உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. சரமாறியாக ஏவுகணை மழை பொழிந்ததில் டினிப்ரோ பகுதியில் குறைந்தது 14 பேர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உக்ரைன் நாட்டின் மீது அதிபர் புதின் தலைமையிலான ரஷ்யா கடந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 11 மாதங்களை போர் எட்டியுள்ள நிலையில் இரு தரப்பிலும் அளவு கடந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இதனால் உலக நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளன. சமாதானம் பேச உலக தலைவர்கள் தயாராக இருக்கும் நிலையில், புதின் உக்ரைன் நாட்டை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறார்
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது ரஷ்ய படைகள். டினிப்ரோ நகரத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது ஏவுகணைகளை செலுத்தியதில், 15 வயது சிறுமி உட்பட 14 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை தவிர 60 பேருக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அல்ஜஜீரா செய்தி தளம் தெரிவிக்கிறது. ஒரு மூன்று வயது குழந்தையும் இதில் அடக்கம்.
மேலும், கட்டிடத்தில் சுமார் 26 பேர் வரை சிக்கியுள்ளதாகவும் அவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை எனவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கீவ், கார்கீவ் ஆகிய நகரங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust