வளைந்த முதுகெலும்புடன் சுற்றித் திரியும் ஒற்றைத் திமிங்கலம் - என்ன நடந்தது?

ஸ்பெயின் நாட்டின் வெலென்சியா என்ற இடத்தில், மத்தியக்கரைக்கடல் பகுதியில், வளைந்த முதுகெலும்புடன் ஒரு திமிங்கலம் சுற்றி வருகிறது. இதன் முதுகெலும்பு இவ்வளவு மோசமாக வளைய என்ன காரணம்?
வளைந்த முதுகெலும்புடன் சுற்றித் திரியும் ஒற்றைத் திமிங்கலம் - என்ன நடந்தது?
வளைந்த முதுகெலும்புடன் சுற்றித் திரியும் ஒற்றைத் திமிங்கலம் - என்ன நடந்தது?Twitter
Published on

திமிங்கலமானது நீரில் வாழும் பாலூட்டி இனங்களில் ஒன்று. இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா என்ற இடத்தில் மத்தியக்கரைக்கடல் பகுதியில் ஒரு திமிங்கலம் மிகவும் மோசமான நிலையில் வளைந்த முதுகெலும்புடன் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.

ஓஷனோகிராஃபிக் வெலன்சியா தங்களது யூடியூப் சேனலில் இந்த திமிங்கலத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் அதன் முதுகெலும்பு வளைந்திருப்பது காணமுடிகிறது

ஃபின் வேல் எனப்படும் இந்த திமிங்கலத்துக்கு ஸ்கோலியோசிஸ் என்ற குறைபாடு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோலியோசிஸ் என்பது, ஒரு பக்கமாக முதுகெலும்பு அசாதாரணமாக வளைவதை குறிப்பிடுகிறது.

கடந்த மார்ச் 4ஆம் தேதி மத்தியக்கரைக்கடலில் பயணம் மேற்கொண்ட ஒரு படகுக் குழு இந்த திமிங்கலத்தை கண்டறிந்துள்ளது.

வழக்கத்திற்கு மாறாக இதன் முதுகெலும்பு வளைந்திருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு மீன்வளத்திலிருந்து உயிரியலாளர்களும், கால்நடை மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டனர்.

வளைந்த முதுகெலும்புடன் சுற்றித் திரியும் ஒற்றைத் திமிங்கலம் - என்ன நடந்தது?
புலியின் எச்சில் மருந்தாக பயன்படுகிறதா? இந்தியாவின் தேசிய விலங்கு குறித்த ஆச்சரிய தகவல்கள்

அவர்கள் தான் இந்த திமிங்கலத்திற்கு ஸ்கோலியோசிஸ் குறைப்பாடு இருக்கலாம் என கணித்தனர். அல்லது, ஏதாவது பெரும் விபத்து ஏற்பட்டு அதன் முதுகெலும்பு வளைந்திருக்கலாம் எனக் கூறியுள்ளனர்

சுமார் 40 டன் எடையும் 17 மீட்டர் நீளமும் உள்ள இந்த ஆண் திமிங்கலம் ஃபின் வகையையை சேர்ந்தது. இந்த வகை திமிங்கலங்கள் உணவு உண்ண ஃப்ளூக் என்றழைக்கப்படும் தங்களது வால்களை பயன்படுத்துகின்றன. மேலும் நீந்துவதற்கு Shoals எனப்படும் உறுப்பை பயன்படுத்துகின்றன.

வளைந்த முதுகெலும்புடன் சுற்றித் திரியும் ஒற்றைத் திமிங்கலம் - என்ன நடந்தது?
தினமும் பள்ளிக்கு செல்லும் குரங்கு - இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஸ்கோலியோசிஸ் குறைப்பாட்டால் பாதிக்கப்படும் திமிங்கலங்களால் இந்த செயலை செய்யமுடியாது.

கால்நடை மருத்துவர்கள் வளைந்த முதுகெலும்பு கொண்ட திமிங்கலத்தின் மீது டிராக்கிங் கருவியை பொருத்த முயன்றனர் ஆனால், மிகவும் மோசமாக முதுகெலும்பு வளைந்திருந்ததால், அவர்களால் கருவியை செலுத்த முடியவில்லை. அந்த திமிங்கலமும் நீருக்குள் வேகமாக நீந்தி மறைந்துவிட்டதாக பிபிசி தளம் கூறுகிறது

வளைந்த முதுகெலும்புடன் சுற்றித் திரியும் ஒற்றைத் திமிங்கலம் - என்ன நடந்தது?
Loneliest Whale : உலகிலேயே தனிமையான திமிங்கலம் - மர்ம உயிரினம் கண்டறிப்பட்டது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com