Summer Special: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.4 லட்சமா? உலகின் காஸ்ட்லியான மாம்பழங்கள் இவை தான்!

இந்த பழங்களின் அரசனாக இருக்கும் மாம்பழத்தில், மிகவும் காஸ்ட்லியான மாம்பழம் எது தெரியுமா? உலகின் ஐந்து காஸ்ட்லியான மாம்பழங்கள் இதோ!
Summer Special: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.4 லட்சமா? உலகின் காஸ்ட்லியான மாம்பழங்கள் இவை தான்!
Summer Special: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.4 லட்சமா? உலகின் காஸ்ட்லியான மாம்பழங்கள் இவை தான்!canva
Published on

சம்மர் வந்துவிட்டால், நம் மைண்டில் தோன்றும் விஷயங்கள், வெயில், வியர்வை, சுற்றுலா, இளநீர், நுங்கு, அப்படியே மாம்பழமும் கூட.

சீசனல் ஃப்ரூட்டான மாம்பழம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே ஃபேவரட். சில மாம்பழங்கள் கற்கண்டு போல இனிக்கும், சிலவை புளிக்கும், சிலவை சுவையற்றதாக இருக்கும். எனினும், மாம்பழம் பிடிக்காது எனக் கூறுபவர் இல்லை.

பழமாக மட்டும் உட்கொள்ளாமல், இதனை ஜூஸ் ஆகவோ, தயிருடன் கலந்து மாங்கோ லஸ்ஸியாகவோ, புட்டிங் செய்தோ, பாயசம் செய்தோ, ஏதோ ஒரு வகையில் சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.

மாம்பழம், பழங்களின் அரசன் என்றுக் கூறப்படுகிறது. காரணம் இதிலுருக்கும் ஊட்டச்சத்துக்கள். வைட்டமின், மினரல்கள், நாற்சத்து, நீர்ச்சத்து என அனைத்தையும் தரவல்லது மாம்பழம்.

மாம்பழம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இதற்கு முன் ஒரு பதிவில் பகிர்ந்திரும்தோம். அதன் நற்குணங்கள் பற்றி காலம்காலமாக பேசிக்கொண்டிருக்கும்.

சரி இந்த பழங்களின் அரசனாக இருக்கும் மாம்பழத்தில், மிகவும் காஸ்ட்லியான மாம்பழம் எது தெரியுமா? உலகின் ஐந்து காஸ்ட்லியான மாம்பழங்கள் இதோ

கேசர்

தங்க நிறத்தில் இருக்கும் இந்த வகை மாம்பழம், நல்ல இனிப்பாக இருக்கும். இதில் குங்குமப் பூவின் வாசத்தை உணரலாம். இந்த வகை மாம்பழங்கள் பெரும்பாலும் குஜராத்தில் கிடைக்கின்றன.

கேசர் மாம்பழங்கள் தோராயமாக ஒரு கிலோ ரூ. 1200ல் இருந்து 1300 வரை இருக்கிறது

அல்போன்சோ

மாம்பழங்களே பழங்களின் அரசன் என்றால், மாம்பழங்களில் அரசன் இந்த அல்போன்சோ வகை மாம்பழங்கள். அதீத தித்திப்புடன் இருக்கும் இந்த மாம்பழம் கிரீம் போல இருக்கும்.

இந்த வகை மாம்பழங்கள் முதன்மையாக மகாராஷ்டிராவில் விளைவிக்கப்படுகிறது. இவற்றின் விலை கிலோவுக்கு ரூ.1000 முதல் 1200 வரை

Summer Special: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.4 லட்சமா? உலகின் காஸ்ட்லியான மாம்பழங்கள் இவை தான்!
"என்னிடம் இந்தியாவிலேயே கிடைக்காத மாம்பழங்கள் இருக்கின்றன; கிலோ 2.7 லட்சம்" - யார் இவர்?

தையோ நொ தமாகோ

வாயில் நுழையாத பெயர் கொண்டுள்ள இந்த மாம்பழங்கள் மிகவும் அரிதான வகை. அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் இவை அளவிலும் பெரியதாக இருக்கின்றன. இவை செந்தூரம் வகை மாம்பழங்களை விட சிவப்பாக இருக்கும்.

இந்த தையோ நொ தமாகோ ஒரு ஜோடி பழம் 4 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஜப்பானில் இதன் விலை 2.5 லட்சம்!

டாமி அட்கின்ஸ்

ஃப்ளோரிடாவில் விளைவிக்கப்படும் இந்த வகை மாம்பழங்களின் விலை இந்தியாவில் ஒரு பழம் ரூ.400 வரை. இவை சிவப்பும், பெரும்பாலும் வயலெட் நிறமும் கலந்ததாக இருக்கின்றன.

அமெரிக்காவில் இந்த வகை மாம்பழங்கள் மிகவும் பிரபலம். டாமி அட்கின்ஸ் மாம்பழம் அதன் அளவிற்கும், இனிப்பான சுவைக்கும் பெயர்பெற்றது

Summer Special: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.4 லட்சமா? உலகின் காஸ்ட்லியான மாம்பழங்கள் இவை தான்!
மாம்பழம் : அரசியல் முதல் ஆன்மிகம் வரை - 10 சுவாரஸ்ய தகவல்கள்!

மியாசாக்கி

இது தான் உலகிலேயே மிக மிக விலையுயர்ந்த மாம்பழங்கள். இவற்றின் விலை ரூ.2.7 லட்சம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள தையோ நொ தமாகோ அரிய வகை பழம் என்பதால், ஜப்பானில் விளைவிக்கப்படும் இந்த மியாசாக்கி மாம்பழங்கள் உலகின் கஸ்ட்லி மாம்பழமாக கருதப்படுகின்றன

Summer Special: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.4 லட்சமா? உலகின் காஸ்ட்லியான மாம்பழங்கள் இவை தான்!
தங்கத் தண்ணீர்: உலகின் காஸ்ட்லியான குடிநீரின் விலை என்ன? எப்படி தயாரிக்கப்படுகிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com