Google : எந்தெந்த விஷயங்களைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும்?

தேடப்படும் தகவல்கள் அனைத்தும் நல்ல விஷயங்களுக்காக தான் தேடப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. ஒவ்வொரு நாளும் பல சட்டத்துக்கு புறம்பான தகவல்களும் கூகுள் செய்யப்படுகின்றன.
Google : எந்தெந்த விஷயங்களைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும்?
Google : எந்தெந்த விஷயங்களைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும்?twitter
Published on

நம் டிஜிட்டல் வாழ்க்கையில் எல்லா சந்தேகங்களுக்கும் கூகுளில் தான் பதில் தேடுகிறோம். ஒரு நாளுக்கு சராசரியாக 8.5 பில்லியன் தேடல்கள் கூகுளில் நடக்கிறது. உலகம் முழுவதுமிருக்கும் மக்களுக்கு தகவல்களை வழங்கி வருகிறது கூகுள்.

தேடப்படும் தகவல்கள் அனைத்தும் நல்ல விஷயங்களுக்காக தான் தேடப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. ஒவ்வொரு நாளும் பல சட்டத்துக்கு புறம்பான தகவல்களும் கூகுளில் தேடப்படுகின்றன.

சில விஷயங்களை கூகுளில் தேடுவது குற்றமாக கருதப்படுகிறது. அவை என்ன எனப் பார்க்கலாம்.

Gun
GunPixabay

வெடி குண்டு அல்லது துப்பாக்கி தயாரிப்பது எப்படி?

சுயாதீனமாக ஆயுதங்கள் தயாரிப்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. கூகுளில் சில தளங்கள் இதற்கான வழிமுறையை கொடுக்கின்றன. இதனால் பல அசம்பாவிதங்கள் அரங்கேறுகிறது. அரசாங்கம் ஆயுதங்கள் குறித்த தேடல்களை கண்காணித்து வருகிறது. இவை குறித்து தேடுபவர்கள் குற்ற நடவடிக்கைகாக சந்தேகிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் தொடர்பான குற்றங்கள்

கூகுளில் அதிகம் தேடப்படும் இணையத்தளங்களில் முதல் 10 இடங்கள் ஆபாசப்படங்களுக்கான வலைத்தளமாக இருக்கிறது. இந்திய அரசு ஆபாசப்படங்கள் பார்ப்பதனை தடை செய்திருக்கிறது.

குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்களைத் தேடினாலோ அல்லது பகிர்ந்தாலோ சட்டப்படி தண்டனை கிடைப்பது நிச்சயம்.

Google : எந்தெந்த விஷயங்களைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும்?
ஹேக்கருக்கு ரூ.2 கோடி அனுப்பிய கூகுள் நிறுவனம் - ஓஹோ இதுதான் காரணமா?
Hack
HackCanva

பைரஸி

புதிய படங்கள், பாடல்கள் வெளியானதும் அவற்றை சட்டத்திற்கு புறம்பாக பதிவிறக்கம் செய்வது குற்றமாக கருதப்படுகிறது.

பைரஸி செய்யும் வலைத்தளங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திரைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி தரவிறக்குவதும் சட்டத்துக்கு புறம்பானது தான்.

Google : எந்தெந்த விஷயங்களைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும்?
விளம்பர வருவாய் : சன் டிவியை பின்னுக்கு தள்ளிய ஃபேஸ்புக், கூகுள் | Video

ஹேக்கிங்

தொழில்நுட்ப உலகில் ஹேக்கிங் குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்குமே இருக்கிறது. இந்த ஆர்வம் காரணமாக நீங்கள் ஹேக்கிங் தொடர்பானவற்றை கூகுளில் தேடினால் கண்காணிக்கப்படுவீர்கள்.

இவை தவிர பல தேடல்கள் அரசால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சட்ட விரோத செயல்களுக்கு துணை செல்வது போன்ற தேடல்களில் ஈடுபடுபவர்கள் சைபர் கிரைமில் தண்டனை பெறுவது நிச்சயம்.

Google : எந்தெந்த விஷயங்களைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும்?
Google : ஒரே வாரத்தில் இரண்டு பெரிய அபராதங்கள்- என்ன தவறு செய்தது கூகுள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com