அருவி முதல் வீடியோ கேம் வரை: உலகின் சிறந்த விமான நிலையம் இதுதான்- என்னென்ன வசதிகள் உள்ளது?

இந்த விமான நிலையம் பாதி விமான நிலையமாகவும் மீதி ஒரு பொழுதுபோக்கு பூங்காவாகவும் செயல்படுகிறது. இங்கு நம்மால் படங்கள் பார்க்க முடியும். இலவசமாக வீடியோ கேம்கள் விளையாட முடியும் இன்னும் பல விஷயங்களைப் பார்க்கலாம்....
அருவி முதல் வீடியோ கேம் வரை: உலகின் சிறந்த விமானநிலையம் இதுதான் - என்னென்ன வசதிகள் உள்ளது?
அருவி முதல் வீடியோ கேம் வரை: உலகின் சிறந்த விமானநிலையம் இதுதான் - என்னென்ன வசதிகள் உள்ளது?Twitter

உலகிலேயே சிறந்த ஏர்போர்ட்டாக பலராலும் கருதப்படுவது சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தான். ஸ்கைட்ராக்ஸ் எனும் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஏர்போர்ட்காளுக்கு விருதுகளை வழங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விருதுகளை வெல்லாத நிலையில் 2023ம் ஆண்டின் சிறந்த விமான நிலையமாக சாங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த விமானநிலையம், விருது என பில்டப் கொடுக்கும் அளவுக்கு அந்த விமான நிலையத்தில் என்னதான் ஸ்பெஷல் எனப் பார்க்கலாம்.

செக்-இன், விமானங்கள் வருகை, இடமாற்றங்கள், உணவு மற்றும் சில்லறை வியாபாரங்கள், பாதுகாப்பு மற்றும் குடியேற்றம், புறப்படும் அனுபவம் என பலவற்றில் சிறந்து விளங்கியதால் இந்த விமான நிலையத்துக்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. 

இந்த விமான நிலையம் பாதி விமான நிலையமாகவும் மீதி ஒரு பொழுதுபோக்கு பூங்காவாகவும் செயல்படுகிறது. இங்கு நம்மால் படங்கள் பார்க்க முடியும். இலவசமாக வீடியோ கேம்கள் விளையாட முடியும் இன்னும் பல விஷயங்களைப் பார்க்கலாம்....

இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் இருக்கின்றன. சின்ன சின்ன விஷயங்களையும் பொழுது போக்கு நிறைந்ததாக மாற்றுகின்றனர்.

இங்குள்ள சைக்கிளில் பெடல் செய்து ஃபோனை சார்ஜ் செய்யலாம். மேல் தளத்திலில் இருந்து கீழே சருக்கிக்கொண்டு வரலாம் (90’ஸ் கிட்ஸ்களுக்கு நிச்சயம் புடிக்கும்).

அருவி முதல் வீடியோ கேம் வரை: உலகின் சிறந்த விமானநிலையம் இதுதான் - என்னென்ன வசதிகள் உள்ளது?
Travel: ரூ.8 லட்சம் விமான டிக்கெட் வெறும் 24ஆயிரம் தானா? ஜப்பானியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

உலகிலேயே மிகப் பெரிய உள் அரங்க நீர்வீழ்ச்சி இங்கு தானிருக்கிறது. இங்கு பல தோட்டங்கள் இருக்கின்றன. 

கனவில் இருப்பது போலத் தோன்ற வைக்கும் பட்டாம்பூச்சித் தோட்டம், கள்ளிச்செடித் தோட்டம், சூரிய காந்தி தோட்டம் கூட இருக்கிறது. இவை உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கும். 

இந்த தோட்டத்தின் மேலே உள்ள வலையில் நடப்பது அட்வன்சர் பயணம்போல இருக்கும்.நீங்கள் விமானங்களில் பயணம் செய்யக் கூடியவராக இருந்தால் நிச்சயமாக சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமானநிலையத்தைப் பார்வையிடத் தவறாதீர்கள்.

அருவி முதல் வீடியோ கேம் வரை: உலகின் சிறந்த விமானநிலையம் இதுதான் - என்னென்ன வசதிகள் உள்ளது?
என்னது இங்கலாம் ஏர்போர்ட்டே இல்லையா? விமான நிலையங்கள் இல்லாத நாடுகள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com