Sri Lanka
Sri LankaNewssense

இலங்கை : “நடக்கக் கூடாத ஏதோ நடக்கப் போகிறது” - அச்சம் தெரிவித்த முக்கியப் புள்ளி

போராட்டக்காரர்கள் பல வாகனங்களில் தலைமை அலுவலகத்தின் நுழைவாயிலை முற்றிலுமாக இடைமறித்து எவரும் உள்ளே நுழைய முடியாத வகையில் தடை செய்திருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on

தென் இலங்கை அரசியலை தொடர்ந்து அவதானித்து வந்த ஒருவன் என்ற அடிப்படையில் எனக்கு ஏற்படும் உணர்வானது மக்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடைபெற போவதாக தான் உணர்த்துகிறது என யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான முன்னாள் பிரதிநிதியான ஹைதர் அலி எச்சரித்துள்ளார்.

மேலும் அவர், எனினும் அவ்வாறான ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பது தான் எங்களுடைய பிரார்த்தனை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sri Lanka
இலங்கை : வலிமை திரைப்பட பாணியில் போராட்ட களத்திற்கு வந்த Bikers - என்ன நடந்தது?
Sri Lanka
இலவசங்களால் இந்தியாவில் இலங்கை போன்றதொரு நிலை வருமா? - Analysis
NewsSense

ராஜபக்சேக்கள் பிடியில் நீதித்துறை

லங்கா ஶ்ரீ ஒருங்கிணைத்த ஒரு நிகழ்வில் பேசுகையில் அவர், இலங்கையில் நீதித்துறை ராஜபக்சேக்கள் வீடுகளில் இருந்து நீதி எழுதக்கூடிய நீதித்துறையாக தான் உள்ளது என்றார்.

மேலும் அவர், “ஆங்காங்கே சில இடங்களில் மக்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் இப்போது இருக்கக்கூடிய நீதிச் சேவை ஆணைக்குழு என்று ஒன்றில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க ராஜபக்சேவின் கட்சி முழுவதும் நாமல் ராஜபக்சே கரங்களுக்கு சென்றுவிட்டதாக சிங்கள் ஊடகம் ஒன்று கூறுகிறது.

NewsSense

என்ன நடக்கிறது தீவு தேசத்தில்?

இதுவரை காலமும் பசில் ராஜபக்ஷேவின் பிடியிலிருந்த பொதுஜன பெரமுன தற்போது நாமல் ராஜபக்சவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக சிங்கள ஊடகங்க தெரிவிக்கின்றன.

கட்சி கைமாறிய பின்னர் எழுச்சி பெற்றுவரும் இளைஞர்களுக்கு ஏற்றவகையில் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் நாமல் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை இடைக்கால அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்கப்போவதில்லை என தீர்மானித்துள்ள நாமல் ராஜபக்ச, அடுத்தசில மாதங்களிற்கு பொதுஜனபெரமுனவை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

பெட்ரோலிய நிறுவனம் முற்றுகை

தெமட்டகொட இலங்கை பெட்ரோலிய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை லாரிகள் சுற்றிவளைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதனை Newssense தளத்தைல் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

போராட்டக்காரர்கள் பல வாகனங்களில் தலைமை அலுவலகத்தின் நுழைவாயிலை முற்றிலுமாக இடைமறித்து எவரும் உள்ளே நுழைய முடியாத வகையில் தடை செய்திருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Newssense
newssense.vikatan.com