சார்டினியா : கடலுக்கு அடியில் கிடைத்த பழங்கால நாணயங்கள் - கப்பலில் கண்டெடுக்கப்பட்டதா?

30,000 க்கும் மேற்பட்ட நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். சர்டினியாவின் தொல்லியல் துறையின் செய்தித் தொடர்பாளர், இந்த கண்டுபிடிப்பு நாணயங்களின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும் என்று கூறினார்.
Sardinia: Thousands of ancient coins found under sea, could be from a shipwreck
Sardinia: Thousands of ancient coins found under sea, could be from a shipwreckTwitter
Published on

இத்தாலியில் அமைந்துள்ளது சார்டினியா தீவு. 30,000 க்கும் மேற்பட்ட பழங்கால நாணயங்கள் இந்த சார்டினியாவின் நீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சியின் படி, இந்த நாணயங்கள் 4 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்து. இந்த நாணயங்கள் வெண்கலத்தில் உள்ளன.

முதலில் டைவர் ஒருவர் ஏதோ உலோகப் பொருள் நீருக்கடியில் இருப்பதை கண்டிருக்கிறார். வெளியே எடுத்து சூரிய ஒளியில் பார்க்கும் போது பளபளத்தது.

இதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர்,

டைவர்ஸ் மற்றும் தொல்லியல் நிபுணர்கள் கடலுக்கடியில் மூழ்கி, ஆயிரக்கணக்கான நாணயங்களைக் கண்டுபிடித்தனர். 30,000 க்கும் மேற்பட்ட நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

சார்டினியாவின் தொல்லியல் துறையின் செய்தித் தொடர்பாளர், இந்த கண்டுபிடிப்பு நாணயங்களின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும் என்று கூறினார்.

Sardinia: Thousands of ancient coins found under sea, could be from a shipwreck
350 ஆண்டுகள் பழமையான 400 முகலாயர் கால நாணயங்கள் கண்டுபிடிப்பு - எங்கே?

மேலும் அவர், தொல்பொருள் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்திற்கான கூடுதல் சான்றுகள் என்றும் கடல்களின் அடிப்பகுதி, தொடர்ந்து அதனை பாதுகாத்து வருகிறது என்றும் கூறியிருக்கிறார்

இந்த நாணயங்கள் விபத்தான கப்பலில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த நாணயங்களில் அச்சிடப்பட்ட தேதிகள் கிபி 324 முதல் கிபி 346 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

Sardinia: Thousands of ancient coins found under sea, could be from a shipwreck
அதிர்ஷ்டம்! சமையலறையில் கிடைத்த தங்க நாணயங்கள் 7 கோடிக்கு ஏலம் - பணமழையில் தம்பதி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com