சமணர் மலை: ஜிகர்தண்டா டு ஜில்லா - திரைப்படங்களில் வரும் மதுரையின் அடையாளம் பற்றி தெரியுமா?

சமணர் மலையில் தமிழ்-பிராமி எழுத்துக்களில் ஏராளமான கல்வெட்டுகள், கல் படுக்கைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளன, இவை அனைத்தும் பண்டைய தமிழ் பகுதியில் சமண மதம் குறிப்பிடத்தக்க அளவில் பரவி இருந்ததற்கான வரலாற்று சான்றுகளாக இருக்கின்றன.
சமணர் மலை: ஜிகர்தண்டா டு ஜில்லா - திரைப்படங்களில் வரும் மதுரையின் அடையாளம் பற்றி தெரியுமா?
சமணர் மலை: ஜிகர்தண்டா டு ஜில்லா - திரைப்படங்களில் வரும் மதுரையின் அடையாளம் பற்றி தெரியுமா?twitter

சமணர் மலை மதுரையில் உள்ள கீழகுயில்குடி என்ற கிராமத்தில் இருக்கிறது. சென்னை என்றாலே கத்திபாரா பாலத்தையும் மெரினா கடற்கரையையும் காட்டுவது போல மதுரை சார்ந்து எடுக்கப்படும் படங்களில் இந்த மலையை பேக் ட்ராபில் பயன்படுத்துவது சினிமாக்காரர்களின் வழக்கம்.

இந்த மலையில் சமண துறவிகளான கோமதேஸ்வரர், மகாவீரர், யக்ஷி மற்றும் யக்ஷா ஆகியோரின் உருவ கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு சமண துறவிகள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திய தட்டையான கற்களைக் காணலாம்.

 செட்டிபுடவு தளம் மற்றும் பேச்சிப்பள்ளம் தளம் ஆகிய இரண்டு இடங்கள் இங்கு முக்கியமானவை. இங்கு ஒரு காலத்தில் சமணப்பள்ளி செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கேமராவில் செதுக்கி வைத்தது போல அழகாக தெரியும் இந்த மலை 3 தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளது.

ஜிகர்தண்டா

2014ம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லக்‌ஷ்மி மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் சித்தார்த் லக்‌ஷ்மி மேனனுக்கு தாமரை ஒன்றை அளிக்கும் காட்சி வரும். அப்போது பேக் ட்ராப்பில் இந்த மலையைக் காணலாம்.

ஜகமே தந்திரம்

இதுவும் கார்த்திக் சுப்புராஜ் சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைந்து எடுத்த படம். இதில் தனுஷ், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, கலையரசன் மற்றுல் ஜேம்ஸ் கோஸ்மோ ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கும் தனுஷ் சில காலம் மட்டுமே மதுரையில் இருப்பார். அப்போது கோவிலில் நடனமாடும் காட்சியில் இந்த சமணர் மலை பின்னணியில் இருப்பதைக் காணலாம்.

சமணர் மலை: ஜிகர்தண்டா டு ஜில்லா - திரைப்படங்களில் வரும் மதுரையின் அடையாளம் பற்றி தெரியுமா?
மதுரை : 7 மலைகள், 70 ஏரிகளை கொண்ட இந்த கிராமத்தை பற்றி தெரியுமா? அடடே தகவல்

ஜில்லா

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்த திரைப்படம் ஜில்லா. கோவில் அருகில் இரண்டு ஆலமரங்கள் இருக்கும். அதில் ஒன்றன் கீழ் ஜில்லா படத்தின் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் மேற்பார்வையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது சமணர் மலை.

சமணர் மலை: ஜிகர்தண்டா டு ஜில்லா - திரைப்படங்களில் வரும் மதுரையின் அடையாளம் பற்றி தெரியுமா?
இமாச்சல் : மம்மி சங்கா முதல் காந்த மலை வரை - அவிழ்க்க முடியாத 5 மர்ம முடிச்சுகள் !

சமணர் மலையில் தமிழ்-பிராமி எழுத்துக்களில் ஏராளமான கல்வெட்டுகள், கல் படுக்கைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளன, இவை அனைத்தும் பண்டைய தமிழ் பகுதியில் சமண மதம் குறிப்பிடத்தக்க அளவில் பரவி இருந்ததற்கான வரலாற்று சான்றுகளாக இருக்கின்றன.

மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது சமணர் மலை!

சமணர் மலை: ஜிகர்தண்டா டு ஜில்லா - திரைப்படங்களில் வரும் மதுரையின் அடையாளம் பற்றி தெரியுமா?
Tadiandamol: கர்நாடகாவின் 3வது பெரிய மலை - ஒரு ட்ரெக் செல்லலாமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com