ரிஷி சுனக் மனைவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரின் இந்த ஆண்டு வருமானம் இவ்வளவா?

அக்‌ஷதா மூர்த்தி இப்போது வரை non-domiciled status வைத்திருக்கிறார். எனவே, பிரிட்டன் எல்லைக்கு வெளியே ஈட்டும் வருமானத்துக்கு, பிரிட்டனில் அவர் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
Akshata Murty - Rishi sunak
Akshata Murty - Rishi sunak Twitter

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகிவிட்டார். அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தி, இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர்களில் ஒருவர் நாராயண மூர்த்தியின் மகள்.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் முதுகலை வணிக மேலாண்மை (எம் பி ஏ) படித்துக் கொண்டிருந்த போது ரிஷி சுனக் மற்றும் அக்‌ஷதா மூர்த்தி ஒருவரை ஒருவர் சந்தித்து நட்பாயினர்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 0.93 சதவீத பங்குகள் அக்‌ஷதா மூர்த்தி வசம் இருப்பதாக டிஎன்ஏ பத்திரிகை சொல்கிறது.

Akshata Murty - Rishi sunak
ரிஷி சுனக் : பிரிட்டன் பிரதமராகும் இந்திய மருமகன் - யார் இவர்? சாதித்த விஷயங்கள் என்ன?

அக்‌ஷதா மூர்த்தி வசம் 3.89 கோடி பங்குகள் இருக்கின்றன. அதன் தோராய மதிப்பு 721 மில்லியன் அமெரிக்க டாலர். அதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 5,950 கோடி ரூபாய் என்கிறது டி என் ஏ பத்திரிகை. இது ஒரு இன்ஃபோசிஸ் பங்கின் விலை 1527.40 ரூபாய் என்கிற மதிப்பில் கணக்கிடப்பட்டு இருப்பதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

2021 - 22 நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தன் பங்குதாரர்களுக்கு, ஒரு பங்குக்கு 32.5 ரூபாய் ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்கியதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி முகமை சொல்கிறது. அதை 3.89 கோடி பங்குகளால் பெருக்கினால், கடந்த 2021 - 22 நிதி ஆண்டில் மட்டும் சுமார் 126 கோடி ரூபாய் ஈவுத்தொகை வருமானம் ஈட்டியுள்ளார். 2021ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸ் ஒரு பங்குக்கு 30 ரூபாய் ஈவுத்தொகை கொடுத்தது. அதன் மூலம் அவர் சுமார் 119 கோடி ரூபாய் ஈட்டி இருக்கலாம் என்றும் டி என் ஏ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வரி சர்ச்சை

அக்‌ஷதா மூர்த்தி இப்போது வரை non-domiciled status வைத்திருக்கிறார். எனவே, பிரிட்டன் எல்லைக்கு வெளியே ஈட்டும் வருமானத்துக்கு, பிரிட்டனில் அவர் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும் எதிர்கட்சியினர் மற்றும் இணையவெளியில் எழுந்த கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, உலக அளவில் அவர் ஈட்டிய வருமானத்துக்கு பிரிட்டனில் வரி செலுத்த ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்:

கலிஃபோர்னியாவில் நிதித் துறையில் தன் வாழ்கையைத் தொடங்கிய அக்‌ஷதா, பிற்காலத்தில், 2011ஆம் ஆண்டு அக்‌ஷதா டிசைன்ஸ் என்கிற பெயரில் ஒரு ஃபேஷன் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் மூலம் இந்திய கிராமங்களில் இருக்கும் நெசவாலர்கள் & கைவினைஞர்களோடு இணைந்து பணியாற்றினார். ஆனால் தொழில் சுமார் 4 ஆண்டுகளுக்குள்ளேயே முடங்கிவிட்டது.

அதனைத் தொடர்ந்து கட்டமரான் வெஞ்சர்ஸ், டிக்மீ ஃபிட்னஸ், நியூ & லிங்வுட் போன்ற சில நிறுவனங்களில் இயக்குநராக இருப்பதாகவும் அவரது லிங்க்ட்-இன் பக்கம் சொல்கிறது

Akshata Murty - Rishi sunak
ரிஷி சுனக் : உலக நாடுகளில் அதிபர், பிரதமர் பதவி வகிக்கும் 6 இந்தியர்கள்

அக்‌ஷதாவின் பின்னணி என்ன?

அக்‌ஷதா மூர்த்தி பிறந்ததில் இருந்தே செல்வச் செழிப்பான சூழலில் வளரவில்லை. சொல்லப் போனால், அக்‌ஷதா பிறந்ததையே, தந்தை நாராயண மூர்த்தி தன் நண்பர் மூலமே தெரிந்து கொண்டார். காரணம் அவர்கள் வீட்டில், அந்த காலத்தில் டெலிஃபோன் வசதி இல்லை.

அது போக அம்மா சுதா மூர்த்தி & அப்பா நாரயண மூர்த்தி இருவரும் தங்கள் வேலைகளை தக்க வைத்துக் கொள்ளவும், பணியில் சிறக்கவும் மும்பைக்கு குடியேறினர். அப்போது அக்‌ஷதா தன் தாத்தா பாட்டியோடு கர்நாடகாவிலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என பிபிசி வலைதளம் சொல்கிறது.

Akshata Murty - Rishi sunak
அக்ஷதா மூர்த்தி : 'ராணி எலிசபெத்தை விட அதிக சொத்து' இன்ஃபோசிஸ் மகள் பில்லியரானது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com