சே குவேரா சுருட்டுப் பிடிக்க தொடங்கியது இதனால்தான்! - ஒரு சுவாரஸ்ய கதை

சே குவேராவின் புரட்சிகர வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கும் சுருட்டுப் பிடிக்கும் பழக்கும் எப்படி வந்தது, எப்போது வந்தது, ஏன் தொடங்கியது?
Che Guevara

Che Guevara

Twitter

Published on

உலகப்புகழ் பெற்ற புரட்சியாளர் க்யூபாவின் சே குவேரா. அவரின் வாழ்க்கை, அரசியல், மரணம் என எல்லாமுமே கொண்ட காவியத்தன்மையால் அவர் புகழ் பெற்றிருந்தார் என்றாலும் அவரின் தோற்றமும் தனிக்குணங்களும் கூட புகழுக்கான காரணங்களாக அமைந்திருக்கின்றன.

சே குவேரா என்றதுமே நமக்கு தோன்றுவது அழகான புன்னகை நிறைந்த ஒரு முகம். நட்சத்திரம் கொண்ட ஒரு தொப்பி. வாயில் ஒரு சுருட்டு. சே குவேராவின் பெரும்பாலான புகைப்படங்களில் அவர் ஒரு சுருட்டுடன்தான் காட்சி தருகிறார். சே குவேராவின் புரட்சிகர வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கும் சுருட்டுப் பிடிக்கும் பழக்கும் எப்படி வந்தது, எப்போது வந்தது, ஏன் தொடங்கியது?

Che Guevara

Che Guevara

Facebook

சே குவேரா சுருட்டுப் பழக்கம்

சே குவேராவுக்கு சுருட்டுப் பழக்கம் வெறும் போதையாக மட்டும் தொடங்கவில்லை.

ஆஸ்துமா நோயால பல காலமாக அவதிப்பட்டவர் சே குவேரா. அவரின் பால்ய காலத்திலிருந்து ஆஸ்துமா அவருடன் இருந்தது. 1956ம் ஆண்டு மெக்சிகோவிலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் பிற போராளிகளுடன் கியூபாவுக்கு படகில் பயணமானார் சே குவேரா. ஆஸ்துமா அவரைத் தாக்கியது. படகின் ஒரு மூலையில் ஒடுங்கிக் கொண்டு ஆஸ்துமாவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். மூச்சிரைப்புடன் பசி, தாகம் எல்லாமும் சேர்ந்து அவரைப் படுத்தியது.

கரை சென்றபிறகும் அவருக்கு ஆஸ்துமா சரியாகவில்லை. அவருக்கு உதவிய சகபோராளிகளிடம் அவர் ‘இங்கு நான் போராட வந்தேன். என்னை யாரும் பராமரிக்க வேண்டாம்’ என்று கூட கோபப்பட்டிருக்கிறாராம். பல நேரங்களில் அவரை சகப் போராளிகள் சுமந்து செல்லும் நிலைதான் இருந்தது. இறந்து விடுவோம் என அவர் நம்பத் துவங்கியிருக்கிறார்.

மலைகளில் போராட்டக் குழு பயணித்துக் கொண்டிருந்தபோதுதான் ஒரு விவசாயியை அவர் சந்திக்க நேர்ந்தது. மூச்சிரைப்பு நோயை குணமாக்க அவர் ஒரு வழி சொன்னார். நாட்டு மருத்துவத்தின்படி ‘கம்பானா’ வகை மலர்களை புகைத்தால் ஆஸ்துமா சரியாகும் என்றார். அது பெரிதாக சே குவேராவுக்கு உதவவில்லை. ஆனால் முதன்முறையாக சே குவேரா புகைப்பிடிக்கத் தொடங்கியது அப்படித்தான். அப்போது அவருக்கு வயது 28.

