சவுதி அரேபியா: பேய்களால் உருவாக்கப்பட்டதா இந்த இரட்டை பாறை? Al Naslaa-வின் மர்மம் என்ன?

பார்ப்பதற்கு மனிதர்கள் ஒரு முழு பாறையை இரண்டாக வெட்டியது போல இருக்கும் இது இயற்கையாக தோன்றியவை. இந்த பாறைகள் ஒவ்வொன்றும் 30 அடி உயரமும் 15 அடி அகலமும் கொண்டுள்ளன.
சவுதி அரேபியா: பேய்களால் உருவாக்கப்பட்டதா இந்த Al Naslaa இரட்டை பாறை?
சவுதி அரேபியா: பேய்களால் உருவாக்கப்பட்டதா இந்த Al Naslaa இரட்டை பாறை? ட்விட்டர்
Published on

சவுதி அரேபியா என்றதும் நம் நினைவுக்கு வருவது அங்கிருக்கும் ஆட்சி முறையும், பழமைவாத சிந்தனைகளும், பாலைவனமும் தான்.

ஆனால் அங்கு நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த அல் நஸ்லா பாறை வடிவம்.

இதனை பற்றி பெரிதும் மக்கள் கேள்விப்படாமல் இருந்திருந்தாலும், விஞ்ஞானிகள், புவியியலாளர்கள், அங்கு சென்று வரும் சுற்றுலா பயணிகள் என அனைவரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு இயற்கை மர்மம்.

சவுதி அரேபியாவின் அல்-உலா கவர்னரேட்டின் டைமா ஒயாசிஸில் அமைந்துள்ளது இந்த அல் நஸ்லா பாறை வடிவம். இந்த பாறையானது சற்றே குழப்பக்கூடிய விதத்தில் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

அருகருகே, மிகச் சிறிய இடைவெளியுடன், இரண்டு பாறைகள் செங்குத்தாக தூண்களை போல நிற்கின்றன. இந்த பாறைகளுக்கு அடியில், சிறிய குன்று வடிவத்தில் இடைவெளி இருக்கிறது.

பார்ப்பதற்கு மனிதர்கள் ஒரு முழு பாறையை இரண்டாக வெட்டியது போல இருக்கும் இவை இயற்கையாக தோன்றியவை. இந்த பாறைகள் ஒவ்வொன்றும் 30 அடி உயரமும் 15 அடி அகலமும் கொண்டுள்ளன.

இந்த பாறைகள் பார்க்க காற்றில் பறப்பது போல இருக்கின்றன. எப்படி, இந்த கனமான பாறை நிற்கிறது என்பதே அதிசயமாக இருக்கிறது.

சவுதி அரேபியா: பேய்களால் உருவாக்கப்பட்டதா இந்த Al Naslaa இரட்டை பாறை?
பேய்களால் கட்டப்பட்ட இந்திய சிவன் கோவில் குறித்து தெரியுமா?எங்கு இருக்கிறது?

இந்த பாறை எப்படி தோன்றியது என்பது அறியப்படாத மர்மமாகவே இருக்கிறது.

சில புவியியலாளர்கள் இது மில்லியன் ஆண்டுகளாக ஏற்பட்ட மண் அரிப்பின் விளைவு என்கின்றனர். காற்று, தண்ணீர், வெப்பநிலையில் மாற்றம் போன்றவை இந்த பாறை உருவாக காரணமாக இருந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

ஒரு மிக வலுவான நிலநடுக்கம் இந்த பாறையை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு தரப்பு சொல்கிறது.

உள்ளூர் வாசிகளின் கூற்றுகளின் படி, இந்த பாறையை தீயசக்திகள் உருவாக்கியிருக்கலாம் என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இந்த பாறை இருக்கும் இடத்திற்கு நம்மால் எளிதாகவே செல்ல முடிகிறது. அப்படி புதிதாக செல்கிறவர்கள் என்றால், இந்த இடத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல கைடுகள்(Guide) இருக்கின்றனர்.

சவுதி அரேபியா: பேய்களால் உருவாக்கப்பட்டதா இந்த Al Naslaa இரட்டை பாறை?
ஏலியன்களால் உருவாக்கப்பட்டதா இந்த கடலுக்கடியில் இருக்கும் மர்மம்? அறிவியல் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com