ஸ்பெயின் முதல் பாலஸ்தீன் வரை - உலகின் கைவிடப்பட்ட விமான நிலையங்கள்

இந்த உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. இதில் ஒரு சில விமான நிலையங்கள் இப்போது பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது.
ஸ்பெயின் முதல் பாலஸ்தீன் வரை - உலகின் கைவிடப்பட்ட விமான நிலையங்கள்
ஸ்பெயின் முதல் பாலஸ்தீன் வரை - உலகின் கைவிடப்பட்ட விமான நிலையங்கள்canva (rep)

பரந்து, விரிந்து கிடக்கும் இந்த உலகத்தில் இருந்து ஒரு முறையாவது பறந்து சென்று அந்த வானத்தை தொட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு இருக்கும். இந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவியாக இருப்பது அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தான்.

இந்த விமான பயணம் மிகவும் விலை உயர்ந்த சேவையாக இருந்தாலும், அது ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளை எளிமையாக இணைக்கிறது. பேருந்து, ரயில் போன்ற மற்ற பயணங்களை விட இந்த விமான பயணம் பலருக்கும் மறக்கமுடியாத ஒரு அனுபவமாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

இந்த உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. இதில் ஒரு சில விமான நிலையங்கள் இப்போது பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது.

சியுடாட் ரியல் மத்திய விமான நிலையம், ஸ்பெயின்

இந்த விமான நிலையம் 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மாட்ரிட்டில் இருந்து சுமார் 115 மைல் தொலைவில் அமைந்துள்ள சியுடாட் விமான நிலையம் அந்நாட்டின் அரசியல் பிரச்சனைகள், நிர்வாகம், விமான நிலையத்துடன் அதிவேக ரயில் சேவையை இணைப்பதற்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் கைவிடப்பட்டது.

ஸ்பெயின் முதல் பாலஸ்தீன் வரை - உலகின் கைவிடப்பட்ட விமான நிலையங்கள்
Travel: துபாய் முதல் டென்வர் வரை - உலகின் மிக அழகான விமான நிலையங்கள்

நிக்கோசியா சர்வதேச விமான நிலையம், சைப்ரஸ்

சைப்ரஸ் தீவில் அமைந்துள்ள இது மக்கள் பயன்பாடு எதுவும் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. முக்கிய சர்வதேச விமான சேவையாக செயல்பட்டு வந்த நிக்கோசியா, துருக்கி படையெடுப்பை அடுத்து 1974 ஆம் ஆண்டு அதன் சேவைகளை நிறுத்தியது. அந்த வகையில், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் இந்த விமான நிலையம் மீண்டும் திறக்கப்படக் கூடிய சூழல் இல்லையாம்.

யாசர் அராபத் சர்வதேச விமான நிலையம், பாலஸ்தீன்

'காசா இன்டர்நேஷனல்' என்று அழைக்கப்படும் பாலஸ்தீனத்தின் யாசர் அராபத் சர்வதேச விமான நிலையம் 1998 ஆம் ஆண்டில் பில் கிளிண்டனால் திறக்கப்பட்டது. சுமார் 86 மில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்ட இவ்விமான நிலையம் தற்போது பலத்த இடிபாடுகளுடன் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. அதாவது, இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களால் சிதைந்த விமான நிலையம், ஓடுபாதை அழிவு காரணமாக தனது சேவைகளை நிறுத்தியது.

ஸ்பெயின் முதல் பாலஸ்தீன் வரை - உலகின் கைவிடப்பட்ட விமான நிலையங்கள்
இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை: உலகின் 5 அழகான நாடாளுமன்ற கட்டிடங்கள்

எலினிகான் சர்வதேச விமான நிலையம், கிரீஸ்

கிரீஸில் அமைந்துள்ள எலினிகான் சர்வதேச விமான நிலையம் அந்நாட்டின் முக்கிய விமான நிலையமாக செயல்பட்டு வந்தது. ஆனால், 2001 ஆம் ஆண்டில் அந்நாட்டின் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் Eleftherios Venizelos என்ற சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து மூடப்பட்டது. இந்த விமான நிலையத்தை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இன்னும் அது கைவிடப்பட்ட நிலையில் தான் இருக்கிறது.

W.H பிராம்பிள் விமான நிலையம், மான்சார்ட்

மான்செராட் பகுதியில் அமைந்துள்ள W.H பிராம்பிள் விமான நிலையத்தின் ஓடுபாதை 1997 ஆம் ஆண்டு நிகழ்ந்த சௌபிரையரே எரிமலை வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு வரை இந்த பிராம்பிள் விமான நிலையத்திற்கு சரியான போக்குவரத்து இல்லாமல் இருந்தது. அதாவது, 2002 ஆம் ஆண்டுக்கு முன் வரை விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்றால் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் முதல் பாலஸ்தீன் வரை - உலகின் கைவிடப்பட்ட விமான நிலையங்கள்
பூனையை பணியமர்த்திய அமெரிக்க விமான நிலையம் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com