உக்ரைந் மீதான் ரஷ்ய போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற இருக்கிறது.
இத்தனை நாட்களில் உக்ரைன் சொல்லில் அடங்காத போர் பாதிப்புகளை அடைந்துள்ளது.
உக்ரைன் மக்கள் மீது பல்வேறு போர் குற்றங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. நாட்டின் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல அடிப்படை அமைப்புகள் பாதிப்படைந்து உள்ளன.
ரஷ்யாவின் வீரர்கள், போர் கருவிகளுடன் பெரும் செல்வத்தையும் இந்த போரில் இழந்திருக்கிறது.
உக்ரைன் சொல்வதன் படி ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் அதிபரான புதின் ஏற்கெனவே உக்ரைன் மீதான் போரில் பங்குகொள்ள 3 லட்சம் ரஷ்ய வீரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
புதினின் இந்த அழைப்புகளை மறுப்பதற்காக ஒரு மனிதர் நான்கு மாதங்களாக காட்டுக்குள் வசித்துவருவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆடம் கலினின் எனும் அந்த நபர் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டைக்கொண்டுள்ளார்.
இதனால் புதின் விடுத்த அழைப்பை முன்னிட்டு இராணுவத்தில் இணையாமல் வாழ காட்டுக்குள் சென்றுவிட்டார்.
4 மாதங்களாக காட்டுக்குள் வாழும் இவருக்கு இவரது மனைவி உதவி வருகிறார். அதிகாரிகள் கையும் களவுமாக தன்னைப் பிடித்தால் மட்டுமே போரில் ஈடுபடுத்த முடியும் எனக் கூறியுள்ளர்.
புதினின் போர் அழைப்புக்கு பயந்து கூடாரத்தில் வசிக்கும் அவர் தகவல் தொழில்நுட்ப ஊழியர். அவரது கூடாரத்துக்கு அருகில் உள்ள பைன் மரத்தில் ஆண்டெனா கட்டி வைத்து இணையவசதி பெருகிறார்.
சூரிய மின் சக்தி மூலம் தேவையான மின்சாரத்தையும் உருவாக்கிக்கொள்கிறார். போர் முடியும் வரை மறைந்து வாழ அவர் திட்டமிட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust