ரிஷி சுனக் : உலக நாடுகளில் அதிபர், பிரதமர் பதவி வகிக்கும் 6 இந்தியர்கள்

உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்களுக்கு ரிஷி சுனக்கின் செய்தி கூடுதல் தீபாவளி பரிசாக அமைந்திருக்கிறது. ரிஷி சுனக் மட்டுமல்லாமல் உலக அளவில் இந்திய தலைவர்கள் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
ரிஷி சுனக் : உலக நாடுகளில் அதிபர், பிரதமர் பதவி வகிக்கும் 6 இந்தியர்கள்
ரிஷி சுனக் : உலக நாடுகளில் அதிபர், பிரதமர் பதவி வகிக்கும் 6 இந்தியர்கள்Twitter

வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டிஷ் பிரதமராக பொறுப்பேற்கிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக். 42 வயதாகும் இவர் தான் கடந்த 200 ஆண்டுகளில் இளம் வயது பிரதமர். உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்களுக்கு ரிஷி சுனக்கின் செய்தி கூடுதல் தீபாவளி பரிசாக அமைந்திருக்கிறது. ரிஷி சுனக் மட்டுமல்லாமல் உலக அளவில் இந்திய தலைவர்கள் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

அயல் நாடுகளின் தாக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளியினர் குறித்து பார்க்கலாம்.

கமலா ஹாரிஸ்

அமெரிக்க அரசியலில் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ். கறுப்பின பெண் துணை அதிபரும் அவர் தான். இவர் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார். ஜமைகா மற்றும் இந்திய பெற்றோர்களை கொண்டுள்ள கமலா ஹாரிஸ் கருப்பின மற்றும் ஆசிய பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு முன்னுராதனமாக இருக்கிறார்

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்
ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்Twitter

ப்ரவிந்த் ஜக்நாத்

மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக கடந்த 2017ம் ஆண்டு முதல் பணியாற்றுகிறார் ப்ரவித் ஜகுனாத். இவரது மூதாதையர்கள் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

Pravind Jugnauth
Pravind Jugnauth

ப்ரித்விராஜ்சிங் ரூபுன்

இவர் மொரீஷியஸ் நாட்டின் 9வது அதிபராக பணியாற்றுகிறார். இவரும் ஒரு இந்திய - இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்.

Prithvirajsing Roopun
Prithvirajsing Roopun

சான் சந்தோகி

சுரினாம் என்ற தென் அமெரிக்க நாட்டின் அதிபராக இந்திய - சுரினாம் குடும்பத்தில் பிறந்த சான் சந்தோகின் பணியாற்றி வருகிறார். முன்னாள் காவல் அதிகாரியான இவர் கடந்த 2020 முதல் அதிபராக இருந்து வருகிறார்.

Chan Santokhi
Chan Santokhi
ரிஷி சுனக் : உலக நாடுகளில் அதிபர், பிரதமர் பதவி வகிக்கும் 6 இந்தியர்கள்
ரிஷி சுனக் : பிரிட்டன் பிரதமர் ஆவாரா இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மருமகன்?

முகமது இர்ஃபான் அலி

முகமது இர்ஃபான் அலி காயானா நாட்டின் 9வது அதிபராக பணியாற்றி வருகிறார். இவர் இந்திய - கயானிஸ் குடும்பத்தில் பிறந்தவர். 2020 முதல் கயானாவின் அதிபராக இருக்கிறார்.

முகமது இர்ஃபான் அலி
முகமது இர்ஃபான் அலி

அன்டோனியோ கோஸ்டா

இவர் 2015 முதல் போர்ச்சுகல் பிரதமராக பணியாற்றி வருகிறார். அரசியலில் தீவிர பங்காற்றும் இவர் சட்ட ஆலோசகராக பணியாற்றினார்.

Antonio Costa:
Antonio Costa:
ரிஷி சுனக் : உலக நாடுகளில் அதிபர், பிரதமர் பதவி வகிக்கும் 6 இந்தியர்கள்
ரிஷி சுனக்: பிரிட்டன் பிரதமர் ஆக பதவி ஏற்கவிருக்கும் இவர் யார்? இவர் இந்திய பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com