2021 பிப்ரவரியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர்பஸ் A333 இன் மூன்று வாடகை விமானங்கள் மூலம் உகாண்டாவின் என்டபி சர்வதேச விமான நிலையத்திற்கு 102 மெட்ரிக் டன் ‘அச்சிடப்பட்ட பொருட்கள்’ அனுப்பப்பட்டன. மர்மமாக அனுப்பப்பட்ட அந்த அச்சிடப்பட்ட பொருள் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இது குறித்த புலனாய்வில் சந்தேகத்திற்குரிய பல செய்திகள் அடிபடுகின்றன.
ஏப்ரல் 2021 இல் கொழும்பில் உள்ள சண்டே டைம்ஸ் பத்திரிகை தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தபோது, அந்த அச்சிடப்பட்ட பொருள் என்ன என்பது பற்றிய விவரங்களை தெரிவிக்க இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுத்து விட்டது.
மேலும் அந்த விமான நிறுவனம் அந்த மர்மப் பொருட்கள் குறித்த குறிப்பான தகவல் ஏதுமில்லை என்றதோடு அது இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் வர்த்தக இரகசிய நம்பிக்கை விதிமுறையின் கீழ் வருவதால் தகவல் தர முடியாது என்று மறுத்து விட்டது.
மேலும் அந்த விமான நிறுவனம் அந்த மர்மப் பொருட்கள் குறித்த குறிப்பான தகவல் ஏதுமில்லை என்றதோடு அது இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் வர்த்தக இரகசிய நம்பிக்கை விதிமுறையின் கீழ் வருவதால் தகவல் தர முடியாது என்று மறுத்து விட்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இது குறித்து கூறுகையில், “விமானக் கட்டணம் மற்றும் வாடகை சாசன ஒப்பந்தம் இரண்டும் பொருட்களின் தன்மையை அச்சிடப்பட்ட பொருளாகக் குறிப்பிடுகின்றன. மேலும் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. சரக்குகளின் துல்லியமான தன்மையானது, சரக்கு முனையத்திற்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னர், இலங்கை சுங்கத்துறையால் மீளாய்வு செய்யப்பட்டு அனுமதிக்கு உட்படுத்தப்படும். அதன்பின்னரே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றப்படும்.
எவ்வாறாயினும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நன்கு அறிந்த ஆர்வலர்கள் கூறும்போது, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கூறியது போல் உள்ளடக்கங்கள் பற்றி எதுவும் தெரியாமல் இருந்திருந்தால், தகவல் மறுப்புக்கு அடிப்படையாக இருந்திருக்கும். சட்டத்தின் பிரிவு 5 இல் உள்ள தகவலை மறுப்பதற்கான ஒரு குறிப்பிட்ட அடிப்படையான 'வணிக ரகசிய நம்பிக்கை' குறித்து மேற்கோள் காட்ட ஒரு படி மேலே சென்றதால் அந்தப் பொருள் குறித்து ஏர்லைன்ஸிற்கு உண்மையான தகவல் தெரிந்திருக்கலாம் என்று பொருளாகிறது. "வணிக ரகசிய நம்பிக்கையை ஒரு காரணமாகக் கொடுத்து விவரங்கள் கசியாமல் தங்களை மேலும் விமான நிறுவனத்தைப் பயன்படுத்தியவர்கள் பாதுகாத்துக் கொண்டனர்" என்று ஆர்வலர்கள் கூறினர்.
இந்நிலையில்தான் சண்டே டைம்ஸ் பத்திரிகையானது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமானது 102 டன் அச்சிடப்பட்ட பொருட்களை உகாண்டாவிற்கு கொண்டு செல்கிறது, ஆனால் தகவல் தர மறுக்கிறது என்று ஏப்ரல் 18, 2022 அன்று செய்தி வெளியிடுகிறது.
"இது வணிக ரகசிய நம்பிக்கைக்குள் வருகிறது. ஏனெனில் பொருட்களின் துல்லியமான தன்மை வெளிப்படுத்தப்பட்டால், பிற விமான நிறுவனங்கள் அல்லது சரக்கு முகவர்களும் இந்த வகையான பொருட்களை அதே விமானத்தில் ஏற்றுமதி செய்பவரிடமிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வணிகத்தைக் கோருவார்கள்." என்கிறது சண்டே டைம்ஸ்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தெளிவான மீறல் என்னவெனில், உகாண்டாவிற்கு அனுப்பப்படும் சரக்குகளை யார் அனுமதித்தார்கள், அனுப்பியவரின் செலவுக் கட்டணம் மற்றும் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது ஆகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தவொரு தகவலையும் வெளியிடுவது பொது வெளியில் வெளியிடுவதற்குச் சமம் என்று சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், தனிப்பட்ட வாடகை சாசன விமானத்தை இயக்கிய நிறுவனம், பொருள் கொண்டு செல்பவரின் பெயருக்கு வணிக நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், அதை வெளியிடுவது பொருளைப் பெறுபவரை உள்ளிட்டு இருவருக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் கூறியது.
"ஏனென்றால், அந்த நிறுவனம் பொருள் கொண்டு செல்பவரின் பெயர் வெளியிடப்பட்டால், மற்ற விமான நிறுவனங்களும் இதே நபரிடமிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வணிகத்தைக் கோரும். அதன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5(1)(d) பிரிவின் கீழ் இந்த பெயர் விலக்கு அளிக்கப்பட்ட தகவலாகும்,” என்று விமான நிறுவனம் சண்டே டைம்ஸிடம் கூறியது.
அந்த நேரத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இப்படி தகவலை மறுப்பது குறித்து தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் மேல்முறையீடு செய்யப்படவில்லை.
கடுமையான கோவிட் -19 பொது முடக்கம் இலங்கையை பாதிப்பதற்கு சற்று முன்னதாகவே இந்த சர்ச்சை எழுந்தது. அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் அரச சேவைகள் நிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இதே பிரச்சினை தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அல்லது சுங்கத்துறைக்கு இரண்டாவது கோரிக்கையைத் தாக்கல் செய்வதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தடை செய்யவில்லை என்பதால், இந்த மர்மம் துடைக்கப்பட வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தகவலை வெளியிட மறுத்த நேரத்தில், அச்சிடப்பட்ட பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று சுங்கத் துறையின் வட்டாரம் கூறியது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் அவரது பரிவாரங்களையும் திருப்பதிக்கு ஏற்றிச் சென்ற மர்மான ஜெட் விமானம், இத்தாலிக்கு அருகில் இருக்கும் சான் மரினோவில் (புகழ்பெற்ற வரிப் புகலிடம்) பதிவு செய்யப்பட்டிருந்தாலும் உகாண்டாவிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக வெளியானதைத் தொடர்ந்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட உகாண்டாவுக்கான தூதுவர் வேலுப்பிள்ளை கனநாதன், நன்கு அறியப்பட்ட இலாபவெறி மற்றும் மோசடி செய்பவர் ஆவார்.
இது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இலங்கை முழுவதும் பொருளாதார நெருக்கடி முற்றி மக்கள் தெருவுக்கு வந்து போராடும் நிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராஜபக்சே குடும்பம் அந்த விமானத்தில் எவற்றைக் கொண்டு சென்றது? பணமா, தங்கமா? எதுவோ ஒரு பகற்கொள்ளையை ராஜபக்சே குடும்பம் நடத்தியிருப்பது மட்டும் உண்மை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com