உலகளாவிய வறுமை ஒழிப்பு தொண்டு நிறுவனமாக ஆக்ஸ்ஃபாம் சமீபத்தில் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையின் படி, 2020ம் ஆண்டில் இருந்து உலகின் டாப் 5 பணக்காரர்கள் தங்களது செல்வத்தை இரண்டு மடங்கு பெருக்கியுள்ளனர்.
அதேவேளையில் உலகம் முழுவதும் 500 கோடி மக்கள் தங்களது பொருளாதாரத்தை இழந்து ஏழைகளாகியிருக்கின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் மாறும் பொருளாதார நிலை தொடர்கிறது.
அரசாங்கங்கள் பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்குள் அதிகரித்துவரும் செல்வ இடைவெளியை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆக்ஸ்பாம் நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது.
சந்தையில் ஒற்றை அதிகாரம் செய்யும் மோனோபோலிகளை உடைக்கவும், அதிகப்படியான லாபம் மற்றும் சொத்துகளுக்கு வரிவிதிக்கவும், தொழிலாளர் உரிமைகள் பங்குதாரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் முறைக்கு மாற்றுகளை ஆராயவும், உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஆழமான வேரூன்றிய ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிப்பதற்கான வரைபடத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust