இந்தியாவுக்கு அருகில் இருக்கும் நாடுகளில் ஒன்று நேபாளம். இங்கு செல்ல நாம் நிச்சயம் விமானத்தில் தான் பயணிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சாலை மார்கமாகவும் செல்லலாம்.
நேபாளம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது எவரஸ்ட் மலை, அங்குள்ள பாரம்பரிய தலங்கள், விமான விபத்துகள் கூட சொல்லலாம்.
நேபாளத்தில் தலைநகர் 2ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது என்பதும், அங்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகும் என்பதும் நீங்கள் அறிவீர்களா?
நேபாளம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இந்த பதிவில்...
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு. இந்த இடம் 2ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அப்போது முதல் இங்கு மக்கள் எப்போதும் வசித்து வந்துள்ளனர்
இந்து மற்றும் புத்த மதத்தவர்கள் அதிகமாக வசிக்கும் நேபாளம் தான் ஜென் கடவுள் புத்தரின் பிறப்பிடம் என்று நம்பப்படுகிறது. தெராய் பகுதியில் உள்ள லும்பினி என்ற இடத்தில் தான் புத்தர் பிறந்ததாக கூறப்படுகிறது
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரஸ்ட் நேபாளத்தில் தான் அமைந்திருக்கிறது. இச்சிகரமானது கடல் மட்டத்திலிருந்து 8,849 மீ உயரத்தில் உள்ளது
எவரஸ்ட் தவிர நேபாளத்தில் கஞ்சஞ்சுங்கா, லோட்சே, மகாலு, தௌலகிரி, மனஸ்லு உள்ளிட்ட சிகரங்களும் உள்ளன. eight thousanders என்று அழைக்கப்படும் உலகின் 14 சிகரங்களில் 8 நேபாளத்தில் உள்ளன.
கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் மீட்டருக்கு மேல் உயரமாக உள்ள சிகரங்களை eight thousanders என்று குறிப்பிடுகிறோம்
நேபாளத்தில் 120க்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. மேலும் இங்கு வெவ்வேறு கலாச்சாரங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்
நேபாளில் மொத்தம் நான்கு பாரமபரிய தலங்கள் உள்ளன. காத்மண்டு பள்ளத்தாக்கு, லும்பினி, சித்வான் தேசிய பூங்கா மற்றும் சகர்மதா தேசிய பூங்கா
ஐந்து இந்திய மாநிலங்களுடன் எல்லையை பகிர்கிறது நேபாளம். உத்திர பிரதேசம், உத்தராகண்ட், பீகார், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம்
நேபாளத்தில் இந்திய ரூபாயை பயன்படுத்தலாம், ஆனால், பணத்தின் மதிப்பு 100 ரூபாய்க்கும் கீழ் இருக்கவேண்டும்.
மேலும் இங்கு செல்ல இந்தியர்களுக்கு டூரிஸ்ட் விசா ஆன் அரைவல் மட்டுமே போதுமானது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust