இலங்கை நெருக்கடி : அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் நான்கு பெரும் தவறுகள் | பாகம் 2

ஆனால் இந்த நெருக்கடி இலங்கைக்கு மட்டுமல்ல, முழு உலகமும் பல்வேறு இன்னல்களால் சூழப்பட்டுள்ளது என்று சமாளிக்கப் பார்க்கிறார் அதிபர் கோத்தபய ராஜபக்சே.
கோத்தபய ராஜபக்சே

கோத்தபய ராஜபக்சே

NewsSense

2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிந்த பிறகு இலங்கை அதற்காக ஏராளமான நிதியை இராணுவத்திற்கு செலவழித்திருந்தது. இந்த சிறிய நாட்டில் துருப்புகளின் எண்ணிக்கையும், அதற்கான பட்ஜெட்டும் அதிகம். இங்கிருந்தே இலங்கையின் பொருளாதார விரிசலுக்கான துவக்கம் புறப்பட்டது. இடையில் சில ஆண்டுகள் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் கோவிட் பொதுமுடக்கம், புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிக்கு வந்தது, அவர் தடாலடியாக அறிமுகப்படுத்திய தவறான கொள்கை முடிவுகள் இணைந்து இன்று இலங்கையை பெரிதும் பாதித்து வருகிறது.

Sri Lanka

Sri Lanka

NewsSense

ஆனால் இந்த நெருக்கடி இலங்கைக்கு மட்டுமல்ல, முழு உலகமும் பல்வேறு இன்னல்களால் சூழப்பட்டுள்ளது என்று சமாளிக்கப் பார்க்கிறார் அதிபர் கோத்தபய ராஜபக்சே.

அதிபர் கோத்தபய பதவி ஏற்கும் போதே தாங்க முடியாத வெளிநாட்டுக் கடன்களைக் கொண்ட பொருளாதாரத்தைத்தான் பெற்றிருந்தார். இந்தக் கடனில் பெரும்பகுதி அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே இரண்டு முறை அதிபராக இருந்த போது பெறப்பட்டது. அந்தக் கடன்களில் சில பயனுள்ள அடிக்கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டாலும் முன்னாள் அதிபர் மகிந்த அந்தக் கடன்களை பயனற்ற, உடனடியாக பலன் தராத திட்டங்களிலும் முதலீடு செய்தார். இது அவரது குடும்பத்திற்கு மட்டும் பயனளித்திருக்கும்.

NewsSense

ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கும் அதை தவறாக கையாண்டதற்கும் கோத்தபய ராஜபக்சே மட்டுமே பொறுப்பு. இந்தப் பொருளாதார நெருக்கடியை அவர் தேசியப் பேரிடராக மாற்றினார்.

அவரது குறைபாடுள்ள கொள்கை முடிவுகள் அமல்படுத்தாமல் இருந்திருந்தால் இலங்கை தற்போது இருப்பது போல கடுமையான நெருக்கடியில் இருந்திருக்காது. இப்படி தேசத்தின் முதுகெலும்பை உடைத்திருந்தாலும் அதிபர் தனது தவறுகளை எவற்றையும் ஒப்புக்கொள்வதில்லை. அவரது அகந்தை யதார்த்தத்தை பார்க்க மறுக்கிறது.

அவர் செய்த நான்கு முக்கியத் தவறுகள், அந்நியச் செலவாணி நெருக்கடியை இதுவரை இல்லாத அளவிற்கு தேசியப் பேரழிவாக மாற்றியது.

கோத்தபய ராஜபக்சே

எரியும் இலங்கை : தீவுநாட்டை சிதைத்த ராஜபக்சே சகோதர்களின் கதை

1. அவர் அளித்த விரிவான வரிச் சலுகைகள் அரசாங்கத்தை திவாலாக்கியது

கோத்தபய எடுத்து வைத்த முதலடியே தவறானது. இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில் இலங்கை அரசின் வரி வருமான சதவீதம் உலகிலேயே மிகவும் குறைவு. குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் மட்டுமல்ல குறைந்த வளர்ச்சி உள்ள நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் இந்த அரசு வருமானம் என்பது மிகவும் குறைவு.

கோத்தபய பதவியேற்பதற்கு முன்பு 2015 முதல் 2019 வரை இலங்கையில் சர்வதசே நாணய நிதியத்தால் வழிநடத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப் பட்டது. அதன்படி பற்றாக்குறையை குறைக்க வரி வருவாய் மெதுவாக அதிகரிக்கப்பட்டது.

இதன்பிறகு அதிபராக பதவியேற்ற கோத்தபய தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகந்தையில் வாட் வரியை 15% லிருந்து 8% ஆக குறைத்தார். மேலும் NBT,PAYE வரி போன்றவற்றை ஒழித்தார். இதன் விளைவாக 2020இல் அரசாங்க வருமானம் 526 பில்லியன் ரூபாவாக குறைந்து போனது. மேலும் பதிவு செய்யப்பட்ட வரி அளிப்பவர்களின் எண்ணிக்கை 33.5% ஆக குறைந்து போனது.

பற்றாக்குறையை நிரப்புவதற்காக அரசாங்கம் பணத்தை அதிகமாக அச்சிட்டு விநியோகித்தது. இதனால் பணவீக்கம் அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டளவில் நாடு 24 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய நிலையில் அரசின் நிதி அமைப்பு பலவீனமாகி விட்டது. இதன் மூலம் பொருளாதார அறிவில் அதிபரும் அவரது ஆலோசகர்களும் எவ்வளவு பெரிய ‘அப்பாடக்கர்கள்’ என்பதை உலகம் தெரிந்து கொண்டது.

NewsSense

2. விவசாயத் துறையில் உருவாக்கப்பட்ட பேரழிவு

ஒரே இரவில் இராசயன உரங்களை தடை செய்தது முட்டாள்தனமான முடிவு மட்டுமல்ல, சமீபத்திய கொள்கை முடிவுகளில் மிகவும் மோசமான ஒன்று இதுதான். இந்த உரத்தடை பொதுச் சுகாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு என்று அதிபர் கூறுவது மிகவும் நகைப்பிற்குரியது. இது இலங்கையின் உணவுப் பாதுகாப்பை கடுமையாகச் சேதப்படுத்தியதோடு, உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இலங்கை இப்போது பல தெற்காசிய நாடுகளுக்குப் பின்னால் உள்ளது.

இந்தத் தடைமூலம் குறைவான இருப்பு கொண்ட அந்நியச் செலவாணியை சேமிப்பது என்ற நோக்கம் நடைபெறவில்லை. உரமானியங்களுக்கான தொகை 250 முதல் 300 மில்லியன் டாலர் மட்டுமே வருடத்திற்கு வரும். சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் கடனை அடைக்கும் வகையில் கடந்த ஜனவரியில் 500 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டது. இது அந்நியச் செலவாணியை முற்றிலும் காலியாக்கியது.

இரசாயன உரத்தடை உள்ளூர் விவசாயத் துறையை சீரழித்தது. நெல் அறுவடையை மூன்றில் இரண்டு பங்காக குறைத்தது. இந்த முட்டாள்தனமான முடிவால் ஏற்பட்ட இழப்பு குறைந்தபட்சம் 2 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது 18 இலட்சம் விவசாயிகளை ஏழைகளாக்கியது. இது இலங்கையில் உள்ள தொழிலாளர்களில் நான்கில் ஒருவரை வறியவராக்கியதற்கு சமம்.

கோத்தபய ராஜபக்சே

இலங்கை : இன்றைய நெருக்கடிக்கு 5 முக்கிய காரணங்கள்!

NewsSense

3. இலங்கை ரூபாயின் வீழ்ச்சியும், பத்திரங்களை தொடர்ந்து செலுத்துவதும்

அந்நியச் செலவாணி இருப்பு குறைந்த வரும்போது இலங்கை அரசு அந்நியக் கடன் கொடுத்தோருக்கு தொடர்ந்து பணத்தை செலுத்தி வந்தது. இந்நிலையில் கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் இலங்கைக்கு கடைசி வரிசையில் ரேட்டிங் கொடுத்தன.

2019 இல் இருந்த 7.6 பில்லியன் டாலரை இலங்கை அரசு அந்நியக் கடன் கொடுத்தோருக்கு செலுத்தி காலி செய்ததோடு, ரூபாயின் மதிப்பையும் விழ வைத்தது. இதனால் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் இலங்கை குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஏற்றுமதியாளர்கள் தங்கள் வருவாயை வெளிநாட்டு வங்கிகளில் நிறுத்தி வைத்தனர். 2 பில்லியன் டாலர்களாக இருந்த தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் ரூபாயின் மதிப்பு வீழ்ந்த பிறகு 5 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என அதிபர் கோத்தபய ஒப்புக் கொண்ட்டார். பணத்திற்கு மதிப்பு இல்லாத போது அதை அதிகம் புழங்க விட்டதனால் அதன் மதிப்பு மேலும் வீழ்ந்தது. வங்கிகளில் ஒரு டாலருக்கு 275 ரூபாய் என்று வர்த்தகம் செய்தாலும் வெளிச்சந்தையில் அது 300 முதல் 305 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இது நெருக்கடியை மேலும் அதிகரித்தது.

இத்தகைய நிதிக் கொள்கை தவறுகளால் அடிப்படை பொருட்களான பால் பவுடர் முதல் சமையல் வாயு வரை சாதாரண மக்களுக்கு கிடைக்காத ஒன்றாக மாறிவிட்டது. இப்படி இலங்கையில் சுபீட்சத்தை கொண்டு வரும் என்று உறுதியளித்த அரசு உண்மையில் தானே உருவாக்கிய பேரழிவைக் கொண்டு வந்தது.

கோத்தபய ராஜபக்சே

இலங்கை பொருளாதாரம் திவாலானது எப்படி? - பகுதி 1

4. மேற்குலகிலிருந்து சுயமான தனிமைப்பட்டுப் போன இலங்கை அரசு

வங்கதேசத்திடம் கடன் அமைப்பை மாற்றுமாறும், ரஷ்யாவிடம் எண்ணெயை கடனாகக் கேட்டும் இலங்கை கெஞ்சுகிறது. உக்ரைன் போர் காலத்தில் இவையெல்லாம் சாத்தியமில்லை என்பதோடு இலங்கையின் நண்பர்கள் குறைந்து வருகின்றனர்.

கோத்தபய பதவிக்கு வரும்போது நிலைமை இப்படி இல்லை. கொழும்பு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஐப்பான் நிதியளித்தது. அமெரிக்க அரசு 480 மில்லியன் டாலரை மானியமாக கொடுக்க முன் வந்தது. ஆனால் கோத்தபய அரசாங்கம் ஜப்பானிய திட்டத்தை இடைநிறுத்தியது. அமெரிக்கர்கள் தந்த மானியத்தை வேண்டாமென புறக்கணித்தது. இதன்மூலம் மேற்குலக நாடுகளிடமிருந்து தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டது. தேசிய நலன் கருதி தனது வெளியுறவுக் கொள்கையை அமைத்துக் கொள்ளாமல் கோத்தபய தனது சுய நலனுக்காக அமைத்துக் கொண்டார்.

இலங்கையின் பிரச்சினைகளுக்கு இவையே அடிப்படை காரணங்கள் என்றாலும் 20 வது சட்டத் திருத்தத்தின் மூலம் இனவெறியர்களை திருப்தி படுத்தியது, கோவிட்டால் மரணமடைந்த முஸ்லீம்களை புதைப்பதற்கு பதில் எரிப்பேன் என்பதை கட்டாயமாக்கியது இவையும் கூட தேசத்தை பிளந்து சென்றது.

இப்போது மேற்கண்ட நான்கு காரணங்களையும் இணைத்துப் பாருங்கள். இலங்கை மக்கள் ஏன் நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள், தினசரி வாழ்க்கை எப்படி போராட்டமாகி விட்டது என்பது நன்கு விளங்கும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com