The Pink City: ஜெய்ப்பூர் முழுக்க பின்க் நிறம் பூசிய மன்னர்- ஏன் தெரியுமா? சுவாரஸ்ய வரலாறு

இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் ஜெய்ப்பூர். இதனை இரண்டாம் சவாய் ஜெய் சிங் என்ற மன்னர் நிறுவினார். இவரது பெயரே இந்த ஊருக்கு வழங்கப்படுகிறது. வித்யாதர் பட்டாச்சார்யா என்ற வங்காள கட்டடக்கலை நிபுணர் இந்த நகரை வடிவமைத்துள்ளார்.
The Pink City: ஜெய்ப்பூர் முழுவது பின்க் நிறம் பூசிய மன்னர்- ஏன் தெரியுமா? சுவாரஸ்ய வரலாறு
The Pink City: ஜெய்ப்பூர் முழுவது பின்க் நிறம் பூசிய மன்னர்- ஏன் தெரியுமா? சுவாரஸ்ய வரலாறுTwitter

ஜெய்ப்பூர் இந்தியாவின் பின்க் நகரம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள கட்டிடங்கள் டெரக்கோக்ட்டா பின்க் நிறத்தில் இருப்பது மட்டுமே இந்த பெயருக்கு காரணமல்ல. இதற்கு பின்னால் ஒரு வரலாறும் இருக்கிறது.

ஜெய்ப்பூர் தான் இந்தியாவில் முதன்முதலாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் எனக் கூறப்படுகிறது. இதனை இரண்டாம் சவாய் ஜெய் சிங் என்ற மன்னர் நிறுவினார். இவரது பெயரே இந்த ஊருக்கு வழங்கப்படுகிறது.

வித்யாதர் பட்டாச்சார்யா என்ற வங்காள கட்டடக்கலை நிபுணர் இந்த நகரை வடிவமைத்துள்ளார். இங்கு பல வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களும், கலாச்சார சின்னங்களும் இருக்கின்றன.

1727ம் ஆண்டு நிறுவப்பட்ட ஜெய்ப்பூரை பார்வையிட 1876ம் ஆண்டு வருகை தந்தார் இளவராசர் ஆல்பெர்ட்.

பிரிட்டிஷ் இளவரசரைக் கவருவதன் மூலம் தனிப்பட்ட முறையில் சலுகைகள் பெற்று பயன்பெற முடியும் என்பது கிட்டத்தட்ட எல்லா இந்திய மன்னர்களின் எண்ணமாகவும் இருந்தது.

அப்படி இளவரசரைக் கவர மன்னர் ஒரு திட்டம் தீட்டினார். அவருக்காக ஆல்பெர்ட் ஹால் என்ற கட்டடத்தை எழுப்பினார். மேலும் மொத்த நகரத்தையும் மீண்டும் வண்ணம் பூச வேண்டும் என்றார்.

அதற்காக தேந்தெடுக்கப்பட்ட நிறம் தான் டெரக்கோட்டா பின்க். இந்த நிறம் காலம்காலமாக விருந்தோம்பலைக் குறிப்பதாக பார்க்கப்படுகிறது.

The Pink City: ஜெய்ப்பூர் முழுவது பின்க் நிறம் பூசிய மன்னர்- ஏன் தெரியுமா? சுவாரஸ்ய வரலாறு
தார் பாலைவனம்: இன்னும் 100 ஆண்டுகளில் பசுமையான காடாக மாறுமா? - என்ன சொல்கிறது புதிய ஆய்வு?

இளவரசர் ஆல்பெர்ட் மட்டுமல்லாமல் இந்த நிறத்துக்கு இன்னொரு காரணமாக இருப்பவர் ராஜாவின் மனைவி. அவருக்கு டெரக்கோட்டா பின்க் நிறம் பிடிக்கும் என்பதனால் இந்த நிறத்தை மாற்றவில்லை.

ஹவா மஹால், நகர அரண்மனை, ஜந்தர் மந்தர், ஜைகர் கோட்டை போன்ற வரலாற்று நினைவுச் சின்னங்கள் பிங்க் நிறத்தில் இருப்பதைக் காணலாம்.

பின்னர் இந்த பின்க் நிறத்தைத் வைத்து நகரின் பெயர், தி பின்க் சிட்டி என்று அறிவிக்கப்பட்டது. 1877ம் ஆண்டு இதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. தனது பின்க் நிறத்தால் இன்றும் பலதரப்பட்ட சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது ஜெய்ப்பூர்.

The Pink City: ஜெய்ப்பூர் முழுவது பின்க் நிறம் பூசிய மன்னர்- ஏன் தெரியுமா? சுவாரஸ்ய வரலாறு
ராஜஸ்தான்: வெண்மை வழியும் நிலவு நிலம் - எப்படி உருவானது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com