Suganuma : உலக பாரம்பரிய தளமான ’சுகனுமா’ கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிவது ஏன்?

4 தளங்களை கொண்டிருக்கும் இந்த வீடுகளின் தரை தளத்தில் விருந்தினர் அறையும் மேல் தளத்தில் படுக்கையறையும் அமைந்துள்ளது. இங்கு உள்ள பெரிய ஜன்னல்கள் மூலம் சுத்தமான காற்றை நீங்கள் சுவாசிக்கலாம். அதோடு பறவைகளின் சத்தம் அமைதியான நதிகளின் ஒசையினையும் அனுபவிக்கலாம்.
Suganuma Village
Suganuma VillageTwitter
Published on

நீங்கள் ஜப்பானுக்கு இன்ப சுற்றுலா செல்கின்றீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் சுகனுமா கிராமத்திற்கு செல்ல வேண்டும். அப்படி என்ன இருக்கின்றது இந்த கிராமத்தில்? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சுகனுமா கிராமத்தில் இயற்கை அழகு செழிப்பாக உள்ளது. குறிப்பாக , இங்கு ஓடும் ஷோ நதியின் சத்தம் இங்கு செல்பவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

இங்கு உள்ள காஸ்ஷோ பாணி வீடுகள் அமைப்பே வித்தியாசமாக இருக்கும். கூம்பு வடிவில் இரண்டு மேல் தளங்களுடன் கூரை அமைப்புடன் இருக்கும் வீடுகள் உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும்.

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கிராமத்தில் உள்ள மாடி கூரை வீடுகளில் தங்க சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

4 தளங்களை கொண்டிருக்கும் இந்த வீடுகளின் தரை தளத்தில் விருந்தினர் அறையும் மேல் தளத்தில் படுக்கையறையும் அமைந்துள்ளது.

இங்கு உள்ள பெரிய ஜன்னல்கள் மூலம் சுத்தமான காற்றை நீங்கள் சுவாசிக்கலாம். அதோடு பறவைகளின் சத்தம் அமைதியான நதிகளின் ஒசையினையும் அனுபவிக்கலாம்.

Suganuma Village
இந்த வார லாங் வீக் எண்டு விடுமுறைக்கு எங்கே செல்லலாம்? அட்டகாசமான ஸ்பாட்ஸ் இதோ!

தற்போது இந்த வீடுகளின் தளத்திற்கு ஏணி மூலமாகவே லிப்ட் மூலமாகவோ செல்லலாம். இந்த சுற்றுலாவினை Airbnb என்ற நிறுவனம் வழங்குகின்றது.

எப்படி செல்வது

டோக்கியோ நிலையத்திலிருந்து ஷின் தகோகா நிலையத்திற்கு ரயில் மூலம் செல்லவும். பிறகு ஸ்டேஷனிலிருந்து கோகயாமாவிற்கு ஒரு மணி நேர பயணத்தில் அழகிய சுகனுமா கிராமத்தை அடையலாம்.

மலைகள் பனிப்பொழிவு நதிகளின் சத்ததுடன் ஒரு அழகான சுக அனுபவத்தை நிச்சயம் சுகனுமா உங்களுக்கு கொடுக்கும்.

Suganuma Village
The Pink City: ஜெய்ப்பூர் முழுக்க பின்க் நிறம் பூசிய மன்னர்- ஏன் தெரியுமா? சுவாரஸ்ய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com