இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை: உலகின் 5 அழகான நாடாளுமன்ற கட்டிடங்கள்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ளது. இதே போன்று கட்டிடக்கலையின் அற்புதமாக கருதப்படும் உலகின் மற்ற 4 அழகான நாடாளுமன்ற கட்டிடங்கள் குறித்து இங்கே காணலாம்.
இந்தியா முதல் ஆச்திரேலியா வரை: உலகின் 5 அழகான நாடாளுமன்ற கட்டிடங்கள்
இந்தியா முதல் ஆச்திரேலியா வரை: உலகின் 5 அழகான நாடாளுமன்ற கட்டிடங்கள்Twitter
Published on

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், கடந்த மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது. இந்த கட்டிடமானது மொத்தம் 4 மாடிகளை கொண்டுள்ளது, மேலும், ரூ.970 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ளது. இதே போன்று கட்டிடக்கலையின் அற்புதமாக கருதப்படும் உலகின் மற்ற 4 அழகான நாடாளுமன்ற கட்டிடங்கள் குறித்து இங்கே காணலாம்

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, யுனைட்டட் கிங்டம்

ஆங்கிலேய அரசர்களின் அரண்மனையான இது ஹவுசஸ் ஆஃப் பார்லிமெண்ட் என்று தான் பிரபலமாக அறியப்படுகிறது. தேம்ஸ் நதியின் இடபக்க கரையில் அமைந்திருக்கும் இந்த கட்டிடமானது 1837ல் தொடங்கி 1860ல் கட்டிமுடிக்கப்பட்டது. இதன் வடிவமைப்புக்காகவும், வரலாற்றுக்காகவும் 1987ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை. இங்குள்ள கடிகார கோபுரமான பிக் பென், இந்த கட்டிடத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது

இந்தியா முதல் ஆச்திரேலியா வரை: உலகின் 5 அழகான நாடாளுமன்ற கட்டிடங்கள்
Summer Special: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.4 லட்சமா? உலகின் காஸ்ட்லியான மாம்பழங்கள் இவை தான்!

ரெய்ஸ்டாக் கட்டிடம், ஜெர்மனி

பெர்லினில் அமைந்துள்ள இந்த ரெய்ஸ்டாக் கட்டிடமானது, ஜெர்மனியின் நாடாளுமன்ற கட்டிடமாகும். இது ஈபர்ட்ஸ்ட்ராஸின் வடக்கு முனையிலும், ஸ்ப்ரீ ஆற்றின் தென்கரைக்கு அருகிலும் அமைந்துள்ளது.

உலகளவில் அதிக சுற்றுலா தலங்களை ஈர்க்கும் இடங்களில் இது ஒன்று. இந்த கட்டிடத்தின் மேல் இருக்கும் கண்ணாடி குவிமாடம் இதன் சிறப்பம்சம். இதன் வழியாக சூரிய ஒளியானது உள்ளே ஊடுறுவி ஒட்டுமொத்த கட்டிடத்தை பிரகாசமாக்குகிறது.

பார்லிமெண்ட் ஆஃப் கனடா, கனடா

இது கனடாவின் கூட்டாட்சி சட்டமன்றமாகும். ஓட்டாவாவில் உள்ள பார்லிமெண்ட் ஹில் என்கிற இடத்தில் அமைந்துள்ளது இந்த கட்டிடம். இது மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. கிங், செனேட் மற்றும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்

இந்தியா முதல் ஆச்திரேலியா வரை: உலகின் 5 அழகான நாடாளுமன்ற கட்டிடங்கள்
உலகின் துயரமான நாடுகள் : ஜிம்பாபேவுக்கு முதலிடம் - இந்தியாவின் இடம் என்ன?

பார்லிமெண்ட் ஹவுஸ், ஆஸ்திரேலியா

கான்பெராவில் அமைந்துள்ள இந்த நாடாளுமன்றமானது மார்டனிசத்தின் எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. இதன் கூரை புற்களால் ஆனது மற்றும், இதனைச் சுற்றி பச்சைப்பசேல் என்ற நிலபரப்பும் உள்ளது.

இந்தியா முதல் ஆச்திரேலியா வரை: உலகின் 5 அழகான நாடாளுமன்ற கட்டிடங்கள்
Travel: பயணங்கள் இனிமையாக அமைய தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com