நிர்வாண படங்களை Airdrop செய்த பயணிகள்: விமானி என்ன செய்தார் தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் ஏர் டிராப் வசதி மூலம் பெரிய ஃபல்களை எளிதாகவும், வேகமாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஒருவேளை மற்றவர்களின் ஆப்பிள் சாதனங்கள் அருகிலிருந்தால், அதிலும் சட்டென ஏர் டிராப் செய்யலாம்.
சவுத்வெஸ்ட் விமானம்
சவுத்வெஸ்ட் விமானம்Canva

நம் சிறு வயதில், 10ஆம் வகுப்பில் இத்தனை மதிப்பெண் வாங்கவில்லை எனில் இதை செய்ய அனுமதிக்கமாட்டேன், கல்லூரியில் அரியர் இல்லாமல் தேர்ச்சி பெறவில்லை எனில் இதை வாங்கிக் கொடுக்கமாட்டேன் என நம் பெற்றோர் நம்மை செல்லமாக மிரட்டிய சம்பவங்கள் நினைவிருக்கலாம்.

அதே போல, இங்கு ஒரு விமானி தன் விமானத்தில் பயணிக்கும் பயணிகளை மிரட்டியுள்ளார்.

சவுத்வெஸ்ட் ஏர்லைன் நிறுவனத்தின் விமானத்தில் மெக்ஸிகோ நாட்டில் உள்ள காப்போ சான் லுகாஸ் நகரத்துக்குச் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த விமானத்திலிருந்த பயணிகளில் சிலர், மோசமான நிர்வாணப் படங்களை ஏர் டிராப் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் ஏர் டிராப் வசதி மூலம் பெரிய ஃபல்களை எளிதாகவும், வேகமாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஒருவேளை மற்றவர்களின் ஆப்பிள் சாதனங்கள் அருகிலிருந்தால், அதிலும் சட்டென ஏர் டிராப் செய்யலாம்.

இப்படி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் யாரோ சிலர் நிர்வாணப் படங்களை ஏர் டிராப் செய்தது சில பயணிகளின் ஐஃபோன்களில் எதிரொலித்தது. அது குறித்து அப்பயணிகள் விமானத்திலிருந்த உதவியாளர்களிடம் கூறினர்.

சவுத்வெஸ்ட் விமானம்
மோனிகா கன்னா : தீ பிடித்த விமானம், 185 பேரை காப்பாற்றிய பைலட் - திக்திக் நிமிடங்கள்

கடைசியில் அச்செய்தி விமானியிடம் சென்றது. விமானம் அப்போது வரை டாக்ஸியிங் நிலையில் தான் இருந்தது. விமான நிலையத்தின் ஓடுதளம் வரை விமானம் மற்றொரு வாகனத்தைக் கொண்டு இயக்கப்படுவதுதான் டாக்ஸியிங் என்கிறார்கள்.

விமானி இன்டர்காம் வழியாக, நிர்வாணப் படத்தை ஏர் டிராப் செய்வதை நிறுத்துமாறும், அப்படி நிறுத்தவில்லை எனில் விமானத்தை மீண்டும் அதன் கேட்டிலேயே நிறுத்திவிடுவேன், அது உங்கள் சுற்றுலாவை பாழாக்கிவிடும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பை, Teighlor Marsalis என்பவர் பதிவு செய்து தன் டிக்டாக் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்துக்கு பலரும் தங்கள் கருத்துக்களை சமுக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ஒரு பயனர் இது ஒரு பள்ளி பேருந்து ஓட்டுநர் சேட்டை செய்யும் குழந்தைகளை கட்டுப்படுத்துவது போலிருப்பதாகப் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனரோ ''நான் விமானத்தை திருப்பப் போகிறேன், எல்லாருடைய சுற்றுலாவும் பாழாகப் போகிறது'' என ஒரு தந்தை கண்டிப்பது போல் கூறியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இப்படி விமானிகள் தடாலடியாக முடிவு செய்து விமான பயணத்தை நிறுத்திய கதைகள் நிறைய இருக்கின்றன. PK - 9754 என்கிற பாகிஸ்தான் சர்வதேச விமானசேவை நிறுவனத்தின் விமானம் செளதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரத்திலிருந்து புறப்பட்டு, இஸ்லாமாபாத் செல்ல வேண்டும்.

ஆனால் மோசமான வானிலை காரணமாக அவ்விமானம் சௌதி அரேபியாவில் தமம் என்கிற விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

வானிலை சரியான பிறகு விமானியிடம் விமானத்தை இயக்குமாறு கூறியதற்கு தன் பணி நேரம் முடிந்துவிட்டதாகவும், தன்னால் விமானத்தை தமம் விமான நிலையத்திலிருந்து இஸ்லாமாபாத்துக்கு இயக்க முடியாது என்று கூறிவிட்டார். விமானத்தின் விமானிகள் மட்டுமின்றி, விமான பயணிகளுக்கும் இது போன்ற சில ஆச்சரிய சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

பிரிட்டனிலிருந்து அமெரிக்கா வரையான ஒரு 8 மணி நேர விமான பயணத்தில், Kai Forsyth என்கிற ஒற்றைப் பயணி, தனியாக பயணம் செய்தார். அது தொடர்பாக தன் சமூக வலைத்தளங்களிலும் காணொளியையும் பதிவிட்டார்.

சவுத்வெஸ்ட் விமானம்
பெரிய ஓட்டையுடன் 14 மணி நேரம் வானில் பறந்த விமானம் - எங்கு? ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com