நேபாள் Sky Caves: மனிதனால் உருவாக்கப்பட்ட குகைகளில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன?

நீண்ட நெடு நாட்களுக்கு இந்த பகுதிக்கு மனிதர்களை அனுமதிக்கவில்லை. சமீபத்தில் தான் இந்த குகைகளை மனிதர்கள் பார்வைக்கு மீண்டும் திறந்துவிட்டனர். அப்படி என்ன இருக்கிறது இந்த குகைகளில்?
நேபாள் Sky Caves: மனிதனால் உருவாக்கப்பட்ட குகைகளில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன?
நேபாள் Sky Caves: மனிதனால் உருவாக்கப்பட்ட குகைகளில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன?twitter

இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் உலகில் அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகளில் ஒன்றாகும். பாரம்பரிய கோவில்கள் முதல் அட்வென்சர் ஸ்பாட்ஸ் வரை நேபாளத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் இடங்கள் ஏராளம்.

இங்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இந்திய ரூபாயும் செல்லும். ஆசிய நாடுகளின் பாரம்பரியத்தை கொண்டுள்ளதால், இந்தியர்களோடு ஒத்தும்போகிறது நேபாளம்.

நேபாளத்தின் கோவில்கள் பற்றிய பல பதிவுகளை வழங்கியிருக்கிறோம். இது நேபாளத்தில் இருக்கும் மற்றுமொரு முக்கிய சுற்றுலா தலத்தை பற்றிய பதிவு.

நெபாளத்தில் மிகப் பிரபலமாக இருக்கிறது வான் குகைகள் எனப்படும் Sky Caves. இவை முஸ்டாங் பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்டவை

நீண்ட நெடு நாட்களுக்கு இந்த பகுதிக்கு மனிதர்களை அனுமதிக்கவில்லை. சமீபத்தில் தான் இந்த குகைகளை மனிதர்கள் பார்வைக்கு மீண்டும் திறந்துவிட்டனர்.

அப்படி என்ன இருக்கிறது இந்த குகைகளில்?

முஸ்டாங் வான் குகைகள் அல்லது முஸ்டாங்கின் குகைக் கோவில்கள் என்று அழைக்கப்படும் இவை செங்குத்தான பள்ளத்தாக்கு சுவர்களில் உருவாக்கப்பட்டவை. மனிதர்கள் இங்கு சுமார் 10,000 குகைகளை உருவாக்கியுள்ளனர்

சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆய்வுகளை மேற்கொண்டபோது, மனித எலும்புகளை கண்டெடுத்தனர். இவை 2000 அல்லது 3000 ஆண்டுகள் பழமையானவை என்று கணிக்கப்படுகிறது

நேபாள் Sky Caves: மனிதனால் உருவாக்கப்பட்ட குகைகளில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன?
நேபாளம் : சுயம்புவாக தோன்றிய ஒரு புத்த கோவில் - ஏன் நிச்சயம் பார்வையிட வேண்டும்?

இந்த எலும்புகளில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததை இவர்கள் கண்டுபிடுத்தனர். இது போன்ற வெட்டுகள் புத்த மத வழக்கப்படி, - வான் அடக்கம் (sky burial) - ஒருவரது உடலை அடக்கம் செய்யும்போது பின்பற்றப்படும் ஒரு சடங்காகும்.

மேலும் புத்த மதத்தினை பரைசாற்றும் ஓவியங்கள், நூல்கள், சிலைகள் போன்ற கலைப்பொருட்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இதன் தேதிகள் புத்தமதம் தோன்றுவதற்கு முந்தையதாக இருக்கின்றன. இமயமலை பகுதிகளில் புத்த மதம் காலடி எடுத்துவைத்ததாக நம்பப்படும் நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவ்வழக்கம் பின்பற்றப்பட்டுள்ளதை குறிக்கிறது.

நேபாள் Sky Caves: மனிதனால் உருவாக்கப்பட்ட குகைகளில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன?
நேபாளம்: இங்கு இந்திய ரூபாய் செல்லுமா? அண்டை நாடு குறித்து அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள்

முன்னர் வடக்கு நேபாளத்தில் லோ ராஜ்ஜியமாக இருந்த முஸ்டாங் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நேபாளத்துடன் இணைக்கப்பட்டது.

குறிப்பாக மேல் மஸ்டாங் 1992 ஆம் ஆண்டு வரை தடைசெய்யப்பட்ட இராணுவமயமாக்கப்பட்ட பகுதியாக இருந்தது, இதன் காரணமாக உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இன்றும் திகழ்கிறது இவ்விடம்.

பெரும்பான்மையான மக்கள் இன்னும் பாரம்பரிய திபெத்திய மொழிகளையே பேசுகிறார்கள்

இந்த குகைகள் மனிதனால் உருவாக்கப்பட்டது தான் என்ற சான்றுகள் இருந்தாலும், யார் என்பது இன்னும் அறியப்படாத மர்மமாகவே இருக்கிறது

நேபாள் Sky Caves: மனிதனால் உருவாக்கப்பட்ட குகைகளில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன?
மகாபலிபுரம்: நூற்றாண்டுகள் பழமையான கடற்கரை கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? Wow Facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com