Russia: மாஸ்கோ நோக்கி படையெடுக்கும் வாக்னர் படை - தப்பி ஓடினாரா புதின்? என்ன நடக்கிறது?

மாஸ்கோவைக் கைப்பற்றும் நோக்கில் 1600 கிலோமீட்டர் பயணிப்பதாக கூறியிருக்கும் வாக்னரும் சரி, வாக்னருக்கு தகுந்த பாடம் கற்பிப்போம் எனக் கூறும் புதினும் சரி தங்களது தரப்பில் இருந்து விட்டுக்கொடுப்பதாக இல்லை.
Russia: மாஸ்கோ நோக்கி படையெடுக்கும் வாக்னர் படை - தப்பி ஓடினாரா புதின்? என்ன நடக்கிறது?
Russia: மாஸ்கோ நோக்கி படையெடுக்கும் வாக்னர் படை - தப்பி ஓடினாரா புதின்? என்ன நடக்கிறது?Putin
Published on

ரஷ்யா உக்ரைன் போரில் திடீர் திருப்பமாக வாக்னர் படைகள் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

புதினின் அரசைக் கவிழ்பது உறுதி என கூலிப்படைத் தலைவர் வாக்னர் வீடியோ வெளியிட்டுள்ளார். வாக்னர் என்பது ஒரு தனியார் இராணுவமாகும். இதன் தலைவரின் பெயரையே இந்த படையும் பயன்படுத்துகிறது.

உக்ரைன் போரில் ரஷ்யா சார்பாக போரிட்டு வந்தது வாக்னர் படை. இந்த படையில் 50000 பேர்வரை இருக்கலாம் என பிபிசி வலைத்தளம் கூறுகிறது.

வாக்னர் எங்களில் 25000 பேர் சாகத்தயார் என டெலிகிராமில் அவர் வெளியிட்டப் வீடியோவில் கூறியுள்ளார். உக்ரைன் எல்லையைக் கடந்து ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டோவ் - அன் - டான் நகரை வாக்னர் படை கைப்பற்றியுள்ளது.

அந்த நகரில் இருந்த இராணுவ முகாமைக் கைப்பற்றி அங்கிருந்து தான் தனது வீடியோவை வெளியிட்டுள்ளார் வாக்னர்.

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜெய் ஷோய்குவைப் நேரில் சந்திக்க வேண்டும். அவர் வராவிடில் மாஸ்கோ நோக்கி படையெடுப்போம் எனக் கூறியுள்ளார் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின். வாக்னரில் இந்த நகர்வுகள் ரஷ்யாவின் புதின் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த புதின், வாக்னர் படையின் இந்த நடவடிக்கையை 'பச்சை துரோகம்' என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் இது ரஷ்ய மக்கள் முதுகில் குத்தும் செயல் என்றும் கூறியுள்ளார். மாஸ்கோவை நோக்கி அணிவகுக்கும் வாக்னர் படை மேலும் ஒரு நகரைக் கைப்பற்றியதாக பிபிசி தளம் கூறியுள்ளது.

இந்த செய்திகள் மாஸ்கோவை உச்சகட்ட பதற்றத்துக்கு ஆளாக்கியிருக்கின்றன. மாஸ்கோவில் ஆயுதமேந்திய வீரர்கள் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் அதிபர் புதின் ரஷ்யாவை விட்டு தனி விமானத்தில் தப்பிவிட்டதாக செய்திகள் பரவின. ரேடார் தகவல்படி அதிபரின் விமானம் மாஸ்கோவில் இருந்து வடகிழக்கு பகுதியில் சென்றிருக்கிறது.

ஆனால் அதிபர் புதின் அதிகமாக வசிக்கும் அவரது சொகுது மாளிகை மாஸ்கோவிலிருந்து வடகிழக்கு திசையில் இருக்கும் என்பதனால் அவர் நாட்டை விட்டு தப்பித்துவிட்டார் எனக் கூற முடியாது.

மாஸ்கோவைக் கைப்பற்றும் நோக்கில் 1600 கிலோமீட்டர் பயணிப்பதாக கூறியிருக்கும் வாக்னரும் சரி, வாக்னருக்கு தகுந்த பாடம் கற்பிப்போம் எனக் கூறும் புதினும் சரி தங்களது தரப்பில் இருந்து விட்டுக்கொடுப்பதாக இல்லை.

இதனால் ரஷ்யாவில் விரைவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

Russia: மாஸ்கோ நோக்கி படையெடுக்கும் வாக்னர் படை - தப்பி ஓடினாரா புதின்? என்ன நடக்கிறது?
இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டிய ரஷ்ய அதிபர் புதின் - காரணம் என்ன?

எவ்ஜெனி பிரிகோஜன் தனது வீடியோவில், "உக்ரைனில் இருந்து நாஜியை வெளியில் அனுப்பவதோ அந்த நாட்டுக்கு பாதுகாப்பு அளிப்பதோ இப்போது நடக்கும் போருக்கான காரணம் இல்லை. பாதுகாப்புதுறை அமைச்சர் செர்ஜெய் ஷோய்கு நாயகனாக உருவாவதற்காக தான் இந்த போர் தேவைப்பட்டது.

அங்கு நடக்கும் உயிரிழப்புகளுக்கும் ரஷ்ய இராணுவம் உக்ரைனில் பின் தங்கியிருப்பதற்கும் காரணம் செர்ஜெய் ஷோய்குதான். " எனக் கூறியுள்ளார்.

இது போருக்கு ரஷ்யா சொன்ன காரணங்களில் இருந்து முரண்படுகிறது. மேலும் இந்த வாரத்தின் தொடக்கத்தில் ரஷ்ய இராணுவம் வாக்னர் படையின் முகாமைத் தாக்கியதாகக் அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சகம் இதனை மறுத்துள்ளது.

Russia: மாஸ்கோ நோக்கி படையெடுக்கும் வாக்னர் படை - தப்பி ஓடினாரா புதின்? என்ன நடக்கிறது?
உக்ரைன்: பக்முத் பகுதியை கைப்பற்றிவிட்டதா ரஷ்யா? அதிபர் செலென்ஸ்கி உருக்கம்

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு மற்றும் வாக்னர் குழு தலைவர் பிரிகோஸின் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் தனிப்பட்ட கசப்புணர்வின் வெளிப்பாடு என்று மாஸ்கோ வட்டாரங்கள் கூறுகின்றன.

ரஷ்யாவில் நடக்கும் இந்த சம்பவங்கள் உக்ரைன் போரில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? இதில் அமெரிக்காவின் தலையீடு இருக்குமா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Russia: மாஸ்கோ நோக்கி படையெடுக்கும் வாக்னர் படை - தப்பி ஓடினாரா புதின்? என்ன நடக்கிறது?
ரஷ்யா: அதிபர் Putin மீது நேரடி தாக்குதல்; மறுக்கும் உக்ரைன் - என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com