ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பாழடைந்த வௌவால் குகையில் பழமையான காலணிகள் கிடைத்துள்ளன. இந்த காலணிகள் இதுவரை ஐரோப்பாவில் கிடைத்ததிலேயே பழமையானவையாக கருதப்படுகின்றன.
புதையுண்டு கிடந்த இந்த காலணிகளின் வயது கிட்டத்தட்ட 6,200 ஆண்டுகள். இந்த கண்டுபிடிப்புகள் குறித்து சையின்ஸ் அட்வான்சஸ் என்ற இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.
அதன்படி, கிராணடா என்ற நகருக்கு அருகில் உள்ள வௌவால் குகையில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செருப்புகள், கருவிகள் மற்றும் கூடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்த குழுவினர் மிகவும் பழமையான ஒரு பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
ரேடியோகார்பன் முறைப்படி 76 பொருட்களின் வயதைக் கண்டறிந்தனர். இதில் 22 செருப்புகளும் அடங்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட ஆப்பிரிக்கா மற்றும் ஐபீரிய தீபகற்ப பகுதிகளில் பயன்படுத்தப்படும் புற்களை பயன்படுத்தி செருப்புகளும் கூடைகளும் பின்னப்பட்டிருந்தன.
இதேபோன்ற செருப்புகள் அர்மேனியாவிலும் கண்டறியப்பட்டிருக்கின்றன. அவை 5,500 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. இந்த செருப்புகள் பனிமனிதர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய தரமான கூடைகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்றால், விவசாயம் தொடங்கப்படுவதற்கு முன்னர் ஐரோப்பாவின் நாகரீகம் பற்றிய முந்தைய கருதுகோள்கள் மீது கேள்வி எழுப்புவதாக கூறுகின்றனர்.
இந்த செருப்புகளில் பக்கவாட்டு வார்கள் மற்றும் கணுக்காலில் கட்டப்படும் வார்களும் இருந்துள்ளன. சில செருப்புகளில் முன்னர் பயன்பட்டிருப்பதற்கான தடயங்களை கண்டறிந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த குகையில் இருந்த இன்னும் சில பொருட்கள் 9,500 ஆண்டுகள் வரை பழமையானவையாக இருந்திருக்கின்றன.
இந்த ஆய்வில் வரலாற்றாசிரியர்கள், புவியியலாளர்கள் உட்பட பல்வேறுதுறைகளைச் சேர்ந்த 20 நிபுணர்கள் பங்கெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust