ஸ், பெர்ரோ, வால்டர், கரென், லிட்டில் ப்ரோ (Lil Bro), கசின் ப்ரோ எனப் பல கதாபாத்திரங்கள் இந்த மீம்களில் இருக்கின்றன. இந்த பாத்திரங்களுடன் பரியேறும் பெருமாள் படத்தில் வரும் 'கருப்பி' கதாப்பாத்திரத்தை நம் ஊரில் அறிமுகப்படுத்தினர்.

இப்போது எல்லாரும் சீம்ஸ் மீம்களைப் பதிவிட்டாலும் சீம்ஸ் ராஜா, சீம்ஸ் டா உள்ளிட்ட சில பிரத்யேக பேஜ்கள் தான் இந்த டெம்ப்ளேட்டை நமக்கு வழங்கின.

இந்த ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மீம்களில் தனித்தனியான குணாதீசியங்கள் உண்டு.

சீம்ஸ் ஒரு சாதாரண எந்த தனித் திறமைகளும் இல்லாத பையனைக் குறிக்கும். மனிதர்கள் உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழும் சூழலில், அனைவரின் மைண்ட் வாய்ஸ்களையும் சத்தமாகப் பேசுவது சீம்ஸ் தான்.

ஐபிஎல் மீம்களில் சீம்ஸ் RCB ஐ குறிக்கும் வகையில் இடம் பெறுவார். சீம்ஸ் உருவானது Balltze எனும் இந்த நாயின் மூலமாக தான்.

Cheems Pods
Cheems PodsDogcheems
meme
TTF Vasan : 2K கிட்ஸ்களின் நாயகன் ஆனது எப்படி? இவர் பின்னணி என்ன? - விரிவான தகவல்

பெர்ரோ ஒரு லேப் பப்பி. "ஆளப் பாத்தா டம்மியா இருக்க, பயங்கரமான ஆளா இருக்கியேடா" என்ற வடிவேலு டயலாக் தான் பெர்ரோ எனலாம்.

2020 ஐபிஎல் -ல் அதிக இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தும் பல பெரிய அணிகளை புரட்டி எடுத்த கொல்கத்தாவை தான் பெர்ரோ மீம்களில் தோன்றியது.

IPL MEME TEMPLATE

meme
Amala Shaji : பிரியங்கா மோகனை விட அதிக Followers; யார் இந்த 2K கிட்ஸ்லின் Reels க்ரஷ் ?

லாக்டவுனில் டவுனாகி போயிருந்த பல இளைஞர்களைச் சிரிக்க வைத்தது இந்த மீம்கள் தான்.

ஆரம்பத்தில் புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும் ஒரு முறை Dogeverse உள்ளே வந்து விட்டால் மற்ற மீம்கள் எல்லாம் கொஞ்சம் சுமாராக தோன்ற ஆரம்பித்துவிடும்.

இந்த சீம்ஸ் மீம்கள் மூலமாக கதைகள் சொல்லும் பழக்கமும் இருந்து வந்தது. இப்போது இது சீரிஸாக போடும் வரை வளர்ந்திருக்கிறது.

சில நாய்களை வைத்து இவ்வளவு விஷயங்களை சொல்ல முடியுமா? இவ்வளவு கதைகளைக் காட்ட முடியுமா? என வியக்க வைக்கிறது இந்த மீம் பேஜ்கள்.

அரசியல் சினிமா என சீம்ஸ் மீம்கள் அனைத்து டாபிக்களையும் கவர் செய்கின்றன.

சீஸ் பர்கரை 'சீம்ஸ் பர்கர்' என கூறுவது சீம்ஸ் ஸ்லாங்.

பரிணாம வளர்ச்சியில் சீம்ஸ் மீம்கள் வீடியோவாக கூட வருகின்றன.

இன்றைய தலைமுறையினரின் வித்தியாசமான உலகிலிருந்து ஒரு துளி தான் இந்த சீம்ஸ் மீம் எல்லாம். கொஞ்சம் கெட்ட வார்த்தைகள் பயன்பாடு இருப்பதனால் குழந்தைகள் இந்த மீம்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்.

meme
பூமர் அங்கிள் : இணையத்தை கலக்கும் ஒற்றை சொல் - இதன் வரலாறு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com