வரதா சண்முகநாதன்: இலங்கை டு கனடா இடைநிற்காத கல்வி - 87 வயதில் டிகிரி பெற்ற பெண்மணியின் கதை

87 வயதாகும் இந்த பெண்மணி சமீபத்தில் தனது இரண்டாவது டிகிரியைப் பெற்றதன் மூலம் யார்க் பல்கலைக்கழகத்தில் அதிக வயதில் டிகிரி பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கனடாவின் ஒன்டாறியோ மாகாண பாராளுமன்றத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தது.
வரதா சண்முகநாதன்: இலங்கை டு கனடா இடைநிற்காத கல்வி - 87 வயதில் டிகிரி பெற்ற பெண்மணியின் கதை
வரதா சண்முகநாதன்: இலங்கை டு கனடா இடைநிற்காத கல்வி - 87 வயதில் டிகிரி பெற்ற பெண்மணியின் கதைவரதா சண்முகநாதன்
Published on

”கற்றது கைமண்ணளவு”

இந்த பழமொழி பொருந்தாத யாருமே இந்த உலகில் இருக்க முடியாது.

எந்த வயதினராகினும் எவ்வளவு பெரிய மனிதராகினும் கற்றது கைமண்ணளவு தான்.

இதனை ஏற்றுக்கொண்டு எப்போது கற்றலுக்குரிய ஆர்வத்துடன் இருப்பவர்கள் புகழ் பெறுகின்றனர்.

அப்படி ஒரு நபர் தான் கனடாவைச் சேர்ந்த வரதா சண்முகநாதன்.

87 வயதாகும் இந்த பெண்மணி சமீபத்தில் தனது இரண்டாவது டிகிரியைப் பெற்றதன் மூலம் யார்க் பல்கலைக்கழகத்தில் அதிக வயதில் டிகிரி பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாராட்டுகள்

வரதா அவரது படிப்பை முடித்த போது ஒன்டாறியோ மாகாண பாராளுமன்றத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தது.

விஜய் தணிகாசலம் என்ற மாகாண பாராளுமன்ற உறுப்பினர் அவர் குறித்த உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சென்னை தொடர்பு

வரதா இலங்கையில் வேலணை என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.

தனது முதல் இளங்கலை டிகிரியை இவர் சென்னையில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தான் முடித்துள்ளார்.

இலங்கை திரும்பியவர், ஆசிரியராக இந்திய வரலாறு மற்றும் ஆங்கிலம் கற்றுக்கொடுத்து வந்தார். அப்போது இலங்கை பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளமோன் பட்டம் பெற்றார்.

அடுத்ததாக மாஸ்டர் டிகிரி பெற வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் ஓங்கியிருந்தது.

தனது 50வது வயதில் லண்டன் பல்கலைக்கழகத்தில் முதல் மாஸ்டர் டிகிரியைப் பெற்றார்.

இலங்கை முதல் கனடா வரை இடை நிற்காத கல்வி

தாய்நாடான இலங்கையில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டாலும் இவர் ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஆசிரியப்பணி ஆற்றியிருக்கிறார்.

வரதா பெற்ற ஒவ்வொரு டிகிரிக்கும் இடையில் பல ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும் அவர் கல்வி கற்பதை எப்போதும் நிறுத்தவில்லை என்கிறார்.

60 வயதுக்கு மேற்பட்ட கனட மக்கள் கல்விகற்க சலுகைகள் வழங்கப்படுவதை தெரிந்துகொண்ட பின்னரே அவர் தனது அடுத்த மாஸ்டர் டிகிரியைப் படிக்க முடிவு செய்துள்ளார்.

87 வயதில் இதனை சாதிக்க தனது தன்னம்பிக்கை தான் முக்கியக் காரணம் எனக் கூறுகிறார் வரதா.

மேலும் தான் படிக்க உதவிய யார்க் பல்கலைகழகத்தின் சக மாணவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

வரதா சண்முகநாதன்: இலங்கை டு கனடா இடைநிற்காத கல்வி - 87 வயதில் டிகிரி பெற்ற பெண்மணியின் கதை
AR Rahman: கனடா நாட்டுத் தெருவுக்கு ரஹ்மானின் பெயர் - இணையத்தில் வைரலான புகைப்படம்

இளைஞர்களுக்கு அட்வைஸ்

"அடுத்த தலைமுறையினர் ஏதேனும் வேலையில் சேருவதற்காக மட்டும் படிக்க கூடாது. படிப்பு உங்கள் வாழ்க்கையை மாற்றுவதாக இருக்க வேண்டும்." என்கிறார் வரதா.

மேலும், " இளைஞர்கள் எப்போதுமே தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க கூடாது. தங்களது நாட்டைப்பற்றியும் உலகைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலகில் விவாதிக்கப்படும் விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்" எனவும் கூறினார்.

வரதா சண்முகநாதன்: இலங்கை டு கனடா இடைநிற்காத கல்வி - 87 வயதில் டிகிரி பெற்ற பெண்மணியின் கதை
இலங்கை திரும்பினார் கோத்தபய ராஜபக்சே - மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com