எவரெஸ்ட் முதல் மகாலு வரை - உலகின் மிக உயரமான மலைகள் பற்றி தெரியுமா?

பூமியில் உள்ள 10 மிக உயரமான மலைகள் குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.
Tallest mountains in the world!
Tallest mountains in the world! Twitter
Published on

பிரமிக்க வைக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து புதிரான K2 வரை, பல பிரம்மாண்டமான மலைகளை பூமி உள்ளடக்கியுள்ளது. இந்த புவியியல் அதிசயங்கள் ஒவ்வொரு மலையேறுபவர்களின் கனவாக உள்ளது.

பூமியில் உள்ள 10 மிக உயரமான மலைகள் குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.

எவரெஸ்ட் சிகரம்

29,031.7 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் எவரெஸ்ட் சிகரம், பூமியின் உயரமான மலையாக கருதப்படுகிறது. இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் எவரெஸ்ட் மலை அமைந்துள்ளது

கே2 மலை

K2 அல்லது மவுண்ட் காட்வின்-ஆஸ்டன் என்பது பூமியின் இரண்டாவது மிக உயரமான சிகரமாகும். இது காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தான் மற்றும் சீனாவில் பரவியுள்ளது. K2 அதன் கணிக்க முடியாத வானிலைக்கு பெயர் பெற்றது. இதில் மலையேறுவது ஒரு சவாலான காரியமாகும்.

காஞ்சன்ஜங்கா

28,169 அடி உயரமுள்ள காஞ்சன்ஜங்கா, உலகின் மூன்றாவது உயரமான மலையாகும். இது நேபாளம் மற்றும் இந்தியாவின் எல்லையில் அமைந்துள்ளது.

லோட்சே

இது நான்காவது உயரமான மலையாகும். லோட்சே 27,940 அடி உயரத்தில் உள்ளது. இது நேபாளம் மற்றும் சீனாவுடன் (திபெத்) எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, அதுமட்டுமில்லாமல் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ளது.

மகாலு

உலக அளவில் ஐந்தாவது உயரமான மலையாக மகாலு உள்ளது. இது 27,838 அடி உயரத்தில் உள்ளது. இது நேபாளம் மற்றும் சீனாவின் (திபெத்) எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

சோ ஓயு

26,864 அடி உயரமுள்ள சோ ஓயு, உலகின் ஆறாவது உயரமான மலையாகும். இது இமயமலையின் ஒரு பகுதி, நேபாளம் மற்றும் சீனா (திபெத்) இடையே நிற்கிறது.

தௌலகிரி

தௌலகிரி I, 26,795 அடி உயரத்தில் ஏழாவது உயரமான மலையாகும். இது முற்றிலும் நேபாளத்தில் அமைந்துள்ளது.

மனஸ்லு

எட்டாவது உயரமான மலையான மனசுலு, 26,781 அடி உயரத்தில் உள்ளது. இது நேபாளத்தில் உள்ள மனசிரி இமாலயம் என்னும் மலைத்தொடரில் உள்ளது. மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் மனதின் சிகரம் என்னும் பொருள் தருவதாகும்.

Tallest mountains in the world!
சமணர் மலை: ஜிகர்தண்டா டு ஜில்லா - திரைப்படங்களில் வரும் மதுரையின் அடையாளம் பற்றி தெரியுமா?

நங்கா பர்பத்

நங்கா பர்பத், 26,660 அடி, மலையேறுபவர்களுக்கு சவால் விடும் புகழ் காரணமாக, 'கொலையாளி மலை' என்றும் அழைக்கப்படுகிறது.

Tallest mountains in the world!
Jibhi: இமாச்சலில் இருக்கும் இந்த Off Beat மலை கிராமத்தின் சிறப்பு என்ன?

அன்னபூர்ணா I

அன்னபூர்ணா I, 26,545 அடி உயரத்தில் இருக்கும் 10வது உயரமான மலையாகும். இமயமலைத் தொடரின் நேபாளம் நாட்டில் அன்னபூர்ணா என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com