நாய்கள் ஏன் தலையை ஒரு பக்கமாக சாய்க்கின்றன? - அறிவியல் சொல்லும் காரணம்

ஹங்கேரியில் உள்ள இயோட்வோஸ் லோரண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இதற்கான விடை கிடைத்திருக்கிறது.
நாய்கள் ஏன் தலையை ஒரு பக்கமாக சாய்க்கின்றன? அறிவியல் சொல்லும் காரணம்
நாய்கள் ஏன் தலையை ஒரு பக்கமாக சாய்க்கின்றன? அறிவியல் சொல்லும் காரணம்canva
Published on

நாம் வளர்க்கும் நாய்கள் ஏன் சமயத்தில் தலையை ஒரு பக்கமாக சாய்த்து நம்மை பார்க்கின்றன என்பதற்கான அறிவியல் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செல்ல பிராணிகளின் நடவடிக்கைகள் பல சமயங்களின் நமக்கு புரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் நாய்கள் ஒரு பக்கமாக தலையை சாய்த்துக்கொள்வது. இந்த வழக்கத்தை நாம் பெரும்பாலும் கவனித்திருந்தாலும், அதற்கான காரணத்தை நாம் எப்போதும் யோசித்ததில்லை.

ஹங்கேரியில் உள்ள இயோட்வோஸ் லோரண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இதற்கான விடை கிடைத்திருக்கிறது.

நாய்களிடம் பொம்மைகள் போன்றவற்றை காண்பித்து இந்த ஆய்வினை அவர்கள் மேற்கொண்டனர். அதில், நாய்கள் தலையை ஒரு புறமாக சாய்ப்பது அவை “கவனம் செலுத்துவதற்கான” அறிகுறியாக இருக்கலாம் என்று கனடறியப்பட்டுள்ளது.

பல நாய்களால் இரண்டுக்கு மேலான பொம்மைகளின் பெயர்களை நினைவுக்கூர முடியவில்லை எனவும், பார்டர் கோலி வகை நாய்களால் 10 வகையான பெயர்களை நினைவுக்கூர முடிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிலும், ஒரு சில நாய்களால் மட்டுமே நாம் சொல்லும் வார்த்தையின் அர்த்ததை புரிந்துகொண்டு சரியான பொம்மையை தேர்வு செய்யமுடிந்துள்ளது. நாய்கள் பொம்மையை கவனிக்கும் போது தலை சாய்ப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாய்கள் ஏன் தலையை ஒரு பக்கமாக சாய்க்கின்றன? அறிவியல் சொல்லும் காரணம்
Rege-Jene : உலகின் அழகான நபர் இவர்தானா? அறிவியல் சொல்வதென்ன?

ஆனால், மற்றொரு புறம் இணையதளத்தில் நாய்கள் ஏன் ஒரு பக்கமாக தலையை சாய்க்கின்றன என்பதற்கு பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டன.

டைம்ஸ் நவ் தளத்தின் அறிக்கையின் படி, ஒரு சில ஆய்வுகளில் நாய்கள் இன்னும் சிறப்பாக செவி சாய்க்க தலையை சாய்க்கிறது எனவும், மற்ற சில ஆராய்ச்சிகள் நாய்கள் தங்களின் மூக்கை தாண்டி பார்வையை செலுத்த இவ்வாறு செய்கின்றன எனவும் கூறின.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஆரம்ப நிலையில் தான் இருக்கின்றன எனவும், மேலும் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த கட்ட ஆய்வில், தலையை சாய்ப்பதற்கான காரணம் வார்த்தைகளை பழகுவதற்காகவா, நினைவுக்கூருதலா அல்லது முன்பே கணித்தது போல கவனம் செலுத்தவா என்பது கண்டறியப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது .

நாய்கள் ஏன் தலையை ஒரு பக்கமாக சாய்க்கின்றன? அறிவியல் சொல்லும் காரணம்
பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன? அறிவியல் கூறும் காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com