உடலுறவை விளையாட்டாக அறிவித்து, வரும் ஜூன் 8ஆம் தேதி இதற்கான சாம்பியன்ஷிப் நடத்தப்படும் எனக் கூறியுள்ளது ஸ்வீடன். இதன் மூலம் உடலுறவை விளையாட்டு என அங்கீகரித்த முதல் ஐரோப்பிய நாடாகிறது ஸ்வீடன்.
உடலுறவு, பாலியல் கல்வி, ஓரினச் சேர்க்கையாளர்கள் போன்ற விஷயங்களை வெளிப்படையாக மெல்ல பேச ஆரம்பித்திருக்கிறது இந்த சமூகம். இது தொடர்பான விழிப்புணர்வுகளும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சட்ட வழிவகைகளும் பல நாடுகளில் செய்யப்பட்டு வருகிறது, இந்தியாவும் அதில் ஒரு நாடாகும்.
எனினும் இவற்றைக் குறித்த பயங்களும், சந்தேகங்களும், பொதுப்படையாக பேசுவதற்கான தயக்கங்களும் நிலவி தான் வருகிறது. இந்நிலையில், உடலுறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளது ஸ்வீடன் நாடு.
உலகின் முதல் செக்ஸ் சாம்பியன்ஷிப் இன்னும் மூன்று நாட்களில், அதாவது ஜூன் 8ஆம் தேதியிலிருந்து நடைபெறவிருக்கிறது. இந்த ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் பல வாரங்களுக்கு நடக்கும் எனவும், ஒவ்வொரு நாளும் இதில் போட்டியாளர்கள் 6 மணி நேரத்துக்கு போட்டியிடுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளை ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷன் நடத்துகிறது. இந்த சாம்பியன்ஷிப்பில் மூன்று நடுவர்களும், பார்வையாளர்களும் போட்டியாளர்களுக்கு மதிப்பெண்களை வழங்குவார்கள், 5 முதல் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பவர்கள்,
இணையை கவர்தல், வாய்வழி உடலுறவு, பாடி மசாஜ்கள், சிற்றின்ப மண்டலங்களை ஆராய்தல், உடலுறவு, சகிப்புத்தன்மை உள்ளிட்ட 16 பிரிவுகளில் போட்டியிடுவார்கள். போட்டியாளர்களுக்கு 45 நிமிட கால அவகாசம் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க எந்த நாட்டவர்களும், எந்த பாலினத்தவர்களும் முன்வரலாம். ஓரினச் சேர்க்கையாளர்கள் போன்ற LGBTQ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் அனுமதி உண்டு.
முதற்கட்ட பதிவுகள் முடிவடைந்த நிலையில் 20 பேர் இந்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது போன்ற விளையாட்டுகளால் ஐரோப்பிய நாடுகளில் இது வளர்ச்சியின் முன்னெடுப்பாக இருக்கும் எனக் கூறுகின்றனர் சாம்பியன்ஷிப்பின் ஏற்பாட்டாளர்கள்.
இந்த ஜூன் மாதம் உலகளவில் ஆண்டுதோறும் பிரைட் மந்த் (pride month) என கொண்டாடப்பட்டு வரும் சமயத்தில் இந்த போட்டியை ஸ்வீடன் நாடு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust