உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்?

சிலருக்கு 15 நிமிடம் சிலருக்கு ஒரு மணி நேரம் ஆனால் அது அவர் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தது.
Sex
SexTwitter
Published on

உடலுறவில் இது இப்படித்தான் எனப் பொதுமைப்படுத்தி எந்த விஷயத்தையும் சொல்லிவிட முடியாது. தனிப்பட்ட நபர்களின் விருப்பங்கள், வெறுப்புகள், ரசனைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொருவருக்குமான செக்ஸ் வாழ்க்கை அமைய வேண்டும். அது புகார்கள் இல்லாமல் இருப்பின் ஆரோக்கியமானதாகக் கருதப்படும்.

இந்த உடலுறவு கால விஷயத்துக்கு வருவோம். சிலருக்கு 15 நிமிடம் சிலருக்கு ஒரு மணி நேரம் ஆனால் அது அவர் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தது.

ஹெல்த் லைன் மீடியா எனும் உடலுறவு சார்ந்த தகவல்களைக் கூறும் அமெரிக்க நிறுவனம், ஆணுறுப்பு - பெண்ணுறுப்பு இடையிடையிலான இன்டர் செக்ஸ் மட்டும் 13 நிமிடங்கள் நீடிக்கும் எனக் கூறியிருந்தது. ஆனால் அதில் மற்ற வகை உடலுறவு குறித்து எந்த தகவலும் சொல்லப்படவில்லை.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உடலுறவு நிபுணர் நடியா பொகொடி ஒரு செய்தி தளத்தில் பேசும் போது, 33 வினாடி முதல் மணிநேரங்கள் வரை ஆகலாம். அது தனி நபர்களைப் பொறுத்தது எனக் கூறினார்.

Sex
சுய இன்பம் செய்தால் முடி கொட்டுமா? - சந்தேகமும், விளக்கமும்!
Sex
SexNews Sense

அவரது ஆய்வில் சுவாரஸ்யமாக ஒரு விஷயத்தை அவர் கண்டறிந்ததாகக் கூறுகிறார். அதாவது, “ஆண்களை விடப் பெண்கள் தான் உச்சநிலையை அடைய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களாம். ஆனால் பொதுவாக ஆண்களுக்குத் தான் அதிகநேரம் தேவைப்படும்” என்றார்.

Sex
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

இது நிர்வாணப்படங்களின் விளைவாக இருக்கலாம் என அவர் கருதுகிறார்.

மேலும் அவர், “உடலுறவு என வரும் போது இங்கு நார்மல் என எதுவுமில்லை. சிலருக்கு ஒரு இரவு முழுவதும் செக்ஸ் நீடிக்கலாம், சிலர் சில நிமிடங்கள் முடித்துவுட்டு கதைப் பேசிக்கொண்டு படுத்துறங்களாம்” என்றார்.

Sex
உடலுறவு : ‘ஃபிங்கரிங்’ செய்வது என்றால் என்ன? | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com