தொழிலாளர்கள் : 8 மணிநேர வேலை உரிமை எப்படி கிடைத்தது தெரியுமா? - ஒரு வரலாற்று பார்வை!

இதே திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு முன்மொழிந்ததும், 2020-ல் அதிமுக முன்மொழிந்ததும் குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது இதே திட்டத்தை திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் எதிர்த்ததை நினைவுகூறவேண்டும்!
தொழிலாளர்கள் : 8 மணிநேர வேலை உரிமை எப்படி கிடைத்தது தெரியுமா? - ஒரு வரலாற்றுப் பார்வை!
தொழிலாளர்கள் : 8 மணிநேர வேலை உரிமை எப்படி கிடைத்தது தெரியுமா? - ஒரு வரலாற்றுப் பார்வை!Twitter

சாதி, மதம், இனம், மொழி, நிறம் என பல வேறுபாடுகளாலும் ஏற்றத்தாழ்வுகளாலும் நம் சமூகம் நிறைந்திருந்தாலும் என்றும் மாறாத ஏற்றத்தாழ்வாக மனித இனத்தைத் துரத்திக்கொண்டிருப்பது முதலாளி - தொழிலாளி வேறுபாடுதான்.

மனித இனத்தின் வரலாறு என்பது இந்த இரண்டு இனங்களுக்கு இடையிலான போராட்டமே என்றால் மிகையாகாது.

இதனால் தான் திமுக அரசு கொண்டுவந்த பல மசோதாக்களுக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும், பெரும் வெறுப்பு அலையை உருவாக்கியிருப்பது 12 மணி நேர வேலை என்ற மசோதா தான்.

ஏனெனில் 8 மணிநேர வேலை என்பது தொழிலாளர்கள் பல நூற்றாண்டு போராட்டத்துக்கு பிறகு பெற்றெடுத்த உரிமை. 8 மணிநேர வேலை என்ற உரிமையை நிலைநாட்ட தொழிலாளர் வர்க்கம் செய்த போராட்டங்களையும் தியாகங்களையும் பார்க்கலாம்.

16ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் தான் 8 மணிநேர வேலை இயக்கம் தொடங்கப்பட்டது. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் ஒவ்வொரு பெரிய எந்திரத்தையும் இயக்க மனிதர்கள் பெரும்பாடு படவேண்டும்.

இந்தியா உட்பட பல நாடுகளில் தொழிலாளர்கள் அடிமைகளாகவும் கொத்தடிமைகளாகவும் இருந்தனர்.

18ம் நூற்றாண்டில் பல நாடுகளில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டங்கள் எழுந்தன. மேற்குநாடுகளில் கருப்பின அடிமை முறைக்கு எதிரான சிந்தனை எழுந்தது.

அதேக்காலத்தில் தான் தொழிற்புரட்சியும் நடந்தது. தொழிற்சாலைகள் நாட்டை வல்லமையாக்கும் திறன்கொண்டவை என அரசுகள் முழங்கின.

முதலாளிகள் அரசுக்கு பக்கபலமாக இருப்பதாக கூறிக்கொண்டு அரசு காக்கவேண்டிய மக்களை நசுக்கி பிழிந்தெடுத்தனர்.

தொழிலாளி வர்கத்தில் பிறக்கும் ஒருவனுக்கு உழைப்பதைத் தவிர வேறெதற்கும் உரிமை இல்லை எனும் நிலை தான் இருந்தது.

பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற பல நாடுகளில் தொழிலாளிகள் 12 முதல் 16 மணிநேரம் வரை மிகச்சொற்பமான ஊதியத்துக்காக கசக்கிப் பிழியப்பட்டனர். இதை எதிர்த்து அந்தந்த நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன.

இந்த கொடுமைகளை எதிர்த்து 1820,30களில் தொழிலாளர்கள் 10 மணிநேரம் வேலை என்ற முழக்கத்தை வைத்தனர்.

தொடர்போராட்டங்களுக்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு 10 மணிநேர வேலை கொடுக்கப்பட்டது. ஆனால் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இதனால் எந்த நன்மையும் விளையவில்லை.

8 மணிநேர வேலை கோரிக்கையே ரஷ்ய புரட்சிக்கு வித்திட்டு சோவியத் யூனியன் உருவாக காரணமானது.

அமெரிக்காவில் வெடித்த போராட்டங்கள்

அமெரிக்காவில், 1886 மே 3-ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ பேரெழுச்சி ஏற்பட்டது.

வேலை நேரக்குறைப்பை வலியுறுத்தி மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவன ஊழியர்கள் 3,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிர் நீத்தனர்.

இந்த படுகொலையைக் கண்டித்து ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.

ஆனால் அங்கு திடீரென நடந்த குண்டு வெடிப்பால் கலவரம் ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்கள் (தொழிலாளர்கள்) மீது தாக்குதல் நடத்தி, தொழிலாளர்கள் தலைவரை கைது செய்தனர். இந்த நிகழ்வை ஹேமார்கெட் படுகொலை என்கின்றனர்.

Karl Marx
Karl Marx

கைது செய்யப்பட்டவர்களில் 7 பேருக்கு முதலாளித்துவ அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நவம்பர் 11, 1887ல் அவர்களில் 4 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

இவர்களின் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே பங்கேற்றது. குறைந்தது 5 லட்சம் மக்கள் அணி திரண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிச அமைப்புகளின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. இதற்கு பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தலைமைத்தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்கள் : 8 மணிநேர வேலை உரிமை எப்படி கிடைத்தது தெரியுமா? - ஒரு வரலாற்றுப் பார்வை!
B R Ambedkar : பெண்கள், தொழிலாளர்களுக்கான அம்பேத்கர்! - நீங்கள் அறியாத 10 குறிப்புகள்

இதில் 18 நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் சிகாகோ படுகொலைகள் கண்டிக்கப்பட்டது.

1890 மே 1 அன்று உலக தொழிலாளர் இயக்கத்தை நடத்தவும் அறைகூவல் விடுக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் முன்மொழிந்த 8 மணி நேரம் வேலைத் திட்டத்தை நோக்கி போராட்டங்கள் நடத்தவும் உறுதிபூண்டனர்.

இதன் விளைவாக பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிலாளர் அமைப்புகளும் 8 மணி நேரத்தை முன்வைத்து போராட்டங்களை நடத்தினர்.

workers
workersTwitter

ஆஸ்திரேலியாவில் 1896-ம் ஆண்டு கட்டிடத் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை வேண்டி தொடர்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர்.

1919-ல் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வாரத்துக்கு 40 மணிநேரம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்போது 8 மணிநேர வேலை என்ற உரிமையை வென்றதற்காக 80 நாடுகளில் மே 1 தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

தொழிலாளர்கள் : 8 மணிநேர வேலை உரிமை எப்படி கிடைத்தது தெரியுமா? - ஒரு வரலாற்றுப் பார்வை!
நீங்கள் '1 மில்லியன் டாலர்' சம்பாதிக்க எவ்வளவு காலம் ஆகலாம்? - சமீபத்திய ஆய்வு சொல்வதென்ன?

இந்தியாவில்...

இந்தியாவில் சிங்காரவேலர் என்ற தமிழர் தான் மே தினத்தில் மெரினாவில் செங்கொடி ஏற்றி முதல் முறையாக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடினார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தினமும் 14 சுரண்டப்பட்டு வந்த இந்திய தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தார் டாக்டர் அம்பேத்கர்.

ஆங்கிலேய வைஸ்ராய் சபையில் தொழிலாளர் துறை அமைச்சராக நான்காண்டுகள் பதவி வகித்தபோது, தொழிலாளர்களின் நலன் காக்க 8 மணி நேர வேலை உரிமையை 1945 நவம்பர் 28 அன்று டாக்டர் அம்பேத்கர் பெற்றுத்தந்தார்.

தொழிலாளர்கள் : 8 மணிநேர வேலை உரிமை எப்படி கிடைத்தது தெரியுமா? - ஒரு வரலாற்றுப் பார்வை!
Silk Road History : ஐரோப்பாவையும் சீனாவையும் இணைத்த பட்டுவழிச் சாலையின் வரலாறு

பல போராட்டங்கள், தியாகங்கள், மார்க்ஸ் முதல் அம்பேத்கர் வரையிலான தலைவர்களின் வழிகாட்டலால் பெற்ற 8 மணிநேர வேலை எனும் உரிமையை தொழிலாளர்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பது நேற்று எழுந்த எதிர்பலைகள் மூலமாக கண்டுகொள்ள முடிகிறது.

இதே திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு முன்மொழிந்ததும், 2020-ல் அதிமுக முன்மொழிந்ததும் குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது இதே திட்டத்தை திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் எதிர்த்ததை நினைவுகூறவேண்டும்!

தொழிலாளர்கள் : 8 மணிநேர வேலை உரிமை எப்படி கிடைத்தது தெரியுமா? - ஒரு வரலாற்றுப் பார்வை!
New York: உலகின் பணக்கார நகரமாக உருவானது எப்படி?ஆச்சரிய வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com