Rishi Sunak : குச்சிபுடி நடனமாடிய பிரிட்டன் பிரதமரின் மகள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

லண்டனில் 'ரங்' - சர்வதேச குச்சிபுடி நடன திருவிழா 2022 நடைபெற்றது. இது அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக லண்டனில் நடைபெறும் மிக முக்கிய விழாவாகும். இந்த நிகழ்ச்சியில் பிரிட்டன் பிரதமரின் மகளும் பங்கேற்று நடனமாடினார்.
Akshata Murty - Rishi sunak
Akshata Murty - Rishi sunak Twitter

சர்வதேச குச்சிபுடி நடன விழாவில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் அனுஷ்கா சுனக் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

கடந்த மாதம் லிஸ் டிரஸ் பதவி விலகிய பிறகு, பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக். இவர் இன்ஃபோசிஸ் நிறுவனரின் மருமகனும் ஆவார்.

லண்டனில் 'ரங்' - சர்வதேச குச்சிபுடி நடன திருவிழா 2022 நடைபெற்றது. இது அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக லண்டனில் நடைபெறும் மிக முக்கிய விழாவாகும். இந்த நிகழ்ச்சியில் பிரிட்டன் பிரதமரின் மகளும் பங்கேற்று நடனமாடினார்.

தனது நடனக்குழுவுடன் ரிஷி சுனக்கின் மகள், அனுஷ்கா சுனக் மேடையில் குச்சிபுடி ஆடியதை காண, பிரதமர் அவரது குடும்பத்தினர் உடன் வந்திருந்ததார் என டைம்ஸ் நவ் தளத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Akshata Murty - Rishi sunak
ரிஷி சுனக்: பிரிட்டன் பிரதமர் வைத்திருக்கும் சொகுசு வீடுகள் எத்தனை?

இந்தியா டுடே பத்திரிகைக்கு அனுஷ்கா அளித்த பேட்டியில், "எனக்கு நடனமாட, குறிப்பாக குச்சிபுடி ஆட மிகவும் பிடிக்கும். நாம் நடனமாடும்போது, அது நம் கவலைகளை மறக்க செய்கிறது. சுற்றி உங்கள் நண்பர்கள் இருக்கும்போது, மன அழுத்ததையும் அது குறைக்கிறது. எனக்கு மேடையின் மேல் வீற்றிருப்பது பிடிக்கும்!" என்று பூரித்தார்.

அனைத்து வயதினருக்குமான இந்த விழாவில், 4 முதல் 85 வயது வரையிலான கலைஞர்கள் பங்கேற்று, பாரம்பரிய நடனமாடினர். இதில் ரிஷி சுனக் மகளின் நடன வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரதமரின் மகள், இந்தியாவின் பாரம்பரிய நடனத்தை ஆடுவது அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.

Akshata Murty - Rishi sunak
ரிஷி சுனக் மனைவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரின் இந்த ஆண்டு வருமானம் இவ்வளவா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com