Summer Vacation : சுற்றுலா செல்ல பணம் கொடுக்கும் வங்கிகள் - Special Offers தெரியுமா?

தங்குவது, பயணத்திற்கான டிக்கெட் புக் செய்வது, என்று பல செலவுகள் இருக்கும். இந்த செலவுகளை எல்லாம் எப்படி சமாளிப்பது, ஆஃபர்கள் இருந்தால் நல்லா இருக்குமே என்று கூகுளில் தேடிக்கொண்டிருகிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கானது.
Summer Vacation : சுற்றுலா செல்ல பணம் கொடுக்கும் வங்கிகள் - Special Offers தெரியுமா?
Summer Vacation : சுற்றுலா செல்ல பணம் கொடுக்கும் வங்கிகள் - Special Offers தெரியுமா?Twitter
Published on

கோடை விடுமுறைக்கு எங்கே செல்லலாம் என்று இந்நேரம் திட்டம் போட ஆரம்பித்திருப்பீர்கள்.

குடும்பத்துடன் எங்கே போகலாம் என்ற பிளானும் ரெடியாகி கொண்டிருக்கும். தங்குவது, பயணத்திற்கான டிக்கெட் புக் செய்வது, என்று பல செலவுகள் இருக்கும்.

இந்த செலவுகளை எல்லாம் எப்படி சமாளிப்பது, ஆஃபர்கள் இருந்தால் நல்லா இருக்குமே என்று கூகுளில் தேடிக்கொண்டிருகிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கானது.

சுற்றுலா மற்றும் பயணங்களை விரும்புவோருக்கு சில வங்கிகள் பயண கடன் அட்டைகளை வழங்குகிறது.

இவற்றின் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆஃபர்ஸ் கிடைக்கும். கோடை விடுமுறை பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் செலவினங்களைக் குறைக்கும் சிறந்த பயணக் கடன் அட்டைகள் குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

SBI - ஏர் இந்தியா கார்டு

பயணத் தேவைகளுக்காக ஸ்டேட் வங்கி, ஏர் இந்தியா இணைந்து இந்த கடன் அட்டையை வழங்குகிறது.

இதனை கொண்டு ஏர் இந்தியா போர்டல்கள் மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்யும் ஏர் இந்தியா டிக்கெட்டுகளில் ஒவ்வொரு ரூ.100க்கும் 30 ரிவார்டு புள்ளிகளைப் பெற முடியும். அதை வைத்து பயண கட்டணத்தில் சலுகை பெற முடியும்.

SBI மற்றும் IRCTC கார்டு

ஐஆர்சிடிசி-எஸ்பிஐ பிரீமியர் கார்டு என்ற பெயரில் கிடைக்கும். இந்த கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக்கு ரூ.1,499 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த கிரெடிட் கார்டு மூலம் ரயில்வே டிக்கெட் புக்கிங்கில் 1 சதவீதமும், விமான டிக்கெட் புக்கிங்கில் 1.8 சதவீதமும் சேமிக்கலாம்.

Summer Vacation : சுற்றுலா செல்ல பணம் கொடுக்கும் வங்கிகள் - Special Offers தெரியுமா?
அமெரிக்கா முதல் ஸ்பெயின் வரை: குடியேற இடமும் கையில் பணமும் கொடுக்கும் வெளிநாட்டு நகரங்கள்!

சிட்டி பேங்க்

இந்த வங்கி சிட்டி பிரீமியர் மைல்ஸ் கிரெடிட் கார்டை வழங்குகிறது.

இதன் மூலம், குறிப்பிட்ட சில உள்நாட்டு உணவகங்களில் 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இந்த அட்டைக்கு ஆண்டுக்கு ரூ.3,000 வரை கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி

இந்த வங்கி ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு EaseMyTrip கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது.

EaseMyTrip இணையதளம், ஆப்பில் செய்யும் ஹோட்டல் மற்றும் விமான முன்பதிவுகளில் முறையே 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.

Summer Vacation : சுற்றுலா செல்ல பணம் கொடுக்கும் வங்கிகள் - Special Offers தெரியுமா?
வெளிநாடு செல்கிறீர்களா? இந்தியர்கள் எந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com