Che Guevara

கே எஸ் பாராக் : வேலையை இழந்த இந்தியர் ஐக்கிய அரபு அமீரகத்தின் மில்லியனர் ஆன கதை

Che Guevara

Che Guevara

Twitter

சே சொன்ன காரணங்கள்

மூச்சிரைப்பை சரியாக்கும் என நினைத்த சே குவேரா, பிறகு சுருட்டுப் பிடிக்க பல காரணங்கள் சொல்லிக் கொண்டார்.‘மலைகளில் பயணிக்கும்போது கொசுக்களை விரட்ட பயன்படுகிறது’ என்றார். ‘ஆஸ்துமா தாக்கும்போது ஆதரவாக இருப்பதாக’ கூடச் சொன்னார். ஆனால் ஒரு மருத்துவராக, அவை யாவும் பொய் என்பதும் அவருக்கு தெரியும் என்கின்றனர் அவருடன் இருந்தவர்கள். எல்லாவற்றையும் தாண்டி அவர் ஆன்மரீதியான காரணம் ஒன்றைக் கூறினார். அது சரியாகவும் இருந்தது. ‘கியூப இலையின் மணம் பிடித்திருக்கிறது’ என்றார். அவர் அதிகமாக தன்னை கியூபனாக்கிக் கொள்ள விரும்பினார். அந்த விருப்பம் அதிக சுருட்டுகளிடம் அவரைக் கொண்டு சென்று விட்டது.

புரட்சிக்குப் பிறகு அரசமைந்த பிறகு சே குவேரா பல பொறுப்புகளில் இருந்தார். ஆனால் பகட்டே இல்லாமல் இருந்தார். சாமானியர் போலவே உண்டார். அவரின் பெரும்பாலான நேர உடை, ஆலிவ் பச்சை நிற போராளி உடைதான். ஊதியமும் குறைந்த ஊதியமே. எந்த பகட்டையும் கொண்டதில்லை. அன்பளிப்புகளையும் ஏற்றதில்லை. அதிகபட்சம் போனால் புத்தகங்களும் சுருட்டுகளும் மட்டும்தான் அவர் ஏற்றுக் கொண்ட அன்பளிப்புகள்.

நுரையீரல் அடைப்பு நோய் ஏற்பட்டதால் சுருட்டு பிடிக்கக் கூடாது என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டார் சே குவேரா. ஆனால் சே குவேரா மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாளொன்றுக்கு ஒரு சுருட்டு பிடிக்க ஒப்புதல் வாங்கினார். பிறகு நாள் முழுவதும் பிடிக்கும் வகையில் நீளமான சுருட்டுகள் செய்வதற்கான வழிகளையும் உருவாக்கிக் கொண்டார்.

ஆப்பிரிக்காவுக்கு செல்ல மாறுவேடம் பூண்டார் சே குவேரா. வழக்கமான நீண்ட தலைமுடியும் தாடியும் இல்லை. திருத்தமாக வெட்டப்பட முடியுடன் காட்சியளத்தார். ஃபிடல் காஸ்ட்ரோ கொடுத்த மெல்லிய சுருட்டு ஒன்றை பிடித்தார். பிறகாலத்தில் கொஹிபா எனப் பிரபலமான சுருட்டின் ஆரம்ப வடிவமாக அது இருக்கலாம்.

Che Guevara

ஈரான் : உச்சத்தில் வறுமை, பாலியல் தொழில் செய்யும் பெண்கள் - கண்ணீர் சிந்த வைக்கும் நிலைமை

Che Guevara

Che Guevara

Facebook

வாசிப்பும் சுருட்டுப் பிடிப்பதும்

வாசிப்பும் சுருட்டுப் பிடிப்பதும் சே குவேராவுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். ஆப்பிரிக்காவின் காங்கோ பிறகு பொலிவியா என காடுகளில் சுற்றியிருந்தபோதும் அவர் சுருட்டுகள் பிடித்திருக்கிறார். எல்லா வேளைகளிலும் தனக்கு அனுப்பப்பட்ட நீளமான சுருட்டுகளை சரிசமமாக வெட்டி எல்லாப் போராளிகளுடனும் பகிர்ந்து கொள்வார். இறுதிக்காலத்தில் மட்டும் சுருட்டுகள் இன்றி வெறும் இலைகளை பைப்பில் அடைத்துப் பிடித்திருக்கிறார்.

இறுதியில் சிறைப்பிடிக்கப்பட்டு, பள்ளிக் கூடத்தில் அமெரிக்காவின் உத்தரவின் பேரில் கொல்லப்படுவதற்கு முன்பு, கடைசி விருப்பம் சே குவேராவிடம் கேட்கப்பட்டது. சரணடைய விருப்பம் தெரிவிப்பார் என அமெரிக்கப் படையினர் நினைத்தனர். புரட்சிக்காரனாக அறியப்பட்டவனை கோழையாக அறிவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி விருப்பமாக சே குவேரா சுருட்டு கேட்டார். இறுதியில் ஒரு சுருட்டை ஆழ அனுபவித்துப் பிடித்து விட்டு, அமெரிக்காவின் விருப்பத்தில் புகையை ஊதிவிட்டு உயிரை விட்டார் சே குவேரா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com