இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டிய ரஷ்ய அதிபர் புதின் - காரணம் என்ன?

மேலும் இந்தியாவின் வெளிப்படையான வெளியுறவு கொள்கைக்காக பிரதமர் மோடியை பாராட்டினார் புதின். "எதிர்காலம் இந்தியாவுடையது" என்றும் கூறினார்.
Putin - Modi
Putin - ModiTwitter
Published on

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியர்கள் அனைவரும் திறமைசாலிகள் என்றும் வளர்ச்சியை நோக்கி சிறப்பாக உந்தப்படுகின்றனர் என்றும் புகழ்ந்துள்ளார்.

உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் புதின் வெளிப்படையாக தொடர்ந்து இந்தியாவை பாராட்டி வருகிறார். இதற்கு காரணம் என்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ரஷ்ய ஒற்றுமை தினமான நவம்பர் 4ம் தேதி உரையாற்றிய புதின், ஒன்றரை பில்லியனுக்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா ரஷ்யாவுடன் நீண்டகாலமாக நல்லுறவில் இருப்பது குறித்து பெருமைப்படுவதாகக் கூறினார்.

"இந்தியாவைப் பாருங்கள்: மிகவும் திறமையான, உள்நாட்டு வளர்ச்சியை எதிர் நோக்கியிருக்கும் மக்கள் அங்கு இருக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் மிகப் பெரிய பலனை அடையப் போகிறது இந்தியா." என்று மாஸ்கோவில் பாராட்டினார் புதின்.

மேலும் இந்தியாவின் வெளிப்படையான வெளியுறவு கொள்கைக்காக பிரதமர் மோடியை பாராட்டினார் புதின். "எதிர்காலம் இந்தியாவுடையது" என்றும் அவர் கூறினார்.

அடுத்த வாரம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் சூழலில் புதின் இவற்றைப் பேசியுள்ளார்.

Putin - Modi
உக்ரைனின் 15% பகுதிகளை இணைத்துக் கொண்ட ரஷ்யா- அமெரிக்காவின் ரியாக்‌ஷன் என்ன?

நவம்பர் 7-8 இரண்டு நாட்கள் ரஷ்யாவுக்கு பயணம் செய்யவுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவைச் சந்தித்துப் பேசவுள்ளார். மேலும் இந்த சந்திப்பில் இந்தியா - ரஷ்யா இடையிலான உறவின் வரையறைகள் குறித்து விவாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

மேலும் துணை பிரதமரும், வர்த்தக துறை அமைச்சருமான டெனிஸ் மன்ட்ரோவையும் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திக்கிறார். இரு நாடுகளிடையே இருக்கும் வர்த்தக சிக்கல்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து வரும் நிலக்கரி மற்றும் எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புப் போரில் இந்தியா எந்த நாட்டுக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Putin - Modi
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா : கோடி கணக்கில் மிச்சப்படுத்தும் அரசு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com