11 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மிகச் சிறிய குரங்கு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குரங்குகள் மனித இனத்தின் முன்னோர்கள் என்றுதான் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவார்கள். தற்போது மனித இனம் தோன்றியது போது இருந்த குரங்குகள் தற்போது இல்லை . ஆனால் சில இடங்களில் மனித இனத்தின் தொடக்க காலத்தில் வாழ்ந்த சில உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படு வருகின்றன.
அந்த வகையில் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மிகச்சிறிய குரங்கினத்திற்கு ரோனியஸ் மான்ஃப்ரெட்ஷ்மிடி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த குரங்கு இனம் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட குரங்கினத்தை விட மிகவும் சிறியதாக உள்ளது. இதன் எடை 10 கிலோ வரை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் கார்டியன் இதழ் கருத்தின் படி இந்த குரங்கினம் இன்றைய மனிதர்கள், கொரில்லாக்கள் மற்றும் சிம்பன்சிகளுக்கு வழிவகுத்த பரம்பரையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
உயிரியல் வல்லுநர்களின் கருத்தின்படி சுமார் 23.03 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 5.333 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்த மியோசீன் இனத்தில் வந்த இனமாக இந்த குரங்கு இருக்கலாம் என கூறுகின்றனர்.
அதே சமயம் கற்கால ஆதிமனிதன் இருந்த காலத்திலோ அல்லது மனித இனத்தின் தொடக்க காலத்திலோ இந்த மான்ஃப்ரெட்ஷ்மிடி இனம் கொஞ்சம் உயரமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விலங்கினம் மூலம் நமது முன்னோர்களை பற்றி மேலும் அறிய உதவுவதோடு மட்டுமல்லாமல், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை தெரிந்துகொள்ள புதிய வழிகளையும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலசூழ்நிலைகளை எவ்வாறு ஆதிமனிதனும் விலங்குகளும் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டன என்பதை அறிய இந்த குரங்கினம் உதவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews