"iPadல சார்ஜ் கம்மியா இருக்கு" மாணவிக்கு Detention கொடுத்த பள்ளி

பள்ளியிலிருந்து வந்த செய்தியால் தனது மகள் பயந்துள்ளதாகவும், இது குற்றமே இல்லாத பட்சத்திலும் தண்டனை கொடுக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்ல தயங்குவதாகவும் அவரது தாயார் குறிப்பிட்டார்.
Ipad
IpadPexels
Published on

நாம் எல்லாம் ஸ்கூல் படிக்கும் சமயத்தில் அம்மா அல்லது அப்பாவின் செல் ஃபோனைத் தான் பயன்படுத்தியிருக்கிறோம். அதுவும் அவர்கள் முன்னிலையில், அவர்கள் சொல்லும் நேரத்திற்கு மட்டும் தான்.

பள்ளிக்கு செல்ஃபோனை எடுத்து செல்வதை ஏதோ சீக்ரெட் மிஷன் போல, யாரிடமும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று பார்த்து பார்த்து செய்வோம்


அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. 6 மாத குழந்தை முதலே கையில் செல் ஃபோன் இல்லாமல் பார்க்க முடிவதில்லை.

சேட்டை செய்யும் குழந்தைகளை, அழும் குழந்தைகளை சமாதானம் செய்ய அவர்கள் கையில் செல் ஃபோன் கொடுக்கப்போய், கொரோனா பெருந்தொற்று வந்த பிறகு, பள்ளிக்கூடமே அந்த கையளவு செல் ஃபோனில் தான் இருந்தது.


செல்ஃபோனை பள்ளிக்கு கொண்டுவந்தால் நமக்கெல்லாம் பனிஷ்மென்ட் கிடைக்கும். ஆனால், இப்போது அதை அவர்கள் தைரியாமாக எடுத்து செல்கின்றனர். எடுத்து வர பல பள்ளிகளும் அனுமதிக்கின்றன


அப்படி இங்கிலாந்தில் பள்ளிக்கு ஐ பேட் எடுத்து சென்ற பெண்ணுக்கு பள்ளியில் டிடென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் நாம் நினைப்பதுபோல iPad ஐ கொண்டு சென்றதற்கல்ல. அந்த மாணவி எடுத்து சென்ற ஐ பேடில் சார்ஜ் 93% தான் இருந்துள்ளது. அந்த பள்ளியின் விதிகளின் படி, 97 சதவிகித்துக்கு கீழ் சார்ஜ் இருந்தால் தண்டனை வழங்கப்படுமாம்.

டிடென்ஷன் கொடுக்கப்பட்டாலும், அந்த மாணவி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியே விட்டுவிட்டார். ஆனால் கொடுக்கப்பட்ட தண்டனையை செய்து முடிக்காவிட்டால் டிடென்ஷன் அதிகரிக்கப்படும் என்று மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளனர். அதுவரை கண்டுக்கொள்ளாமல் இருந்த அந்த சிறுமியின் தாயும், இதற்கு பின்னர் தான் எதிர்த்து பேசியுள்ளார்.


பள்ளியிலிருந்து வந்த செய்தியால் தனது மகள் பயந்துள்ளதாகவும், இது குற்றமே இல்லாத பட்சத்திலும் தண்டனை கொடுக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்ல தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அவரது மகளின் டியூட்டருக்கு இது குறித்து கேள்வியெழுப்பி அனுப்பிய செய்திக்கும் எந்த பதிலும் வரவில்லையாம். ஆனால், பேட்டரியின் சார்ஜ் அளவு தற்போது 97 சதவிகிதத்திலிருந்து 90% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அந்த மாணவி தெரிவித்திருக்கிறார்.

Ipad
ஆனந்த் மகிந்திரா படித்த பள்ளி இதுதானா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com