இந்த டாய்லட்டை பயன்படுத்த தண்ணீரே தேவையில்லை - எப்படி சாத்தியம்?

தண்ணீரை சேமிக்க புதிய வழியை வான்வைவ்ஸ் என்ற தம்பதி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் இயந்திரமானது, மலத்தை எரித்து சாம்பலாக மாற்றுகிறது.
இந்த டாய்லட்டை பயன்படுத்த தண்ணீரே தேவையில்லை - எப்படி சாத்தியம்?
இந்த டாய்லட்டை பயன்படுத்த தண்ணீரே தேவையில்லை - எப்படி சாத்தியம்? canva
Published on

கழிப்பறைகளில் நாம் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு, மற்ற இடங்களை விட சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம். இதனால், தண்ணீரை மிச்சப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

ஒரு தம்பதி, இயற்கையை பாதுகாக்கும் நோக்கில், குளித்துமுடித்த தண்ணீரை குடிக்கும் நீராக மாற்றி பயன்படுத்திய செய்தி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கழிப்பறையுடன் கை கழுவும் தொட்டியும் இணைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்படியிருக்க, தண்ணீரை சேமிக்க புதியதோர் வழியை வான்வைவ்ஸ் என்ற தம்பதி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள கழிவறை இருக்கை இயந்திரமானது, மலத்தை எரித்து சாம்பலாக மாற்றுகிறது.

இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள இந்த வீடியோ இணையவாசிகளை கவர்ந்தது மட்டுமல்லாமல், இதன் செயல்முறை எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது.

வெறும் ஒரு பட்டனை தட்டினால், மனிதக் கழிவு எரிந்து சாம்பலாகிறது. குறிப்பாக இவை துர்நாற்றம் வீசாத வண்ணம் சாம்பலாக மாறும் விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த டாய்லட்டை பயன்படுத்த தண்ணீரே தேவையில்லை - எப்படி சாத்தியம்?
சிங்கப்பூர்: புதிய வகை கரப்பான் பூச்சி கண்டுபிடிப்பு - pokemon பெயர் வைத்தது ஏன் தெரியுமா?

அந்த போஸ்ட்டிற்கு கீழ் “உங்களால் மலத்தை எரிக்க முடியும் என்றோ, அதனை கைகளால் தீண்ட முடியும் என்றோ, முக்கியமாக அது துர்நாற்றம் வீசாது என்பதையோ நீங்கள் எப்போதாவது சிந்தித்து பார்ததுண்டா? #எதிர்காலம்” என்று கேப்ஷனிடப்பட்டிருந்தது.

இதன் செயல்முறை விளக்கமும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இயந்திரத்தின் பெயர் சிண்டரெல்லா இன்சினரேஷன் டாய்லட் சீட்.

இந்த டாய்லட் சீட்டில் ஒரு லைனரை பொறுத்தவேண்டும். இந்த லைனரில் கழிவு சேகரிக்கப்படும். பின்னர் டாய்லட் சீட்டை மூடிவிட்டு, பட்டனை அழுத்தினால், அது எரிந்து சாம்பலாகிறது. சாம்பலை நாம் பின்னர் அப்புறப்படுத்திக்கொள்ளலாம். கிருமிகளும் அண்டாதாம்!

இந்த டாய்லட்டை பயன்படுத்த தண்ணீரே தேவையில்லை - எப்படி சாத்தியம்?
Health: மலத்தை முகர்ந்து பார்த்தால் ரூ.1.5 லட்சம் சம்பளமா?ஆள் தேடும் நிறுவனம்! எங்கே? ஏன்?

இந்த இயந்திரமானது கேஸ் அல்லது மின்சாரத்தை பயன்படுத்தி செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

இந்த டாய்லட்டை பயன்படுத்த தண்ணீரே தேவையில்லை - எப்படி சாத்தியம்?
டாய்லெட் பேப்பர் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? ஒரு சுவாரஸ்ய வரலாறு | Podcast

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com