Srilanka Economic Crisis : அகதியாக வரும் தமிழ் மக்கள், என்ன செய்யப் போகிறது அரசு?

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதனால் இலங்கை தமிழ் மக்கள் அங்கிருந்து அகதியாக வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 அகதியாக வந்த மக்கள்
அகதியாக வந்த மக்கள்Twitter
Published on

அரிசி விலை 100, சீரகம் ஒரு கிலோ சீரகம் 1899, பெரும் சீரகம் ரூ. 1500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் ரூ.400, முட்டை ஒன்றின் விலை ரூ,36,கோழி இறைச்சி விலை ரூ.1000 என்ற அளவில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ பால் பவுடர் ரூ.1945-க்கு விற்கப்படுகிறது. ஒரு கப் டீ 100 ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கடைகளில் பால், டீ விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு குறைந்தது 8 மணிநேரம் மின் தடை. இலங்கையின் இழிநிலையை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த தீவிர பொருளாதார நெருக்கடியால் அகதியாக வருகின்ற மக்களைக் கையாள்வது குறித்து தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காமல் இருப்பதும் வேதனை அளிப்பதாக இருக்கிறது.

போராட்டம்
போராட்டம் Twitter

“இலங்கைத் தமிழர்கள் இன்றைக்குப் பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக் கூடிய சூழ்நிலையில், பரிதவித்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த தமிழர்கள், அண்மையில் தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கக் கூடிய செய்திகளை எல்லாம் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதுதொடர்பாக நேற்றே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இதுதொடர்பாக மத்திய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டு இதை எப்படிக் கையாள வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். எனவே, அதற்கொரு விடிவுகாலத்தை இந்த தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” எனச் சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இலங்கை தலைமன்னார், யாழ்ப்பாணத்திலிருந்தும் வவுனியாவிலிருந்தும் இதுவரை 16 பேர் தனுஷ்கோடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தஞ்சமடைந்தனர். அவர்களில் சிறியவர்கள் தவிர மற்றவர்களை பாஸ்போர்ட் இல்லாமல் அத்துமீறி நுழைந்ததால் சிறையிலடைத்திருக்கிறது காவல்துறை.

இலங்கை மக்கள் கடுமையான விலைவாசியால் பாதிப்படைந்துள்ளனர். சாமானியர்கள் ஒரு நாளுக்கு இரண்டு வேலை மட்டும் என தங்கள் உணவைச் சுருக்கிக்கொண்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் பசிக் கொடுமையும் பட்டினியும் மக்களை வாட்டி வதைக்கும் எனக் கூறப்படுகிறது.

 அகதியாக வந்த மக்கள்
இலங்கை பொருளாதாரம் திவாலானது எப்படி? - பகுதி 1
Rajapaksa
RajapaksaTwitter

இலங்கை அதிபர் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நட்பு நாடான இந்தியா 1 பில்லியன் டாலர் கடனுதவியைச் சென்றவாரம் வழங்கியது. சீனாவும் 2.6 பில்லியன் டாலர்கள் கடன் கொடுக்க முன்வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

1983-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மக்கள் அகதிகளாக வரத் தொடங்கினர். 2012ம் ஆண்டு அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நடைமுறை நிறுத்தப்பட்டு உள் நுழையும் மக்கள் அத்துமீறி வருபவர்களாகக் கருதப்படுகின்றனர். அதே நடைமுறையில் இப்போதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அகதியாக வந்து சேர்ந்துள்ள மக்கள் கூற்றுப்படி, இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வரத் தயாராக இருக்கலாம்.

 அகதியாக வந்த மக்கள்
இலங்கை : இன்றைய நெருக்கடிக்கு 5 முக்கிய காரணங்கள்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com