உலகம் முழுவதும் விவாகரத்து என்ற விஷயம் அதிகமாக ஏற்படுகிறது. காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர்களால் நடத்தப்படும் திருமணமாக இருந்தாலும் சரி பிடிக்கவில்லை என்றால் பிரிந்து அவரவர் வாழ்க்கையை வாழ தொடங்கிவிடுகின்றனர்.
திருமணம் செய்த பின் தம்பதிகளிடையே சிறு சிறு பிரச்னைகள் உருவாகிறது, அது காலப்போக்கில் பெரிய பிரச்னையாக வெடிகிறது.
அதில் பெரும்பாலான பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும். தீர்க்கமுடியாத பிரச்னை நீதிமன்றம் வரை சென்று திருமணமான தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிவார்கள்.
அப்படி உலகில் அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
அரபு நாடுகளில் ஆண்டுதோறும் விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எகிப்தில் 1996 மற்றும் 2017 க்கு இடையில் 83% விவாகரத்து விகிதம் அதிகரித்துள்ளது.
உலகில் அதிக விவாகரத்து பெறும் நாடுகளில் அமெரிக்கா இடம்பெற்றாலும் சமீபத்திய ஆண்டுகளில் அதன் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. திருமணம் செய்யும் 1000 பேர்களில் 2.3 தம்பதிகள் விவாகரத்து பெறுகிறார்கள்.
கடந்த 100 ஆண்டுகளாக பின்லாந்தில் திருமணத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து குறைந்து வருகிறது. விவாகரத்து விகிதமும் அதிகரித்து வருகிறது.
உலகிலேயே அதிகம் விவாகரத்து ஏற்படும் நாடாக மாலத்தீவு உள்ளது. இங்கு திருமணம் செய்யும் 5.5% தம்பதிகள் விவாகரத்து பெறுகிறார்கள். இதனால் உலகிலேயே அதிகம் இந்த நாட்டில் விவாகரத்து நடக்கிறது.
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா கூட அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த நாட்டில் திருமணம் ஆகும் 100 பேர்களில் 3.9 பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.
ஐரோப்பாவின் பால்கன் நாடுகளில் ஒரு நாடாக இருக்கும் மால்டோவாவில் அதிகம் விவாகரத்து நடக்கிறது.
இங்கு தம்பதிகள் 100 பேர் திருமணம் செய்தால் 3.8 பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.
ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய நாடான சீனா விவாகரத்து பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இங்கு திருமணம் ஆகும் 100 தம்பதிகளில் 3.2 பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.
உக்ரைன் நாட்டில் திருமணம் ஆகும் 100 தம்பதிகளில் 2.9 பேர் விவாகரத்து பெறுகிறார்கள். உக்ரைன் நாடும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
கியூபா நாடும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.இந்த தீவு நாட்டில் திருமணம் ஆகும் தம்பதிகளில் 2.9% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.
இந்த பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை, மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் விவாகரத்து பெறும் விகதம் குறைவாகவே உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust