சிங்கப்பூர்: புதிய வகை கரப்பான் பூச்சி கண்டுபிடிப்பு - pokemon பெயர் வைத்தது ஏன் தெரியுமா?

சிங்கப்பூரில் ஒரு புதிய வகை கரப்பான்பூச்சியைக் கண்டுபிடித்ததோடு அதற்கு உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன்களில் ஒன்றான போகிமானில் இருந்து ஃபேரமோசா (Pheromosa) எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் சிங்கப்பூர் விஞ்ஞானிகள்.
சிங்கப்பூர்: புதிய வகை கரப்பான் பூச்சி கண்டுபிடிப்பு
சிங்கப்பூர்: புதிய வகை கரப்பான் பூச்சி கண்டுபிடிப்பு Twitter
Published on

மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தை எந்த ஒரு காலகட்டத்திலும், அவனால் அல்லது அவளால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு அனுதினமும் ஒரு புதிய சான்று கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும் நாம் அறிந்து தெரிந்து கொண்டுவிட்டோம் என்பதை எவராலும் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. அப்படி ஒருவர் சொல்ல வாய் திறப்பதற்குள், உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பு நிகழ்ந்து விடுகிறது.

சிங்கப்பூரில் ஒரு புதிய வகை கரப்பான்பூச்சியைக் கண்டுபிடித்ததோடு அதற்கு உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன்களில் ஒன்றான போகிமானில் இருந்து ஃபேரமோசா (Pheromosa) எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் சிங்கப்பூர் விஞ்ஞானிகள்.

ஏன் இப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால், அந்த கரப்பானைப் பார்க்க, அப்படியே அந்த கார்ட்டூனில் வரும் கதாப்பாத்திரம் போலவே இருந்தது என வேடிக்கையாகச் சொல்கிறார்கள்.

இந்த கரப்பானை, கடந்த 2016 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த பூச்சிகள் தொடர்பான கணக்கெடுப்பில் கண்டுபிடித்தனர். இதைப் பார்க்க வெளிப்புறத்தில் ஒரே போல இருந்தாலும், உடலின் உட்பகுதிகளைப் பார்க்கும் போது, முற்றிலும் புதிய உயிரினமாக இருந்தது கண்டுபிடித்து பதிவு செய்யப்பட்டது. அதோடு, இதற்குமுன், அது போன்ற கரப்பான்பூச்சியைப் பார்த்ததில்லை என்றும் சிங்கப்பூர் தரப்பில் பதிவு செய்யப்பட்டது.

சிங்கப்பூர்: புதிய வகை கரப்பான் பூச்சி கண்டுபிடிப்பு
ஷாருக் கான் மனைவி வடிவமைத்த குப்பைத் தொட்டி - விலை என்ன தெரியுமா?

Lee Kong Chian Natural History Museumத்தைச் ஃபு மோஷெங் (Foo Maosheng) மற்றும்

UPLB Museum of Natural History அமைப்பக்க சேர்ந்த கிறிஸ்டியன் லுக்கானஸ் (Cristian Lucañas) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கரப்பானைக் குறித்து ஒரு நீண்ட நெடிய கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

சிங்கப்பூர்: புதிய வகை கரப்பான் பூச்சி கண்டுபிடிப்பு
சீனா: புற்றுநோய் மருந்து; பசிக்கு விருந்து; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான்பூச்சிகள் உற்பத்தி!

புதிய கரப்பானைக் கண்டுபிடித்தது குறித்து, டிவிட்டர் சமூக வலைதளத்தில் ஃபு மோஷெங் தன் அதிகாரபூர்வ கணக்கில் சில படங்களோடு பகிர்ந்திருக்கிறார். அப்பதிவைக் கீழே கொடுத்திருக்கும் இணைப்பைச் சொடுக்கி பார்க்கலாம்.

அதே போல, போகிமானில் வரும் அந்த ஃபேரமோசா கதாப் பாத்திரம் எப்படி இருக்கும் என்பதை வலைதளத்தில் ஃபு மோஷெங்கின் பதிவின் கீழே ஒரு பயனர் பதிவீட்டிருக்கிறார். அந்த இணைப்பையும் கீழே கொடுத்திருக்கிறோம்.

சிங்கப்பூர்: புதிய வகை கரப்பான் பூச்சி கண்டுபிடிப்பு
டைனோசர்களுக்கு முன்பே கரப்பான் பூச்சிகள் தோன்றியதா? - ஆய்வுகள் கூறுவதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com