Queen Elizabeth II: ராணியின் இறுதி சடங்கில் காவலாளி மயக்கம் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

அரச குடும்பத்தின் பாதுகாவலர்கள் அரசியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுற்றி காவல் புரிந்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக காவலர்களில் ஒருவர் மயங்கி கீழே விழுந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
The Royal Funeral
The Royal FuneralTwitter
Published on

இங்கிலாந்து அரசியின் இறுதிச் சடங்கில் காவலாளி மயங்கி விழுந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இங்கிலாந்து அரசி எலிசபெத்  கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். இங்கிலாந்தை நீண்ட காலம் ஆட்சி செய்த அரசிக்கு பத்து நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்படப் போவதாக பிரிட்டிஷ் அரச குடும்பம் தெரிவித்தது. பக்கிங்காம் அரண்மனையிலிருந்து பாராளுமன்றத்திற்கு அரசியின் உடல் கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில் இன்று காலை வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அரசி எலிசபெத்  உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்தது.

அரச குடும்பத்தின் பாதுகாவலர்கள் அரசியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுற்றி காவல் புரிந்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக காவலர்களுள் ஒருவர் மயங்கி கீழே விழுந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

The Royal Funeral
Queen Elizabeth II : "ராணி எலிசபெத் முத்திரை பதித்தவர்” - உலக தலைவர்கள் இரங்கல்

அங்கு பணியிலிருந்த அதிகாரிகள் துரிதமாக கீழே விழுந்தவருக்கு உதவ சென்றனர். கீழே விழுந்த காவலாளி முற்றிலுமாக மயக்கமடையவில்லை. அவரை அதிகாரிகள் மெல்ல வேறு பக்கம் அழைத்து சென்று, முதலுதவிகள் கொடுக்கப்பட்டது. 

வட்டாரங்களின் தகவல்படி, மயங்கிய காவலாளியின் பணி நேரம் முடிந்து அடுத்த ஆள் பணிக்கு மாறவிருந்த சமயத்தில் தான் இது நடந்தது என கூறப்படுகிறது. பாதுகாவலர் மயங்கி விழும் வீடியோ இணையத்தில் பரவ, பலரும் அவரை நலம் விசாரித்தனர்.

அதோடு, நீண்ட நேரமாக அவர் பணியில் ஓய்வில்லாமல் இருந்திருப்பார். அதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கூறினர். மேலும், அரசி எலிசபெத் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்டார். அந்த துக்கமும் அவருக்கு சோர்வை கொடுத்திருக்கலாம் எனவும் சிலர் கருத்துக்ளை தெரிவித்து வருகின்றனர்.

The Royal Funeral
ராணி எலிசபெத் II காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com