உலகின் விநோதமான வழக்கங்களில் சற்றே அருவருக்கத்தக்க வழக்கமாக இருக்கிறது இந்த சுவற்றில் பப்புள் கம்மை ஒட்டுவது.
ஆனால் இது ஒரு மறைக்கப்பட்ட கலைப் படைப்பு என்கின்றனர் இதனை பற்றி அறிந்தவர்கள்.
சாதாரணமாக பப்புள் கம் சாப்பிட்டால் அதனை ஒரு டிஷு பேப்பரில் சுற்றி தூக்கி எறிவது நாகரீகம். ஆனால், நமக்கு அவ்வளவு நேரம் இருக்காது, அதனால் தெருக்களில் அப்படியே துப்பி விடுவோம். அது அடுத்தவர் காலில் ஒட்டும்
சிறுவயதில் அதனை சுவற்றின் மீதோ, பெஞ்சுக்கு அடியிலோ, பஸ் கம்பிகளிலோ ஒட்டுவோம் ( இன்றும் இந்த பழக்கமுடையவர்கள் உள்ளனர்).
இதனை கொஞ்சம் அசிங்கமான செயலாக தான் பார்க்கிறோம். ஆனால் அமெரிக்காவிலுள்ள ஒரு இடத்தில், மென்ற பப்புள் கம்மை சுவற்றில் ஒட்டும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. இது அமெரிக்காவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றும் கூட
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியிலுள்ள சியாட்டில் என்ற இடத்தில் இருக்கிறது பைக் பிளேஸ் மார்க்கெட். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்தையில் ஒரு செங்கல் சுவர் இருக்கிறது. இதனை கம் வால் - Gum Wall என்கின்றனர்
இங்கு வரும் மக்கள், சுற்றுலா பயணிகள் குறிப்பாக, அந்த சுவற்றில் அவர்கள் வாயில் போட்டு மென்ற பப்புள் கம்மை ஒட்டுகின்றனர்.
பப்புள் கம்மை ஒட்டுவதற்காகவும், ஒட்டி வைக்கப்பட்டுள்ள பப்புள் கம்களை பார்ப்பதற்காகவும் இங்கு கூட்டம் கூடுகிறது.
சிலர் ஒரு படி மேலே சென்று இந்த பப்புள் கம் மூலம் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு செய்திகள் அனுப்புகின்றனர்.
யாரோ இருவர் பப்புள் கம்மை வைத்து, “மேரி மீ?” என்று கேட்டிருந்தார். ஒரு தம்பதி அவர்களுக்கு குழந்தை பிறக்கவுள்ளதை அறிவித்திருந்தனர். ஹார்ட் வடிவம் போடப்பட்டு அம்பு குறிகள் விடப்பட்டிருந்தது
சுமார் 1990களில் இந்த பகுதிக்கு அருகில் இருந்த தியேட்டரில் நிகழ்ச்சிகளை பார்க்க நீண்ட நேரம் காத்திருக்கும் போது சாதாரணமாக கம்மை ஒட்டியுள்ளனர். விளையாட்டாக ஆரம்பித்த இந்த விஷயம் அப்படியே எல்லோரும் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு, சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இந்த சுவற்றை சுத்தம் செய்தனர். ஸ்டீம் க்ளீனிங் செய்யப்பட்டது. ஆனால் ஒரு சில நாட்களிலேயே மீண்டும் மக்கள் சுவற்றின் மேல் பப்புள் கம் ஒட்டத் தொடங்கிவிட்டனர்.
இந்த சுவர் சுமார் 50 அடி நீளமுடையது. இங்கு பப்புள் கம்மை ஒட்டுபவர்கள் எங்கு இடம் இருக்கிறது என்பதை தேடி தேடி பார்த்து ஒட்டுக்கின்றனர்.
சிலர் சுவற்றின் உயரமான பகுதிகளை தேடியும் ஒட்டுகின்றனர், இப்படி பப்புள் கம்கள் ஒட்டப்பட்டுள்ளதால், அந்த சுவரே வண்ணமயமாக உள்ளது. இது ஒரு முக்கிய செல்ஃபீ பாயிண்ட்டாகவும் மாறியுள்ளது.
என்னதான் இந்த இடத்திற்கு வர மக்கள் அதீத ஆர்வம் கொண்டிருந்தாலும், இது நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒரு வழக்கம் தான் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust